என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
சினிமா
Published:Updated:

அன்னக்கிளி மனசுக்குள்ள மழையாம்!

நா.கதிர்வேலன்படங்கள் : ஜி.வெங்கட்ராம்

##~##

மிஸ் கார்த்திகாவுக்கு விடுத்த அழைப்பு மிஸ்டு கால் ஆனது. இரண்டே நிமிடங்களில் 'ஹாய்... ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோ வுல ஷூட்டிங். ஜூனியர் என்.டி.ஆரோடு டூயட். லஞ்ச்ல பேசலாம்!’ என்று எஸ்.எம்.எஸ். மின்னியது. வாக்குத் தவறவில்லை ராதா மகள்!

 ''அவ்வளவு பெரிய ஹிட் 'கோ’. தமிழ்ல ஹீரோயின்களுக்கும் பஞ்சம். ஆனா, சான்ஸை மிஸ் பண்ணிட்டு, தெலுங்குப் பக்கம் ஒதுங்கிட்டீங்களே?''  

''என்னை என்ன அவ்வளவு தத்தின்னு நினைச்சீங்களா? வழக்கமான பதிலா இருக்கும். ஆனா, வேற சாய்ஸ் இல்லை... நிறைய ஸ்க்ரிப்ட் கேட்டேன். எதுவும் எனக்குப் பிடிக்கலை. காத்துட்டே இருந்தேன். அப்போதான் மலை யாளத்தில் 'ரவிவர்மா’னு ஒரு நல்ல ஸ்க்ரிப்ட் வந்தது. சந்தோஷ் சிவனோடு நடிச்சேன். என் வயசுக்கும் அனுபவத்துக்கும் இது ரொம்பவே ரிஸ்க்கான கேரக்டர். ஆனா, இப்போ கேரளாவில் எங்கே போனாலும் கிடைக்கிற மரியாதை சந்தோஷமா இருக்கு. இப்போ ஜூனியர் என்.டி. ஆரோடு நடிக்கிற தெலுங்குப் படத்தில் எனக்கு ராயலான கேரக்டர். படம் பேர் 'தம்மு’. ஆந்திரா வில் இந்த வருஷத்தோட பெரிய படமா இருக் கும்னு எதிர்பார்ப்பு. அவ்வளவு பெரிய பட்ஜெட். இதேபோல தமிழ்லயும் ஒரு படத்துல கமிட் ஆகி இருக்கேன். சொன்னா நம்ப மாட்டீங்க... ஆனா, வேணாம். சஸ்பென்ஸ்!''

அன்னக்கிளி மனசுக்குள்ள மழையாம்!

''அட! சும்மா சொல்லுங்க?''

''அம்மாவை அறிமுகப்படுத்துன பாரதிராஜா சார் படத்துல புக் ஆவேன்னு நினைக்கிறேன். 'அன்னக்கிளியும் கொடிவீரனும்’ படத்துல அநேகமா நான்தான் அன்னக்கிளி. இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. ஆனா, கிட்டத்தட்ட கன்ஃபார்ம் ஆன மாதிரிதான். அன்னக்கிளி நிச்சயம் என் லைஃப் டைம் கேரக்டரா இருக்கும்!''

''உங்க தங்கச்சியும் நடிக்க வர்றாங்களாம்... வீட்டுக்குள்ள இருந்தே போட்டியா?''

''அச்சோ... துளசி ரொம்ப சின்னப் பொண்ணு. இப்போ நைன்த் படிக்கிறா. நிச்சயம் ஒரு ஆக்டருக்கான மெச்சூரிட்டி அவளுக்கு இப்போ கிடையவே கிடையாது. அவள் நடிகையானால் நிச்சயம் சந்தோஷப்படுற முதல் ஆள் நான்தான். ரொம்ப அழகா இருப்பா. அதைவிட ரொம்பவே துறுதுறு. துளசிக்கு முன்னாடி விக்னேஷ்னு லெவன்த் படிக்கிற ஒரு தம்பி இருக்கான். அவனும் ஸ்மார்ட். யாருக்குத் தெரியும்... அவனும் சினிமாவுக்கு வந்தாலும் வரலாம்!''

''கார்த்திகாவுக்கு வேற என்னலாம் பிடிக்கும்?''

''மியூஸிக்... மியூஸிக்... மியூஸிக்! எல்லா இசையமைப்பாளர்களின் பெஸ்ட் கலெக்ஷனும் என் பெட்ரூமில் இருக்கு. அப்புறம் பரதநாட்டியம்! சினிமா ஷூட்டிங் எவ்வளவு டைட்டா இருந்தாலும் டான்ஸ் பிராக்டீஸை மிஸ் பண்ணவே மாட்டேன். இப்போகூட சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் கலந்துக்க தீவிர பயிற்சியில் இருக்கேன். பத்மா சுப்பிரமணியம் மாதிரி ஜாம்பவான்கள் ஆடிய இடத்தில் நானும் ஆடப் போறேன்னு நினைச்சாலே மனசுக்குள் மழை பெய்யுது!''