என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
சினிமா
Published:Updated:

ஹீரோக்கள் மட்டும்தான் உடம்பை ஏத்தி இறக்கணுமா?

ம.கா.செந்தில்குமார்படங்கள் : கே.ராஜசேகரன்

##~##

'' 'அங்காடித் தெரு’ அளவுக்கு 'எங்கேயும் எப்போதும்’ படத்தில் என் கேரக்டருக்கு செம ரெஸ்பான்ஸ். இப்பவரைக்கும் மொபைல் ரிங் அடிச்சுக் கிட்டே இருக்கு. பாலுமகேந்திரா சாரைப் பார்த்தப்ப, 'இப்ப இருக்கிற ஹீரோயின்ஸ்ல எனக்குப் பிடிச்சது நீதான்!’னு சொன்னார். இதைவிட வேற என்ன சந்தோஷம் வேணும்?'' - எக்கச்சக்க சந்தோஷத்தில் பேசுகிறார் அஞ்சலி.  

 ''சில சமயம் ஒல்லியாத் தெரியுறீங்க. திடீர்னு வெயிட் போட்டுடுறீங்க. என்ன பிளான்?''

''ஹீரோக்கள் மட்டும்தான் உடம்பை ஏத்தி இறக்கணுமா? நாங்களும் கேரக்டருக் காக மெனக்கெடுவோம் சார். 'கருங்காலி’ படத்தில் எனக்கு மெச்சூர்டான ஃபேமிலி கேர்ள் கேரக்டர். 'குட்டிப் பொண்ணுக்கு புடவையைச் சுத்திவிட்ட மாதிரி இருக்கு. கொஞ்சம் வெயிட் போடு’னு களஞ்சியம் சார் சொன்னார். அதனால், வெயிட் ஏத்தினேன். 'எங்கேயும் எப்போதும்’ படத்தில் நர்ஸ் கேரக்டர். தினமும் வீட்ல இருந்து நடந்தே ஹாஸ்பிட்டல் போற பொண்ணு. கண்டிப்பா குண்டா இருக்க மாட்டாங்கனு வெயிட்டைக் குறைக்கச் சொன்னாங்க. மூணு மாசம் டைம் கேட்டு வெயிட் குறைச்சேன்!''

ஹீரோக்கள் மட்டும்தான் உடம்பை ஏத்தி இறக்கணுமா?

''சின்ன ஹீரோ, பெரிய ஹீரோனு எந்த வித்தியாசமும் இல்லாமல் நடிக்கிறீங்களே?''

ஹீரோக்கள் மட்டும்தான் உடம்பை ஏத்தி இறக்கணுமா?

''கதை, அதில் என் கேரக்டர் என்னன்னு மட்டும்தான் நான் பார்ப்பேன். ஹீரோ யார்னுகூடப் பார்க்க மாட்டேன். அஞ்சலி மட்டும்தான் இப்படி வெரைட்டியா ரோல் பண்றாங்கனு சொல்றதைப் பெருமையா நினைக்கிறேன். நல்லா அறிமுகமான ஹீரோவுடன் ஒரு படம், அடுத்து என் கேரக்டருக்கான படம், திரும்பி ஹீரோ படம்னு பண்ணும்போதுதான் என் கிராஃபை கரெக்ட்டா மெயின்டெய்ன் பண்ண முடியும். மத்தபடி, பெரிய ஹீரோ படங்களில் மட்டும்தான் நடிப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா, இந்த கிராஃப் விழுந்துடும். ஒரே இடத்தில் நின்னுடக் கூடாதுங்க!''

''அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால்னு கிளாமர்ல பின்னி எடுக்கிறாங்களே?''

''நீங்க சொல்ற அதே அனுஷ்காதான் 'அருந்ததி’, 'வானம்’ படங்களில் கேரக்டர் ரோல் பண்ணினாங்க. இப்ப சமீபமா நான் கவனிச்ச வகையில் கிளாமர் டால்ஸ் எல்லாரும் பெர்ஃபார்ம் பண்ணணும்னு ஆசைப்படுறாங்க. ஏன், த்ரிஷாவையே எடுத்துக்

ஹீரோக்கள் மட்டும்தான் உடம்பை ஏத்தி இறக்கணுமா?

குங்க, 'விண்ணைத் தாண்டி வருவாயா’ பண்ணினாங்களே... அக்கரைக்கு இக்கரை பச்சை. அவ்வளவுதான்!''

'' 'அரவான்’ல கெஸ்ட் ரோல்ல நடிக்கிறீங்க போல?''

''அது வசந்தபாலன் சாருக்காக!  'அங்காடித் தெரு’ மூலமா எனக்குப் பெரிய பிரேக் தந்தவராச்சே. 'எங்கேயும் எப்போதும்’ பார்த்துட்டு, ''அங்காடித் தெரு’ நான்தான் எடுத்தேன். இருந்தாலும் சொல்றேன்... அதைவிட சூப்பராப் பண்ணியிருக்க. உன்னோட சிறந்த படம் இதுதான். நல்ல நடிகைனு தொடர்ந்து நிரூபிச்சுட்டே இருக்கே. கலக்கு!’ன்னார். சந்தோஷமா இருந்தது!''