என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
சினிமா
Published:Updated:

யார் அழகன்... யார் அழகி?

க.நாகப்பன்

##~##

''கறுப்பா இருக்கலாம்; சிவப்பா இருக்கலாம்; ஆணா இருக்கலாம்; பெண்ணா இருக்கலாம்; குட்டையா இருக்கலாம்; நெட்டையா இருக்கலாம்; அழகு முக்கியம் இல்லை. ஆர்வம் மட்டும் போதும். உங்கள் முகம் பிரபலமானதும் உலகம் முழுக்க வரவேற்கப்படும். உங்கள் கையெழுத்தை ஆட்டோகிராஃப் ஆக்கலாம்!'' - மூச்சுவிடாமல் பேசுகிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.  ''என்னடா லேகியம் விக்கிறவன் மாதிரி பேசுறானேனு பார்க் கிறீங்களா? தாழ்வுமனப்பான்மையில சிக்கித் தவிக்கும் ஒவ்வொருத்தரையும் உசுப்புற மாதிரி ஒரு கதை பண்ணஆசைப் பட்டேன். கனிவும், பணிவும், தன்னம்பிக்கை யும் நேர்மையும் யாருக்கு இருக்கோ... அவன்தான் அழகன். அவள்தான் அழகி. தமிழகம் முழுக்கத் தன்னம்பிக்கையை விதைக்கப்போற படம் சார் இது!''- நம்பிக்கையாகத் தொடர்கிறார்.  

 ''அது என்ன 'அழகன் அழகி’?''

யார் அழகன்... யார் அழகி?

''டி.வி. சேனல் ஒரு ஷோ நடத்துது. அதுக்காக, சென்னையில இருந்து தமிழ் நாடு முழுக்க யூனிட் பயணம் செய்யுது. வழியில் அவங்க சந்திக்கிற  சுவாரஸ்யமான மனிதர்கள்தான் கதை. பாம்பு டான்ஸ் ஆடும் திருநங்கை, சாதிப் பிரச்னையில் ரெண்டு சாதி மக்களும் அவங்கவங்க இடங்களிலேயே  பிணத்தை எரிப்பதால், வேலை இல்லாமத் தவிக்கிற மயானத் தொழிலாளி,  போலீஸால் பாதிக்கப்பட்ட நக்சலைட்டுகள், தன்னம்பிக்கையோடு பேசும் ஊனமுற்ற இளைஞர்கள், நாட்டுப் புறப் பாட்டில் தன் உயிர்மூச்சைப் பிடிச்சு வெச்சிருக்கிற பாட்டி, எம்.ஜி.ஆர். மாதிரியே வேஷம் போட்டு வாழ்றவர்னு யதார்த்தத் தில் நம்மைக் கடந்து போகிற அத்தனை பேரையும் அறிமுகப்படுத்துறோம். இதுல யார் அழகன், அழகினு சொல்றோம். இது முழுக்க முழுக்கத் தமிழகத்தின் பிரதிபலிப்பா, பதிவா இருக்கும்!''  

''ஹீரோ, ஹீரோயின் புதுசா பளிச்னு இருக்காங்களே?''

''ஹீரோயின் ஆருஷி ஒரு கன்னடப் படத்தில் விஷ்ணுவர்தனுக்கும் சுஹாசினிக் கும் பொண்ணா நடிச்சவங்க. படத்தைப் பார்த்தபோதே 'இவங்கதான் அழகி’னு முடிவு பண்ணிட்டேன். மூணு மாசம் தமிழ் டியூஷனுக்குப் பிறகு, பிரமாதமா நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஹீரோ ஜாக் 'மிஸ்டர் மெட்ராஸ் சூப்பர் மாடல்’ பட்டம் வாங்கினவர். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்குமே தமிழில் இதுதான் முதல் படம்கிற மாதிரியே தெரியாது. உண்மையைச் சொல்லணும்னா, அவங்க ரெண்டு பேருமே நிஜமான 'அழகன் அழகி’.''

யார் அழகன்... யார் அழகி?

''படத்தில் என்ன ஸ்பெஷல்?''

யார் அழகன்... யார் அழகி?

''எப்பவும் பாட்டுக்குத்தான் விசில் அடிப்பாங்க. நாங்க விசில் சவுண்டுல ஒரு பாட்டையே கம்போஸ் பண்ணி இருக்கோம். நிறைய இடங்கள்ல சினிமா ஷூட்டிங்னு சொல்லாம டி.வி. ஷோனு சொல்லி ஷூட் பண்ணி இருக்கோம். மக்கள் எல்லாம் டி.வி-யில் வரப் போறோம்னு நம்பிக் காத்துட்டு இருக் காங்க. முன்னாடி 'இந்தி படி’, 'இங்கிலீஷ் படி’னு குழந்தைகள்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தோம். இப்போ 'டி.வி. ஷோவில் ஜெயிக்க, பாட்டுப் படி’னு சொல்றோம். இது பரிணாம வளர்ச்சியா... இல்லை, வீழ்ச்சியாங்கிற கேள்விக்கு படத்தில் பதில் இருக்கு!''  

''உ

யார் அழகன்... யார் அழகி?

ங்களுக்குப் பின்னாடி வந்தவங்க  தடதடனு தமிழ் சினிமாவுல உயரங்களைத் தொட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்காங்க? இதை எப்படிப் பார்க்குறீங்க?''

''எல்லாருமே படத்துக்கு ஒரே மாதிரி உழைப்பைத்தான் தர்றோம். கடலில் மூழ்கி முத்துஎடுக்க ஆசைப்படறோம். முத்தா, சிப்பியானு தெரியாம தினமும் முத்து கிடைக்கப் போராடுறவனும் டைரக்டரும் ஒண்ணு. சின்னச் சின்ன சந்தேகங்களைத் தீர்த்து, திருப்தி வர்ற வரைக்கும் உழைக்கிறோம். கிரிக்கெட் ஆடினா சிக்ஸர் அடிக்கத்தான் ஆசைப்படுவோம். எல்லாருக்கும் எல்லா நேரமும் வாய்ப்பு கிடைச்சுடாது. எனக்கு இப்போ சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு வந்திருக்கு!''