`கால் முறிந்துவிட்டார் கமல்’ என்றதும் துடித்துப்போனேன். முதலில் சிறுவிபத்து என்றே எண்ணினேன். காயம் பெரியது என்றதும் கலங்கியேபோனேன். நானறிந்த மருத்துவ அறிக்கை, அதை ‘compound fracture’ என்றது. அது வலிமையானது; வலி மிகுந்தது.

ஓர் உயிரின் இன்பத்தை நம் சொந்த உடல் வழியேதான் துய்க்க வேண்டும். ஆனால், இன்னோர் உயிரின் துன்பத்தை அதை அனுபவிக்கும் உடலுக்குள் புகுந்துதான் உணர வேண்டும். கால் முறிந்த வேளையில் கமல் எவ்வளவு துடித்திருப்பார் என்பதை, அவர் நிலையில் என்னுடலை நிறுத்தி ஓரளவு உணர்ந்துகொள்ள முடிந்தது.

தவறி விழுந்துவிட்டோம்; கால் முறிந்திருக்கிறது என்ற செய்தி, மூளைக்குச் சென்று சேரும் வரைக்குமான அந்த நொடித்துளி மட்டும்தான், அவர் வலியை உணர்ந்திருக்க மாட்டார். மூளைக்குச் செய்தி சேர்ந்த மறுநொடி முதல் அவர் உடலும் உயிரும் எப்படித் துடித்திருக்கும் என்பதை, கற்பனைசெய்வதும் கடினம்தான்.

இன்பம் என்பது இந்த உடலுக்குள் தவணை முறையில் தரப்படுகிறது; மொத்தமாகத் தரப்படுவது வலிதான். வேதத்தில் ஒரு வரி உண்டு... `மனிதன் அஞ்சுவது மரணத்துக்கு அல்ல; மரண அவஸ்தைகளுக்குத்தான்.’ என்னைப் பொறுத்தவரையில் பாசம் ஒரு பலவீனம்தான். பழகிய உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஏதேனும் ஒன்று என்றால், இதயம் பொறுப்பது இல்லை. ‘என் கண்ணால் பார்த்த யாரும் எனக்கு முன்னால் போக வேண்டாம்’ என்ற வரியை எழுதியது, அந்தப் பலவீனம்தான்.

அவருக்கும் எனக்கும் 36 ஆண்டுகால நட்பு. `களத்தூர் கண்ணம்மா’ பார்த்தபோது, ‘யார் அந்தச் சிறுவன் என்னிலும் திறமையானவன்?’ என்று கால்சட்டை இடுப்பில் நிற்காத காலத்திலேயே பொறாமைப்பட்டிருக்கிறேன். `சலங்கை ஒலி’யில் அவர் நடனம் கண்டு அவரைக் கட்டித்தழுவிப் பாராட்டியிருக்கிறேன். நடனமாடிய கால்கள் இன்று நடமாட முடியாமலா? உடனே பார்க்க வேண்டும் என்று மருத்துவ நண்பர்கள் மூலம் செய்தி அனுப்பினேன். கொஞ்ச நேரத்தில் எனக்குக் குறுஞ்செய்தி வந்தது.

தாங்கள் நலம் விசாரித்த செய்தி கிடைக்கப்பெற்றேன். கூடியவிரைவில் சந்திக்கலாம். நேற்றுதான் சர்ஜரி முடிந்தது. வலியின் அளவளாவ சில தினங்கள் ஆகும்.

அன்புடன் கமல்ஹாசன்

சின்னதாய் ஆறுதல் அடைந்தேன்.

`காயம் பெரியதுதான்; ஆனால் கலங்க வேண்டாம்’ என்றார்கள் மருத்துவ நண்பர்கள். சில நாட்களுக்குப் பிறகு தொலைபேசியில் கமல் அழைத்தார். அவர் குரல் கேட்டதும் என் குரல் வற்றிவிட்டது. தன் தொண்டைச் செய்யவில்லை என் தொண்டை; கவலையின் வலைகள் குரல்வளையைப் பின்னிக்கொண்டன. சிகிச்சை குறித்தும் தன் நிலை குறித்தும் அவர் பேசிக்கொண்டே இருந்தார். அவர் குரலில் வறண்ட வானிலையே காணப்பட்டது.

எலும்பு முறிந்தபோதும் அவர் நகைச்சுவை மட்டும் உடைந்துபோகவில்லை. ‘ஏசுநாதர் போல கால் மட்டும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்’ என்றார் குறும்பு குறையாமல். ‘நல்லவேளை... நான் `ஆலயமணி' சிவாஜியாகாமல் தப்பித்தேன்’ என்று சிரித்துக்கொண்டார். தலையும் முதுகெலும்பும் நொறுங்காத வரையில் எந்த உறுப்பையும் சீர்செய்ய மருத்துவ உலகம் மேம்பட்டிருக்கிறது நம்பிக்கையோடிருங்கள்; நலமடைவீர்கள்’ என்று வாழ்த்தினேன். விரைவில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தேன். இதன் பிறகுதான் நாளொரு குறுஞ்செய்தியாக எங்கள் நாட்கள் நகர்ந்தன.

மரபணுக்கள் தந்த கட்டுடல்; மருத்துவம் வளர்த்த தொழில்நுட்பம்; உழைப்பால் பெற்ற உறுபொருள்; உறுதியில் பழுத்த உள்ளம்... இவை நான்கும் கூடி உங்களை நலமாக்கும். மீண்டுவாருங்கள். திரையுலகை இன்னும் அரை நூற்றாண்டு ஆண்டு வாருங்கள்.

- உங்கள் ரசிகன் வைரமுத்து

என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

சில மணி நேரத்தில் அவரிடம் இருந்து மறுஅஞ்சல் வந்தது. நலம் தரும் காரணங்கள் நான்கு அல்ல; நம் நட்பையும் சேர்த்து ஐந்து என்ற பொருளில் வெண்பா வடிவத்தில் வடித்து அனுப்பியிருந்தார்; வியந்துபோனேன். நான் என்னதான் முயன்றாலும் கமல்போல் ஒரு காட்சி நடிக்க முடியாது. ஆனால், கமல் கொஞ்சம் முயன்றால், நல்ல கவிஞராகிவிட முடியும். அவர் அனுப்பிய மறுமொழியை ஊன்றிப் பார்த்தேன்.

நாலும் நற்றுணைதான் நலம்பெற்று நடப்பதற்கு மேலும் ஒன்றிருக்க மறந்துவிட்டீர் - காலும்நலமாகக் காலமும் கைகூடநம்தோழமையும் தான் துணை

- அன்புடன் கமல்

வெண்பா வடிவத்தில் முயன்றிருக்கிறார். ஆனால், தளைதட்டுகிறதே என்ற பண்டிதக் கவலை படிந்தது எனக்குள். சிறிய திருத்தம் ஒன்று செய்தேன். திருத்துவதோ அவரைச் சற்று வருத்துவதோ என் நோக்கம் அல்ல. இந்தக் கவிதை உரையாடல் அவர் காயம் தடவும் மயிற்பீலியாகட்டுமே என்றே மறுமொழி விடுத்தேன்.

“நான் விரும்பும் நண்பா நன்முயற்சி உம் வெண்பாஅழகு தமிழ் களைக்கட்டுகிறது ஆனாலும் ஆங்காங்கே தளைதட்டுகிறது பொருத்தம் பார்த்துத் திருத்தம் செய்துள்ளேன் வருத்தம் வேண்டாம். உங்கள் வெண்பா இப்படி இருப்பின் தப்படி இல்லை.

நாலும் துணையாகும் நான்நடக்க என்றீரே மேலும் ஒருகருத்து மிச்சமுண்டு – நாளுமேஆழமாய் வேரோடி ஆல்போல் தழைத்தநம் தோழமையும் தானே துணை!

வெண்பாவைப்போல் நீங்களும் விரைவில் குணம்பெற வாழ்த்துகிறேன்

- அன்பு வைரமுத்து

விடுவாரா கமல்? நீங்கள் அம்பு எய்யவில்லை; என் மீது அன்பு எய்திருக்கிறீர்கள். மகிழ்கிறேன்! என்ற பொருளில் எனக்கு அவர் மறுமொழி அனுப்பினார்.

இந்தியாவின் பெருங்கலைஞன் - அரை நூற்றாண்டுக்கு மேல் தன் கலைத்தொழில் மூலம் சமூகத்துக்கு உற்சாக ஊக்கியாகத் திகழும் அருங்கலைஞன் நன்கு நலமுற்று வருகிறார் என்று அண்மைத் தகவல்கள் அறிவிக்கின்றன. நெஞ்சு கொஞ்சம் நிம்மதியடைகிறது.

வந்துசேருங்கள் கமல் அவர்களே...

தமிழ் சினிமா நடக்க வேண்டாமா?