என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
சினிமா
Published:Updated:

நித்தியானந்தா என் எதிரி அல்ல!

இரா.வினோத்படம் : ஜஸ்டின்

##~##

சின்னத்திரையில் செம ஹிட்டடித்த நித்தியானந்தா - ரஞ்சிதா வீடியோ, சீக்கிரமே வெள்ளித் திரையில் 'சத்தியானந்தா’ என்கிற பெயரில் சூடு கிளப்ப இருக்கிறது. 'படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது’ என்று நித்தியானந்தா தரப்பில் நீதிமன்றத்தில் தடை வாங்கி இருக்க, இன்னொரு பக்கம் பரபரப்பாக ஷூட்டிங் நடத்திக்கொண்டு இருக்கிறார் கன்னட டைரக்டர் மதன் பட்டேல். ரஞ்சிதா கதாபாத்திரத்தில் பலரும் நடிக்க மறுக்க, ஆர்வமாகச் சம்மதித்தவர் அனுகி. அழகிய இத்தாலி இறக்குமதி.

''அனுகி பத்தித் தெரிஞ்சுக்கலாமா?''

''இத்தாலியில் நான் மரியா ஜெர்லின். இந்தியாவுக்காக அனுகி. 19 வயசு விளம்பர மாடல். இத்தாலியில் நிறைய விளம்பரங்கள் பண்ணியிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு ஒரு அழகு சாதன கம்பெனி விளம்பரத்தில் நடிக்கக் கூப்பிட்டாங்க. இந்தியாவுக்குப் பறந்து வந்துட்டேன்!''

நித்தியானந்தா என் எதிரி அல்ல!

''அனுகிக்கு இந்திய சினிமாபத்தி என்ன தெரியும்?''

''தினமும் டி.வி. பார்க்கிறேன். நிறைய சினிமா புத்தகங்கள் படிக்கிறேன். இந்தி படங்களைத் தேடிப் பிடிச்சுப் பார்த்துட்டு இருக்கேன். நான் சினிமாவுக்குத்தான் புதுசு. ஆனா, விளம்பரத்துக்கு பழகின பெண்தான். இரண்டு வருஷமா ஷாரூக், அக்ஷய், சஞ்சய் தத்கூட விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். அதனால், இந்திய சினிமாபத்தி ஓரளவு தெரியும். 'சத்தியானந்தா’ படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, இங்கிலீஷ்னு ஆறு  மொழிகளில் ரிலீஸாகுது. படம் ரிலீஸ் ஆன பின்னாடி நான்தான் ஆல் இண்டியா ஃபிகர்!''

நித்தியானந்தா என் எதிரி அல்ல!

''பலர் நடிக்க மறுத்த கேரக்டரில் நீங்க தைரியமா நடிச்சிருக்கீங்களே?''

'ஆமா. நான் ரொம்ப தைரியமான பொண்ணு. என் ஃப்ரெண்ட்ஸ்கூட, 'நீ அந்தப் படத்தில் நடிக்காதே. நித்தியானந்தா செய்வினை செஞ்சிடுவார்’னு பயமுறுத்தினாங்க. ஆனா, நான் பயப்படலை!''

''ரஞ்சிதாவிடம் பேசினீங்களா?''

'

நித்தியானந்தா என் எதிரி அல்ல!

'ஒண்ணு தெரியுமா? இந்தக் கதையில் முதல்ல அவங்கதான் நடிக்கிறதா இருந்ததாம். அப்புறம் வேணாம்னு சொல்லிட்டாங்க. நான் நடிக்கிறதா நியூஸ் பார்த்ததுமே எனக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்பினாங்க. எப்படி நடிக்கணும், பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கணும்னு நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க. ரஞ்சிதா என் பெஸ்ட் ஃப்ரெண்ட்!''

''எப்போ தமிழுக்கு வரப்போறீங்க?''

''கூடிய சீக்கிரமே. ரஜினி சார்கூட நடிக்க ஆசையா இருக்கு. இப்போதைக்கு வாய்ப்பு கிடைக்காதுனு தெரியும். சாரைக் கேட்டதா சொல்லுங்க!''