Published:Updated:

“அஜித் ஓ.கே சொன்னா நாளைக்கே ஷூட்டிங்!”

“அஜித் ஓ.கே சொன்னா நாளைக்கே ஷூட்டிங்!”
பிரீமியம் ஸ்டோரி
“அஜித் ஓ.கே சொன்னா நாளைக்கே ஷூட்டிங்!”

கார்க்கிபவா, பா.ஜான்ஸன், படம்: பா.காளிமுத்து

“அஜித் ஓ.கே சொன்னா நாளைக்கே ஷூட்டிங்!”

கார்க்கிபவா, பா.ஜான்ஸன், படம்: பா.காளிமுத்து

Published:Updated:
“அஜித் ஓ.கே சொன்னா நாளைக்கே ஷூட்டிங்!”
பிரீமியம் ஸ்டோரி
“அஜித் ஓ.கே சொன்னா நாளைக்கே ஷூட்டிங்!”
“அஜித் ஓ.கே சொன்னா நாளைக்கே ஷூட்டிங்!”

``ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாவெச்சு படம் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை. என்கிட்ட இருக்கும் கதைகள் எல்லாமே ஹீரோக்களுக்கானது. அப்போதான் `மௌனகுரு' படம் ஞாபகம் வந்தது. `இந்தக் கதையை, ஒரு பெண்ணை மையமாவெச்சு பண்ணினா எப்படி இருக்கும்?'னு யோசிச்சேன். அப்படி ஆரம்பிச்சதுதான் `அகிரா'.''

கோலிவுட்டின் `மௌனகுரு', பாலிவுட்டின் `அகிரா' ஆன கதையை விவரிக்கத் தொடங்குகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ``இந்தியில் `அகிரா' ரிலீஸுக்கு ரெடி, மகேஷ் பாபுவுடன் ஒரு படம் என அடுத்த ரவுண்டுக்கு `ஐ யம் வெயிட்டிங்' '' எனச் சிரிக்கிறார்.

``அருள்நிதிக்கு பதிலா சோனாக்‌ஷி சின்ஹா. எப்படி?”

``ஒரு பெண்ணா இருந்தா, இந்தக் கதையில என்னென்ன மாற்றம் பண்ணவேண்டியிருக்கும்னு எங்க டீம் வொர்க் பண்ணோம். வழக்கமா, ஹீரோன்னா அநியாயத்தைத் தட்டிக்கேட்பார். அந்தப் பட ஹீரோ அருள்நிதி, சண்டையைப் பார்த்து விலகிப்போவார். அது ரொம்பப் புதுசு.  அதுவே ஒரு பெண் சண்டைபோடுறானா அது புதுசு. ஆனா, ஒரு பொண்ணு அடிக்கிறதை நம்பணும் இல்லையா! அவளுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும்கிறதையும், அதை ஏன் கத்துக்கிட்டாங்கிற காரணத்தையும் உள்ளே சின்ன ஃப்ளாஷ்பேக் மூலமா சொல்லியிருக்கோம்.”

“அஜித் ஓ.கே சொன்னா நாளைக்கே ஷூட்டிங்!”

``அப்ப சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு ஆக்‌ஷன் அவதாரம்னு சொல்லுங்க!”

`` `துப்பாக்கி' இந்தி ரீமேக் `ஹாலிடே'வுல சோனாக்‌ஷிதான் நாயகி. அப்போ அவங்க நடிச்ச `லூட்டேரா' படத்தின் டி.வி.டி-யை என்கிட்ட குடுத்து, பார்க்கச் சொன்னாங்க. நிஜமா சொல்றேன், அவங்க நடிப்பு வேற லெவல்! `இந்த ஹீரோயினை வெச்சு நாம படம் எடுத்தா... அது மூணு சாங், நாலைஞ்சு லவ் சீனோட முடிக்கக் கூடாது'னு தோணுச்சு. `அகிரா' ஆரம்பிச்சதும் எனக்குத் தோணின முதல் ஆள் சோனாக்‌ஷிதான். ஒரு ஆக்‌ஷன் ரோலுக்கு அவங்களோட லுக் செமயா ஃபிட் ஆச்சு. களத்துல இறங்கிட்டோம்.”

``விஜய், மகேஷ் பாபு... ரெண்டு பேருடைய பலம் என்ன?”

``விஜய் சாரை எல்லா குரூப் ஆடியன்ஸுக்கும் பிடிக்கும். குறிப்பா, குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். லேடீஸ் ஆடியன்ஸ் ஜாஸ்தி. அதுவும் அண்ணனா நினைச்சு அன்பு வெச்சிருக்கும் ரசிகைகள். எல்லாருக்குமே பிடிக்கும்கிறது விஜய் சாருக்கு மிகப்பெரிய பலம்.

“அஜித் ஓ.கே சொன்னா நாளைக்கே ஷூட்டிங்!”

மகேஷ் பாபு செம ஸ்டைலிஷ். `பிரின்ஸ்'னுதான் கூப்பிடுவாங்க. அதுக்கு ஏத்த மாதிரி அவர் செம மேன்லி. சொல்ற ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு ஆர்வமா, கவனமா கேட்பார். ஷாட் முடிஞ்சதும் நம்முடைய முகத்தைத்தான் பார்ப்பார். நம்ம முகத்தில் கொஞ்சம் டவுட் இருந்தாலும் `ஒன்ஸ்மோர் போலாம்'னு அவரே சொல்லிடுவார். அந்த டெடிக்கேஷன்தான் அவரோட பலம்.”

``உங்க படங்கள் எல்லாமே பெரிய பட்ஜெட்தான். சின்ன பட்ஜெட்ல கதை பண்ற மாதிரி விருப்பம் இருக்கா?”

``ஆரம்பத்தில் வரும்போதே பெரிய ஹீரோவை வெச்சு பண்ணணும்னுதான் வந்தேன். யோசிச்சது எல்லாமே பெரிய பெரிய ஹீரோக்களுக்கான  கதைதான். ஆனா, இப்போ சின்னதா யோசிக்கலாமேனு தோணுது... பார்க்கலாம்.”

`` `கஜினி', `துப்பாக்கி'னு ரெண்டுமே இந்தியிலயும் செம ஹிட். `கத்தி' ரீமேக் பண்ணுவீங்களா?”

`` `கஜினி' டைம்லயே எனக்கு ரீமேக் பண்ற ஆர்வம் இல்லை. `கஜினி'யில் பெரிய அட்ராக்‌ஷன் அமீர்கான். இந்தி இண்டஸ்ட்ரியும் எனக்குப் புதுசு. பண்ணா, நல்லா இருக்கும்னு பண்னேன். அப்புறம் `துப்பாக்கி'. ஒருகட்டத்துல `இதை வேற இயக்குநர் பண்ணியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமோ!'னு ஒரு யோசனை. அதனால இனி ரீமேக் வேணாம்னு முடிவுபண்ணிட்டேன். `கத்தி' மாதிரி ஒரு நல்ல கன்டென்ட்டைப் பண்ணும்போது நான் டயர்டு ஆகிடக் கூடாது. அதனால என்னோட அசிஸ்டென்ட் ஜெகன் சக்திதான் இந்தியில் பண்றார். நானும் லைக்காவும் சேர்ந்து தயாரிக்கிறோம்.''

``அமீர்கான், அக்‌ஷய், சோனாக்‌ஷினு பாலிவுட்லயும் பெரிய நட்பு வட்டம் இருக்குதே?”

``இன்னமும் எனக்கு ரொம்ப நெருக்கமா இருக்கிறது, ஷூட்டிங் போகும்போது கால் பண்ணி விசாரிக்கிறது, சென்னைக்கு வந்தா மீட் பண்றது அமீர்கான் மட்டும்தான். மத்தபடி படம் முடிஞ்சும் நட்பு வெச்சுக்கிற அளவுக்குப் யாரும் பழக்கம் இல்லை. அது ஹீரோவா இருந்தாலும் சரி, ஹீரோயினா இருந்தாலும் சரி!”

``முதல் படம் அஜித் கூட... எப்போ அடுத்த அஜித் படம் எதிர்பார்க்கலாம்?”

`` `தீனா' படம் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு வாரம் முன்னாலதான் அஜித் சாரோட ஒரு படம் டிராப் ஆச்சு. அந்தச் சமயத்தில் ஒரு கால் வந்தது. அதில் ஆரம்பிச்சதுதான் `தீனா'. அந்த மாதிரி ஒரு போன்கால் வரும்னு எதிர்பார்த்துக் கிட்டிருக்கேன். அவருக்காக ஒரு கதை ரெடியா இருக்கு. `நாளைக்கே ஷூட் போலாம்'னு சொன்னாக்கூட போகலாம். எப்போ பண்ணாலும் அது அவருக்காகத்தான்; அவர் மட்டும்தான் பண்ண முடியும்.”

`` ` `கத்தி', `துப்பாக்கி' - இரண்டுல எது பெஸ்ட்?'னு எப்பவுமே ஒரு விவாதம் இணையத்துல ஓடும். உங்க மனசுக்கு நெருக்கமான படம் எது?”

`` `கத்தி'தான். `துப்பாக்கி' ஸ்கிரிப்ட் ரொம்ப வேகமா பண்ணிட்டேன். விஜய் சார்கிட்ட சொல்லும்போது ஒரு அவுட்லைனாதான் சொன்னேன். க்ளைமாக்ஸே பாதி ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் அவருக்குச் சொன்னேன். ஷூட் போயிட்டே இருந்தது. நான் அவர்கிட்ட சொல்லாதது எல்லாம் திடீர்னு சொல்லிச் சேர்த்தேன். அந்த `14-வது நாள் அவன் தம்பி வந்துட்டான்டா ஆர்மிக்கு'ங்கிற வசனம் ஸ்பாட்ல நான் சொன்னேன். `ஐ யம் வெயிட்டிங்'கும் ஸ்பாட்ல சொன்னதுதான்.

`கத்தி' முழுசா ரெடி பண்ணி வெச்சுக்கிட்டு, வசனத்துக்கே நிறைய ஹோம்வொர்க் பண்ணவேண்டியதா இருந்தது. அந்தக் கதையில் சொல்லும் எல்லாத்துக்கும் நாம விளக்கம் சொல்லியாகணும். அதுக்காக நான் வொர்க் பண்ணது ரொம்பவே ஜாஸ்தி. அதனால, எனக்கு `கத்தி' ஒரு படி மேலதான்.

இப்போ தெலுங்குல சிரஞ்சீவி சார் நடிக்கிறார். அந்த டீமுக்கு போன் பண்ணி, நான் தமிழ்ல சில விஷயங்கள் பண்ணியிருக்கலாமேனு தோண்றதை  மட்டும் சொன்னேன். குறிப்பா, அந்தக் கிராமத்தில் தண்ணி வர்றதுபோல ஒரு ஷாட் இருந்திருக்கலாம்னு எனக்குத் தோணிக்கிட்டே இருந்தது. சுத்தி வேலி இருக்கும். அதுக்கு வெளியே இருந்து மக்கள் பார்த்திட்டிருப்பாங்க. அப்போ வேலிக்கு உள்ளே  பூமியில் இருந்து தண்ணி பீச்சியடிக்கும். அதை, கிராமமே கம்பி வேலிக்குப் பின்னால நின்னு பார்க்கும். இந்த ஷாட் இருந்திருக்கலாமேனு தோணுச்சு. அதைச் சேர்த்துக்கோங்கனு சொல்லியிருக்கேன்.”

``கமர்ஷியல் சினிமாவோட ஸ்டைலே இப்ப மாறுதே...வித்தியாசமான படங்கள் பண்ணும் ஐடியா உங்களுக்கு இருக்கா?”

``நிறைய விஷயங்கள் தோணும். `ஹீரோவே இல்லாம ஒரு படம் பண்ணணும், குழந்தைகள் படம் ஒண்ணு பண்ணணும்'னு தோணும். நாலு ஸ்கிரிப்ட்டை நாலு இயக்குநர்களுக்குக் கொடுத்து, படம் பண்ணச் சொல்லி தயாரிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. இப்போதைக்கு `அகிரா', மகேஷ் பாபு படம், இந்தியிலயும் தெலுங்குலயும் `கத்தி' போகுது. இதுவே சந்தோஷம்தான்.”