Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``லோன் கேட்டா அந்த பேங்க்ல மூஞ்சியைத் திருப்பிக்கிறாங்களே ஏன்?’’

``அவங்கதான் 0% இன்ட்ரஸ்ட்னு வெளியில போர்டு வெச்சிருக்காங்களே!’’

- செந்தில்குமார்

ஜோக்ஸ்

``ராமன் பிடிக்கப்போனது மாய மானைத்தானே.

இவர் என்ன போக்கிமான்னு கதை அளக்குறார்?’’

``இது, நவீன ராமாயணமாம்!’’

- விகடபாரதி

ஜோக்ஸ்

``அந்தச் சாமியார் போலினு எப்படிச் சொல்றே?’’

`` `முக்தி அடைய வழிகாட்டுங்க’னு கேட்டா, `கூகுள்ல போய்த் தேடு’னு சொல்றாரே!

- நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

ஜோக்ஸ்

 ``திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’’

“சொல்லிட்டேன். சோத்துல தண்ணி ஊத்திட்டாங்களாம். அம்மா சொல்லச் சொன்னாங்க.’’

- புதுவண்டி ரவீந்திரன்

ஜோக்ஸ்

“நாலு தடவை நாய் கடிச்சும், உடனே மருத்துவமனைக்கு வராம என்ன பண்ணீங்க?''

“நாய்க்குப் பக்கத்துல ஒளிஞ்சுக்கிட்டு இருந்த போக்கிமானைப் பிடிச்சுக்கிட்டிருந்தேன் டாக்டா்!''

- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ்

``கல்யாணப் பொண்ணு செம கில்லாடி!''

``எப்படிச் சொல்றே?''

``தாலி கட்டினதும் முதல்ல மாமியார்கூட செல்ஃபி எடுத்துக்கிட்டாளே!''

-பி.பாலாஜி கணேஷ்

ஜோக்ஸ்

``இது பல அடுக்குகளைக்கொண்ட அப்பார்ட்மென்ட்!''

``அதுக்காக, `வானத்துக்கு மிக அருகில்'னு விளம்பரம் பண்றது நல்லாவா இருக்கு?''

- க.கலைவாணன்

ஜோக்ஸ்

``போர்க்களத்தில் மன்னர் கவலையாக இருக்கிறாரே... வெற்றி கிட்டவில்லையா?''

``மொபைலுக்கு சிக்னல் கிட்டவில்லையாம்!''

- பர்வீன் யூனுஸ்