Published:Updated:

தர்மதுரை - சினிமா விமர்சனம்

தர்மதுரை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
தர்மதுரை - சினிமா விமர்சனம்

தர்மதுரை - சினிமா விமர்சனம்

தர்மதுரை - சினிமா விமர்சனம்

தர்மதுரை - சினிமா விமர்சனம்

Published:Updated:
தர்மதுரை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
தர்மதுரை - சினிமா விமர்சனம்
தர்மதுரை - சினிமா விமர்சனம்

ளிய கதை. இயல்பான மனிதர்கள். மனதை நெகிழ்த்தும் பாடங்கள். அன்பானவர்கள் அபத்தங்களுக்குள் சிக்கி மீளும் அற்புதமே கதை.

டாஸ்மாக்கே கதி எனக் கிடக்கும் டாக்டர் விஜய் சேதுபதி, தன் சகோதரர்களின் தொழிலுக்கே வேட்டுவைக்கிறார். பதிலுக்கு விஜய்சேதுபதியை ஒரு வழி பண்ண அவர்கள் திட்டம்தீட்ட... தப்பித்து, தான் படித்தக் கல்லூரிக்குச் செல்கிறார். அங்கே பழைய நினைவுகளில் மூழ்கும் விஜய் சேதுபதி, ஒவ்வொரு நண்பராகத் தேடிச் செல்கிறார். நல்ல மாணவன் குடிகாரன் ஆனது ஏன், கல்லூரி நண்பர்கள் இப்போது என்ன செய்கிறார்கள், விஜய் சேதுபதியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் கதை.

`நான் பார்த்துக்கிறேன் பாஸ்!' என இயக்குநரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அழுவதும் அழவைப்பதுமாக எல்லா எமோஷன்களிலும் எக்கச்சக்க பெர்ஃபார்மன்ஸ். தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே என மூன்று நாயகிகள். அதில் ஐஸ்வர்யா... அழகி.  காமக்காபட்டி அன்புச்செல்விதான் படத்தின் தாயம்மா. அம்மா ராதிகா, சகோதரர்கள், எம்.எஸ்.பாஸ்கர்... என ஒவ்வொருவரும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள்.

தர்மதுரை - சினிமா விமர்சனம்

கிராமத்து எபிசோடுகளில் நெகிழவைக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. கூட்டுக்குடும்பம், அதில் வரும் சிக்கல்கள் என இயல்பாகத் தொடங்கி இம்ப்ரெஸ் செய்கிறார். கதை அங்கு இருந்து காலேஜுக்குச் சென்றதும்தான் சிக்கல். ஒரு மனிதனின் வாழ்க்கை நேர்க்கோட்டில் பயணிக்காது என்பது சரிதான். ஆனால், அதைப் படமாகப் பார்க்கும்போது ஒரு ஃபோக்கஸ் தேவை இல்லையா? மசாலாப் பட க்ளைமாக்ஸில் பறக்கும் குவாலிஸ் கார் போல தறிகெட்டு ஓடுகிறது திரைக்கதை.

கதை எந்தக் காலத்தில் நடக்கிறது? மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் மொபைல் கிடையாது.

தர்மதுரை - சினிமா விமர்சனம்

பிரிந்துபோன திக் தோஸ்த்துகள் முகவரி தெரியாமல் முழிக்கிறார்கள். கிராமத்தில் பணம் தந்து ஏமாந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனிலேயே காத்திருக்க, விஜய் சேதுபதி அந்த கேப்பில் குடி மறந்து, வித்ட்ராயல் சிம்டம்ஸுக்கு ஊசிபோட்டுக்கொள்கிறார். பல மாதங்களான பிறகும் அந்தப் பையில் இருக்கும் பணம் யார் கண்களிலும் படவே இல்லை. ப்ச்!

`ஆண்டிப்பட்டி கணவாய்...’ பாடலில் மட்டுமே வைரமுத்து - யுவன் தெரிகிறார்கள்.

ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் வள்ளலாக இருந்திருக்கலாம்  இந்த `தர்மதுரை'.

- விகடன் விமர்சனக் குழு