‘‘ ‘எல்லாருக்கும் சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. இப்படி ஒரு விருது அறிவிச்சிருக்காங்க’ - அன்று அதிகாலை அப்பாகிட்ட இருந்து இப்படி ஒரு வாட்ஸ்அப் மெசேஜ். ஒரு நடிகரா என்னை எப்பவுமே வியக்கவைப்பவரா, மரியாதைக்குரியவரா அப்பா இருக்கார். அவருக்குக் கிடைக்கும் இந்த மாதிரியான பாராட்டுக்கள், விருதுகள்... அவர் மீதான மரியாதையைப் பல மடங்காக்கி அவரை இன்னும் கொண்டாடத் தோணுது’’ - தன் அப்பா கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது கிடைத்தது பற்றி பெருமிதப்படுகிறார் மகள் ஸ்ருதிஹாசன். ‘சிங்கம்-3’ படப்பிடிப்பில் இருந்தவரைச் சந்தித்தேன்.

‘‘சின்ன வயசுல அப்பாவை ஷூட்டிங் ஸ்பாட் சூழல்ல பார்க்கும்போது, ஏதோ எல்லா நாளும் பர்த்டே பார்ட்டி நடக்கிற மாதிரியே தோணும். ஒவ்வொரு ஷூட்டிங் ஸ்பாட்டும் ஒரு மேஜிக்கல் பிளேஸ் மாதிரி இருக்கும். அந்த மேஜிக்கல் லேண்ட்ல அப்பா ஒரு மேஜிக்கல் ஹீரோ மாதிரி தெரிவார். அதில் இன்னும் பளீர்னு மனசுல இருக்கிறது ‘அபூர்வ சகோதரர்கள்’ ஸ்பாட்தான். அந்த செட் எனக்கு அவ்வளவு பிடிக்கும். பொமரேனியன் நாய்க்குட்டிகள், யானைகள்... ஏதோ ஒரு மாய உலகத்துக்குள் வந்துட்ட மாதிரி இருக்கும். அதை இப்ப நினைச்சுப்பார்த்தா டிஸ்னிலேண்ட்ல இருந்த ஃபீல். அப்ப ஒவ்வொரு கேரக்டருக்கும் அவரோட கடின உழைப்பு, அதோட சீரியஸ்னஸ் எதுவுமே எனக்குப் புரியாது. ஆனால், இப்ப வளர்ந்த பிறகு அப்பாவின் பயணத்தை நினைக்கும்போது எவ்வளவு முயற்சிகள், வெற்றிகள், தோல்விகள், கற்றுக்கொண்ட பாடங்கள்... ஆச்சர்யமா இருக்கு. யெஸ்... அப்பா, எனக்கு எப்பவுமே ஆச்சர்யம்தான்.’’

‘‘அப்பா இவ்வளவு விஷயங்கள் பண்றார், இவ்வளவு உழைக்கிறார்னு எந்த வயசுல உணர ஆரம்பிச்சீங்க?’’

‘‘ ‘குணா’ பட ஷூட்டிங் சமயம். நான் வளர்ந்து ஓரளவுக்கு சினிமா பிடிபட ஆரம்பிச்ச நாட்கள். ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாட்டு லொக்கேஷன். நேரில் போயிருந்தேன். அந்த லுக்குக்கு அவர் போட்டிருந்த மேக்கப், அவரின் நடிப்பு, எப்ப வேணும்னாலும் வழுக்கி விழலாம்கிற அந்த லொக்கேஷன்... அந்தச் சூழல்லயும் அவர் நடிப்பு தந்த ஆச்சர்யமும் வழுக்கி விழுந்துடப்போறார்ங்கிற பயமும்தான் சினிமா சாதாரண விஷயம் கிடையாதுனு புரியவெச்சது. அதுவும் ‘கலைஞன்’ பட சமயத்தில் அவருக்கு அடிபடும்போதுதான், சினிமாவில் இதுவும் ஒரு பகுதி. இது சீரியஸ் பிசினஸ்னு தெரிஞ்சது.’’

‘‘அப்ப அந்த பயம், ஆச்சர்யத்தை எல்லாம் அப்பாகிட்ட பகிர்ந்துப்பீங்களா?’’

‘‘பலமுறை சொல்லியிருக்கேன். ‘விஸ்வரூபம்’ டைம்லகூட, ‘எதுக்குப்பா சேர்ல இருந்து எல்லாம் பல்டி அடிக்கிறீங்க?’னு சொன்னேன். ஆனால், உண்மையான நடிகரா அவருக்கு அந்தத் தன்னம்பிக்கை இருக்கு. இதை எல்லாம் தாண்டி அவருக்கு சினிமாதான்... ஆமாம் கலைதான் வாழ்க்கை. அதுதான் உண்மை.’’

‘‘அப்பா பரபரப்பா நடிச்சுட்டிருந்த அந்த நாட்கள்ல நிச்சயமா நீங்க அவரை மிஸ் பண்ணியிருப்பீங்க. அந்தப் பிரிவை எப்ப உணர்ந்தீங்க?’’

‘‘ஸ்போர்ட்ஸ் டே, ஆண்டுவிழானு கூப்பிட்டா வர மாட்டார். இந்தச் சின்னச் சின்ன விஷயங்களைத் தவிர, பெரிய வருத்தம்னு எதுவும் கிடையாது. அவருக்கு சினிமா எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுடுச்சு. அதன்பிறகு, ‘ஐயய்யோ, மத்தவங்களோட அப்பா வந்திருக்காங்களே... நம் அப்பா வரலையே!’னு ஃபீல் பண்ணினது இல்லை. ஒவ்வொரு பட ஷூட்டிங் முடிந்தும் அப்பாவை திரையில் பார்க்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கும். ‘என்கூட அவ்வளவு நாள் இல்லாட்டியும் பரவாயில்லை. எவ்வளவு விஷயங்களை க்ரியேட் பண்ணியிருக்கார்’னு பெருமைப்படுவேன். ஆனால், நேரம் கிடைச்சா எப்பவுமே எங்ககூடதான் இருப்பார். ரோலர் ஸ்கேட்டிங், கிரிக்கெட், சினிமா பார்க்க, ரெஸ்டாரன்ட்னு எங்ககூட எங்களுக்குப் பிடிச்ச மாதிரி நேரம் செலவழிப்பார்.’’

‘‘கமல்ஹாசனின் எல்லா முயற்சிகளும் அவரின் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ஆனால், ஒரு மகளா அவரின் எந்தப் படம் உங்களுக்கு நெருக்கமான படமா உணர்றீங்க?’’

‘‘‘மகாநதி’. என் மனசுக்கு நெருக்கமான, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின மறக்க முடியாத படம்.’’

‘‘இப்படிப்பட்டவருடன் ‘சபாஷ் நாயுடு’வில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு. இது எந்தத் தருணத்தில் முடிவானது?’’

‘‘நான் நடிகை ஆனதுக்குக் காரணமே அப்பாதான். இசை, எழுத்து... எதிர்காலத்தில் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில்தான் செட்டில் ஆவோம்னு நினைச்சுட்டிருந்தேன். வேற எதையும் யோசிக்கவே இல்லை. நான் மியூஸிக் ஸ்கூல்ல இருக்கும்போதே, ‘உன்னால் நடிக்க முடியும். முயற்சிபண்ணு’னு அப்பாதான் சொன்னார். பலர் இரண்டாவது, மூன்றாவது படங்கள்லயே, ‘அப்படியே பின்னிட்டா, சூப்பர், நூத்துக்கு நூறு மார்க்’னு போயிட்டு இருந்தப்ப எனக்கு இது மெதுவான பயணம்தான். நான் எப்பவுமே அப்பாகிட்ட கேட்டதே இல்லை. ஆனால், அப்பாதான் மூணு முறை தன் படங்கள்ல நடிக்கச் சொல்லி என்னைக் கேட்டிருக்கார். ‘நான் அப்பாகூட நடித்தால், ‘என் பொண்ணு நல்லா நடிப்பா’ சொல்றமாதிரி அவருக்கும் ஒரு பெருமையா இருக்கணும்னுதான் காத்திருந்தேன். அந்தத் தருணம் ‘சபாஷ் நாயுடு’ல அமைஞ்சிருக்கு.’’

‘‘ஓ.கே. ‘சபாஷ் நாயுடு’வில் நீங்க யார்?’’

‘‘‘நாயுடு’வின் மகள். திரையிலும் அப்பா-மகள்தான். ஆரம்பம் முதல் கடைசி வரை செம ஃபேமிலி என்டர்டெய்னர். நிறைய எமோஷன்ஸ், காமெடி, ஆக்ஷன்ஸ்... ரசிகர்கள் இந்தப் படத்தை நிச்சயமா கொண்டாடுவாங்க.

இந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் மறக்க முடியாத தருணம் ஒன்று. அதைச் சொன்னால் அப்பா கோவிச்சுப்பார். ஆனால், ஒரு மகளா அது எனக்கு ரொம்பப் பிடிச்ச தருணம். ஒரு சீன்ல அவர் கொஞ்சம் எமோஷனல் ஆகி, என் கேரக்டர் பேரைச் சொல்லிக் கூப்பிடணும். ஆனால், அவர் ‘ஸ்ருதி’னு என் ஒரிஜினல் பேரையே சொல்லிக் கூப்பிட்டுட்டார். ‘ஐயோ எவ்வளவு பெரிய நடிகர், மறந்துட்டு என் பேரையே சொல்லிட்டாரே!’னு எனக்கு அது செம ஹார்ட் டச்சிங் மொமன்ட்.

அப்பாவுக்கு டைரக்ஷன் மேல உள்ள பாசத்தை இந்தப் படத்தில் புரிஞ்சுக்கிட்டேன். நடிப்பையும் டைரக்ஷனையும் பேலன்ஸ் பண்றதே கஷ்டம். இதில் அவருக்கு புராஸ்தட்டிக் மேக்கப். லாஸ் ஏஞ்சலஸ்னு சொன்னதும் ஜில்னு ஜாலியா ஏசியில இருக்கிற மாதிரி இருக்கும்னு நினைப்பாங்க. ஆனால், அங்கு சென்னையைவிட சூடு. அதுல டைரக்ஷனும் பண்ணி, அவர் பெர்ஃபார்மன்ஸையும் கவனிச்சுப் பண்ணி, மத்தவங்க நடிக்கிறதையும் பார்த்து... அப்பா ரியலி அமேஸிங்!’’

‘‘உங்களின் முதல் ஹீரோவுடன் மீண்டும் நடிக்கிறீங்க. `சிங்கம்-3’ அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘சூர்யா ஹார்ட் வொர்க்கர். அதே சமயம் அமைதியான ஆள். ஸ்பாட்ல எல்லாரும் சந்தோஷமா நிம்மதியா இருக்காங்களானு மத்தவங்க கம்ஃபர்ட் முக்கியம்னு நினைக்கக்கூடியவர். அதேபோல் ‘பூஜை’ படத்துக்குப் பிறகு ஹரி சாருடன் வொர்க் பண்ணும் படம். தெரிந்த, நல்ல மனிதர்களுடன் திரும்பத் திரும்பப் படம் பண்றது பிடிச்சிருக்கு. இதில் எனக்கு மாடர்னான போல்டு கேரக்டர்.’’

‘‘ ‘பிரேமம்’ மலர் டீச்சர். எல்லாரும் ரசிச்ச கேரக்டர். அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நீங்கதான் மலர் டீச்சர். என்ன எதிர்பார்க்கலாம்?”

‘‘முதல்ல அந்தப் பட இயக்குநர் அல்போன்ஸின் வொர்க் ரொம்பப் பிடிச்சது. அடுத்து நிவின் பாலி, சாய் பல்லவினு அந்தப் படத்தில் நடிச்ச அனைவரின் நடிப்பும் பிடிச்சது. அதன் தெலுங்கு ரீமேக்ல நடிக்கக் கூப்பிடும்போது, ‘எல்லாருக்கும் பிடிச்ச படம். அதில் நாம பண்ணணுமா?’னு சின்னத் தயக்கம் இருந்தது. ஆனால், டைரக்டர் சந்து, ஒரிஜினல் படத்தின் அழகை லூஸ் பண்ணாம புதுவிதத்தில் பண்ணியிருக்கார். அடுத்து நாகசைதன்யா என் ஃப்ரெண்ட். அவர்கூட நடிக்க ஒரு வாய்ப்பு. என்னோட சின்ன ரிக்வெஸ்ட், இதை `பிரேமம்' படத்துடன் ஒப்பிடாம, வேறொரு படமா பாருங்க.’’

‘‘பிளாக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்... இந்தத் தொழில்நுட்பங்கள், ஒரு பிரபலத்துக்கு எந்த அளவுக்கு உதவியா இருக்கு?’’

‘‘ரசிகர்கள், பார்வையாளர்கள்... யாருடனும் நாம நேரடியாப் பேசப்போறது இல்லை. டிக்கெட் வாங்கி படம் பார்த்து, உங்களைக் கட்டிப்பிடிச்சு ஷேக் ஹாண்ட்ஸ் கொடுக்கிறது மட்டும்தான் அன்பா? அவங்க தூரத்துல இருந்தே அந்தப் பாசத்தை, அன்பை உங்களுக்கு அனுப்பலாம். அந்தத் தூரம் இந்தத் தொழில்நுட்பத்தால் குறைஞ்சிருக்கு. அதே நேரத்துல இது ஒரு மீட்டர் மாதிரி, செக் பண்ணிக்கலாம். பாட்டு, படம், கேரக்டர்... ஆடியன்ஸுக்கு என்ன பிடிச்சிருக்குனு உடனடியா அவர்களின் பல்ஸ் பார்க்கலாம். சிலரின் கமென்ட்டுகளைப் பார்க்கும்போது, ‘நாம எவ்வளவு முக்கியமான வேலை பண்ணிட்டி ருக்கோம்’னு புரியும். திட்டினாக்கூட, ‘யாராவது அவ்வளவு டைம் எடுத்து நெகட்டிவா கமென்ட் பண்ணினாங்கன்னா, நீங்கதான் அவங்களுக்கு அவ்வளவு முக்கியம்’னு தெரியுது. நம் வாழ்க்கை மாதிரியே ஆன்லைனும் செம கலவை.’’

‘‘தங்கை அக்ஷரா, இப்ப அஜித் பட ஹீரோயின். ஆனால், அடுத்தடுத்த கமிட்மென்ட்ஸுக்கு அவங்க அதிக டைம் எடுத்துக்கிறாங்களே?’’

‘‘நாங்க அக்கா-தங்கையா இருக்கலாம். ஆனால், பெர்சனாலிட்டியில் ரொம்பவே வித்தியாசம். அவங்க வொர்க் பண்ற ஸ்டைல் வேற. அவங்க ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பாங்க. நான் எல்லாத்தையும் இப்பவே உடனடியா பண்ணணும்னு நினைக்கக்கூடிய ஆள். சின்ன வயசுல இருந்தே என் நேச்சர் அப்படித்தான். என்னால இரண்டு நிமிஷம் தியானத்துலகூட உட்கார முடியாது.

அக்ஷரா பற்றி ஒரு விஷயம் சொல்லணும். முதல் படத்தில் அவங்களின் தன்னம்பிக்கையா இருக்கட்டும், ஸ்கிரீன் பிரசன்ஸா இருக்கட்டும். ஒரு அக்காவா அவளை நினைத்து நான் பெருமைப்படுறேன்.’’

‘‘அஞ்சு வருஷத்துக்கு முன்பு பார்த்த மாதிரியே இப்பவும் அப்படியே ஸ்லிம்மா இருக்கீங்க. ஃபிட்னஸ்க்கு என்ன பண்றீங்க?’’

‘‘வொர்க்அவுட்தான் காரணம். ஆனால், உண்மையைச் சொல்லணும்னா எனக்கு எக்ஸர்சைஸ் பிடிக்காது. ஜிம்முக்குப் போறதுன்னா ஐயோனு இருக்கும். பீட்சா உள்பட கொழுப்பு நிறைந்த ஆரோக்கியம் இல்லாத உணவு வகைகள்தான் எனக்குப் பிடிக்கும். நிறையச் சாப்பிடுறேன். சரியா சாப்பிடலைன்னா, நான் ஒரு டெரிபிள் ஹ்யூமன் பீயிங்; எல்லாரையும் திட்டுவேன்; ஒரு மாதிரி கோபமா இருப்பேன். சாப்பாடு எனக்கு அந்த அளவுக்கு முக்கியம். ஆனால், அதைச் சமன்படுத்த நிறைய வொர்க்கவுட் பண்றேன். ஸோ, நல்லா சாப்பிடுங்க, நிறைய வொர்க்கவுட் பண்ணுங்க.’’

‘‘ஸ்ருதியின் இந்த வளர்ச்சியில் உங்க அம்மா எந்த அளவுக்கு சந்தோஷமா இருக்காங்க?’’

‘‘என்னை நினைச்சு அவங்க எந்த அளவுக்குப் பெருமையா உணர்றாங்களோ, அதே அளவுக்கு அவங்களை நினைச்சு நானும் பெருமைப்படுறேன். காரணம், அவங்க ஒரு இண்டிபெண்டட் பெண்ணா நிறையச் சாதிச்சிருக்காங்க. ஒருவர் மற்றவரின் சாதனையை நினைச்சு நாங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் மரியாதையா, பெருமையா நினைச்சுக்குறோம்னு சொல்லலாம்.’’

‘‘ ‘சபாஷ் நாயுடு’ பட காஸ்டியூம் டிசைனர் கௌதமி உங்களுக்கு டிசைன் செய்த காஸ்டியூமை நீங்கள் உடுத்த மறுத்ததா தகவல் வந்தது. ஆனால், அதை நீங்களும் மறுத்திருந்தீங்க. என்ன நடந்தது?’’

‘‘ரொம்ப சிம்பிள். என் வாழ்க்கையில் என் அப்பா ரொம்ப ரொம்ப முக்கியமான மனிதர். என் சினிமா வாழ்க்கையா இருக்கட்டும், என் மைண்ட்செட்டா இருக்கட்டும் நிறைய விஷயங்களை நான் அவரைப் பார்த்துதான் கத்துக்கிட்டேன், கத்துக்கிட்டிருக்கேன். அப்படிப்பட்ட அப்பாவின் வாழ்க்கையில் அவருக்கு யார் முக்கியமோ, அவங்களுக்கு நான் அவசியம் மரியாதை கொடுப்பேன்.’’