மலையாள சூப்பர் ஹிட்டான `தட்டத்தின் மறையத்து' படத்தின் ரீமேக்கே `மீண்டும் ஒரு காதல் கதை'.

மொபைல் போனுக்குகூட அனுமதி இல்லாத, பாரம்பர்ய முஸ்லிம் குடும்பப் பெண் ஆயிஷா. அவளைப் பார்த்ததும் வினோத்துக்கு காதல். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு வினோத் தன் காதலைச் சொல்ல, ஆயிஷா தரப்பில் நோ சிக்னல். போலீஸின் பேராதரவுடன் வினோத் மீண்டும் முயற்சிக்க, சம்மதம் சொல்கிறாள் ஆயிஷா. அவள் வீட்டில் என்ன சொன்னார்கள் என்பது, தமிழ் சினிமா கோடி முறை பார்த்த க்ளைமாக்ஸ்.

பென்சில் ஓவியங்கள் அசைந்தாடும் அந்த அழகிய டைட்டில் கார்டிலேயே ஈர்க்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். ஆனால், அதன் பிறகு எந்த மாற்றமும் இல்லாத ரீமேக் வேலைக்குத் திரும்பிவிடுகிறார். முதல் படம் என்னும்போது வால்டர் பிலிப்ஸின் வரவு, நல்வரவு. அவ்வபோது முகத்தில் எட்டிப்பார்க்கும் ஓவர் ஆக்ட்டிங் தவிர்த்து எல்லாம் கச்சிதம். கதைகளை சரியாகத் தேர்வுசெய்தால், இன்னொரு சாக்லேட் பாய் ரெடி. 2012-ம் ஆண்டில் வந்த `தட்டத்தின் மறையத்து' படத்தின் நாயகி இஷா தல்வாரேதான் இதிலும். ஆனால், 2016-ம் ஆண்டு இஷா முகத்தில் இருந்த அந்த இளமை மிஸ்ஸிங்.

நாசரின் ஃபேக்டரி, படத்தின் முக்கிய விஷயம். அதை கடைசி வரை கண்ணில் காட்டாமல் வசனத்திலேயே பேசிவிடுகிறார்கள். மனோஜ் கே.ஜெயன் & கோ, உண்மையில் போலீஸ்தானா?

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் `மை போட்டு மை போட்டு...' மட்டுமே ஹிட் ரகம். ஒரு மியூஸிக்கல் படத்துக்கு இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். படத்தில் காதல் வழிந்தோடுவது விஷ்ணு

சர்மாவின் ஒளிப்பதிவில்தான். அவ்வளவு அழகு!

திகட்டத் திகட்ட காதல், ரம்மியமான இசை, பாசிட்டிவான முடிவு... என எந்தக் காலத்திலும் எனர்ஜி தரும் டெம்ப்ளேட். ஆனால், `அலைகள் ஓய்வதில்லை'யில் தொடங்கி `காதலுக்கு மரியாதை'யைத் தாண்டி பல கிளாசிக்குகளில் இருந்த நேர்த்தி இதில் இல்லை. மாணவ கம்யூனிஸ்ட் தொடங்கி பல விஷயங்கள் மலையாளத்துக்கே உரிய கலாசாரம். ஒரு மொழியில் ஹிட் அடித்த கதையை வேறு மொழிக்கு மாற்றும்போது, இதுபோன்ற கலாசார, பிராந்திய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். `மீண்டும் ஒரு காதல் கதை'யில் முக்கியப் பிரச்னை இதுதான்.

- விகடன் விமர்சனக் குழு