Published:Updated:

குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்

குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்

குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்

குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்

குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்

Published:Updated:
குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்
குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்

`எது குற்றம்... எது தண்டனை?' என்ற கேள்விகளுக்கு விடை தேட முயற்சிசெய்கிறது `குற்றமே தண்டனை'.

`குகைப் பார்வை (Tunnel vision)' என்ற பார்வைக் குறைபாடு உள்ளவர் விதார்த். கடன் அட்டைக்

குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்

கட்டணம் வசூலிக்கும் ஏழை ஒண்டிக்கட்டை. கண் நோயைத் தீர்க்க, லட்சங்களைப் புரட்டத் திண்டாடுகிறார். அப்போது, அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஓர் இளம்பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். நாயகனின் வாழ்க்கை திசைமாறுகிறது. கொலையின் வழியே நூல் பிடித்து, அந்தப் பெண்ணுக்குத் தொடர்புடையவர்களை மிரட்டி, கண் சிகிச்சைக்குப் பணம் சேர்க்கத் தொடங்கு கிறான். குற்றங்களின் மாயவலை, அவனை முழுமையாக மூழ்கடிக்கிறது. இறுதியில் கொலையாளி யார்? என்ற புதிரின் முடிவில் `குற்ற உணர்வே தண்டனையா?' என்ற முடிச்சு அவிழ்கிறது.

மணிகண்டனுக்கு, இது நிச்சயம் இன்னொரு `காக்கா முட்டை' கிடையாது. `காக்கா முட்டை'யின் செய்நேர்த்தியும் கைப்பக்குவமும் இந்த க்ரைம் த்ரில்லரில் பாதிதான் கூடி வந்திருக்கிறது. இயக்குநர் மணிகண்டனை விடவும் படம் நெடுக ஒளிப்பதிவாளர் மணிகண்டன் ஓவர்டைம் பார்த்திருக்கிறார். ஃப்ரேம் பை ஃப்ரேம் படக்கதைபோல காட்சி களின் வழியேதான் ஒட்டுமொத்தக் கதையும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைக்கப்படுகிறது. உணர்வுகளின் வழியே உருவாகும் அந்த சஸ்பென்ஸ்கள் ஒன்றாகத் திரண்டு இறுதியில் உச்சம் பெறாமல்போனதுதான் சோகம்.

வெவ்வேறுவிதமான மனித உணர்வுகளே திரைக்கதையை முன்நகர்த்திச் செல்கின்றன. ஆனால், காய்ச்சல் வந்த ஆமையின் வேகத்தில் கதை நகர்வது சலிப்பூட்டுகிறது.

சமூகத்தின் மீதான நாயகனின் குறுகலான பார்வையே அவனுக் கான நோயாக இருப்பது, பார்வையற்றோரின் வழி நாயகன் மீது நிழலாக விழும் எதிர்காலம் குறித்த அச்சம், கண்ணாடி பொம்மைகள் செய்யும் நாசர் நாயகனின் மனசாட்சியைப் பிரதிபலிப்பது எனக் குறியீட்டு கும்பமேளாவே நடத்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால், ஒரு மாற்றுத்திறனாளியின் இயற்கையான குறையை வேறொன்றின் குறியீடாக்கியிருக்கவும் வேண்டுமா?

பார்வையற்றவராக நடிப்பதைவிடவும் கடினமான கதாபாத்திரம் விதார்த்துக்கு. தன் பார்வைக் குறைபாட்டை பூஜாவிடம் மறைக்கும் லாகவமும், சாலையைக் கடக்கும்போது எல்லாம் வெளிப்படுத்தும் பதற்றமும் யதார்த்தமும் என நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார் விதார்த். கொஞ்சமே வந்தாலும் அத்தனை நிறைவு ரஹ்மான் நடிப்பில். `ஜோக்கர்' படத்தில் பார்த்த மக்கள் ஜனாதிபதியா இவர்? குரு சோமசுந்தரம்ஜி... செமயா பண்ணிருக்கீங்கஜி! தனக்கான விடுதலையை விதார்த்திடம் தேடும் பூஜாவின் கண்கள், நூறு பக்க வசனங்களை மௌனமாகப் பேசிவிடுகின்றன. டேக் இட் ஈஸி ஊர்வசியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் கேஷுவல் நடிப்பு, கச்சிதம்.

பார்வை இல்லாத பெண் சாலையைக் கடக்க விதார்த் உதவிடும் காட்சியில் வரும் பின்னணி இசை, `கோடை கால காற்றே...'வின் சாயலில் படம் முழுக்க ஒலிக்கும் அந்த தீம் இசை... என எல்லாமே ராஜஸ்வரங்கள். படத்தின் பெரிய பலம் ஒலி அமைப்பு. யதார்த்தம் தந்திருக்கும் உழைப்பு.

‘நம்ம ரேட்டை நாமதான் முடிவு பண்ணணும்’, `நீ எடுத்த முடிவை நான் சொல்லணும்னு நினைக்கிற’ என படம் முழுக்க வரும் ஆனந்த் அண்ணாமலை, மணிகண்டனின் வசனங்கள் நச்!
`உடனே பணத்தைக் கட்டுங்க, அப்பதான் ஆபரேஷன்' எனக் கறார் காட்டி அவசரப்படுத்தும் மருத்துவமனை நிர்வாகம், பணம் வந்ததும் `உங்களுக்கு முன்னாடி 330 பேருக்கு ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கு' என அலட்சியம் காட்டுவதும், `உங்க கண் பிரச்னைக்கு மருத்துவமே கிடையாது' என மருத்துவமனை நிர்வாகத்துக்குப் பயந்தபடியே உண்மையைச் சொல்லும் டாக்டர்... என மருத்துவ பிசினஸின் போலி முகத்தை நேர்மையாகப் பதிவுசெய்கிறது படம்.

ஆனால், கொலையான பெண்ணின் செல் போனை டெக்னாலஜி யுகத்தில் கண்டுபிடிக்கவே முடியாதா? நாயகனின் பணப் பரிவர்த்தனைகளை காவல் துறையால் ட்ரேஸ் பண்ண முடியாதா? போலீஸிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க நினைப்பவர், செக் மூலமாகவா பணம் கொடுப்பார்? இவ்வளவு வெளிப்படையாகவா எதிர்க்கட்சி வக்கீல் பேரம் பேசுவார்? மருத்துவமனையில் இருந்து வெளிவருகிறார் விதார்த், `அவர் ஏன் மருத்துவமனைக்கு வந்தார்?' என காவலர் போய்க் கேட்டால் சொல்ல மாட்டார்களா? `ஒரு க்ரைம் த்ரில்லர் கதையில் இவ்வளவு ஓட்டைகளா?!' என, பார்வை யாளனுக்குள் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

குற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்இளம்பெண்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் சூழலில், பெண் சுதந்திரம் பற்றிய நம் புரிதல்கள் மீது கேள்விகளை எழுப்பியிருக்கவேண்டிய படம், ஏனோ அதைப் பற்றிய அக்கறையின்றி காட்சிகள் வேறு எங்கோ தாவிச் செல்கின்றன. இறுதியில் சொல்லப்படும் தண்டனை என்பது நிஜமாகவே தண்டனைதானா என்பதிலும் குழப்பமே. ஆனால், கண்தானம் பற்றிய சின்ன விழிப்புஉணர்வை கொடுத்துச்செல்கிறது படம்.

முற்றிலும் வேறொரு பாணி சினிமாவை முயற்சிசெய்திருக்கிறார் மணிகண்டன். அந்தக் `கெத்து' தமிழ் சினிமா வளர்ச்சிக்கு சத்து.

- விகடன் விமர்சனக் குழு