Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

``யார்யா போன்ல?’’

``யாரோ டி.வி நேயராம். சட்டசபையில அவருக்கு விருப்பமான பாட்டு பாட முடியுமானு கேக்கிறாரு.’’

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஜோக்ஸ்

``போட்டி சட்டசபையில என்ன பிரச்னை?''

``கேன்டீன் வசதி கேட்கிறாங்க!''

- அம்பை தேவா

ஜோக்ஸ்

 ``எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் யாரும் சபையில் கைதட்டுவது இல்லை என்பதற்காக, எங்கள் அருகில் கொசுக்களை ஏவிவிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!''

- அவ்வை கே.சஞ்சீவிபாரதி

ஜோக்ஸ்

``திருடுபோன செல்போனை கடைசியா எப்ப பார்த்தீங்க?’’

``தலைவர்கூட செல்ஃபி எடுக்கும்போது!’’

- அம்பை தேவா

ஜோக்ஸ்

 ``நீங்க 10 நிமிஷத்துக்கு முன்னாடி வந்திருந்தா...''

``என் நண்பனைக் காப்பாத்திருக்கலாமா சிஸ்டர்?’’

``டாக்டர் வராம இருந்தார்... அவர் தப்பிக்க ஒரு சான்ஸ் இருந்தது!’’

- கிணத்துக்கடவு ரவி

ஜோக்ஸ்

``மன்னர் ஏன் பயந்து நடுங்குகிறார்?''

``எதிரி நாட்டு மன்னன் `குழிமேன் கோ' என்று ஒரு ஆப் வைத்துள்ளானாம். குழிக்குள் எங்கு ஒளிந்திருந்தாலும், அது காட்டிக்கொடுத்துவிடுமாம்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ்

``என் மனைவி காந்தியவாதி.''

``நேத்து ராத்திரி உனக்கு அடிவிழுற சத்தம் கேட்டுச்சே!''

``அவளுக்குக் கோபம் வந்தா மட்டும் பகத்சிங்கை அவிழ்த்துவிட்டுடுவா!''

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

``சார் 63A பஸ் எப்போ வரும்?''

``ஹெட்செட்டைக் கழட்டிட்டு, வீடியோவை நிறுத்திட்டு, கண்ணை நல்லா திறந்து பாருங்க, இது ரயில்வே ஸ்டேஷன்!''

- கோ.பகவான்

ஜோக்ஸ்

``எங்க தலைவர் படிக்கிற காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டார்.''

``சாப்பாட்டுக்கா?''

``இல்லை. படிப்பு வர்றாம!''

- வி.பி.சாரதி