Published:Updated:

கிடாரி - சினிமா விமர்சனம்

கிடாரி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கிடாரி - சினிமா விமர்சனம்

கிடாரி - சினிமா விமர்சனம்

கிடாரி - சினிமா விமர்சனம்

கிடாரி - சினிமா விமர்சனம்

Published:Updated:
கிடாரி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கிடாரி - சினிமா விமர்சனம்
கிடாரி - சினிமா விமர்சனம்

சாத்துரின் `சாதா' அடியாள், ஊரையே அடக்குகிற  தாதா ஆகிற ரத்த சரித்திரமே கிடாரி.

சாத்தூரில் மார்க்கெட் முதல் மார்ச்சுவரி வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் `கொம்பையா' வேல.ராமமூர்த்தி. சீன ராணுவம், ரஷ்ய ராணுவத்தோடு கூட்டணிபோட்டு வந்தாலும், தன்னந்தனியாக ஒரே ஓர் அரிவாளால் சமாளிப்பவர் `கிடாரி' சசிகுமார். கொம்பையாவின் விசுவாசி. அப்படிப்பட்ட கொம்பையாவின் கழுத்திலேயே ஒருவன் கத்தியை இறக்குகிறான். ` ‘சம்பவம்’ பண்ண முயன்றவன் யார்?’ என்ற கேள்விக்கான விடையே `கிடாரி’.

படத்துக்கு ஹீரோ சசிகுமார்தான் என்றாலும், இது முழுக்க வேல.ராமமூர்த்தியின் படம். முறுக்கிய மீசையும் நிமிர்த்திய நெஞ்சுமாக கெத்துகாட்டுகிறார் இந்தத் தெக்கத்தி எழுத்தாளர்.  வீரம், வெறுப்பு, இறுமாப்பு, அச்சம் எனக் கதாபாத்திரத்தின் வெயிட்டை உணர்ந்து சுமந்திருக்கிறார்.

சசிகுமாருக்கு வழக்கமான சண்டியர் கேரக்டர். முந்தைய படத்தில் பார்த்த அதே சிரிப்பு; அதே எள்ளல் பேச்சு. மாடுலேஷனைக் கொஞ்சம் மாத்துங்க பாஸ். ஹீரோயின் நிகிலா படம் முழுக்க சசியைச் சுற்றிச் சுற்றி வந்து முத்தம் கொடுக்க முயல்கிறார்... முயல்கிறார்... முயன்றுகொண்டே இருக்கிறார்.

நெப்போலியன் உள்பட ஃப்ளாஷ்பேக்கில் இரண்டு டஜன் நடிகர்கள். அதில் புலிக்குத்தி பாண்டியனாக வரும் ஓ.ஏ.கே.சுந்தர் மட்டும் நடிப்பில் நவரசம் காட்டுகிறார். அடுத்து கே.என்.காளை, ‘டேய் அவன் என் சிஷ்யன்டா...’ என்று வாய்சவடால் விட்டுக் கலக்கும் ஜாலி பெரியவர். உடையநம்பியாக வரும் வசுமித்ர, சின்னச்சின்ன பார்வைகளிலேயே விஷம், பயம், குரோதம் கடத்துகிறார்.

தென் தமிழகம், ஹீரோ, தாதா, பீரியட் என முதல் படத்திலேயே இத்தனை வெரைட்டி கொண்டுவந்ததில் கவனிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன். கதாபாத்திரத் தேர்விலும் கதை சொன்ன விதத்திலும் பரபரப்பு ஏற்றுகிறார். இசையமைப்பாளர் தர்புகா சிவாவுக்கு ‘கிடாரி’ நல்ல அடையாளம். `தலகாலு புரியலையே... தரை மேல நிக்கலையே...' பாடலில் காதலின் குதூகலம். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் கேமரா, சாத்தூரின் வெயிலையும் மலையையும் கொத்தாக அள்ளிவந்திருக்கிறது. 

கொம்பையா அண்ட் கோவுக்கும் அந்தக் கிளை கேரக்டர்களுக்குமான உறவு, பகையை நினைவு

கிடாரி - சினிமா விமர்சனம்

வைத்துக்கொள்ள முடியாததால் படம் ஆங்காங்கே தொய்வடைகிறது. ‘கொம்பையாவை சம்பவம் செய்தது யாராக இருக்கும்?’ என்று மு.ராமசாமியின் பார்வையில் கதை விரிவது ஒட்டுமொத்தப் படத்தின் திரைக்கதையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.

தமிழகத்திலேயே தமிழ் பேசத் தெரியாத முதல் டி.எஸ்.பி இந்தக் ‘கிடாரி’ டி.எஸ்.பி-யாகத்தான் இருக்கும். முன்னர் எல்லாம் `ஹீரோ ஆத்திரத்தில் சின்னத் தவறு செய்தால்கூட, அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டு வருவான்’ என்று கதை முடியும். ஆனால், ‘கிடாரி’ செய்த சம்பவங்களுக்கு எந்த இ.பி.கோவிலும் தண்டனை கிடையாது போல் இருக்கிறது.

‘கிடாரி’ மிகப்பெரிய சம்பவம். யாருக்கு..? யாருக்கோ!

- விகடன் விமர்சனக் குழு