லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பாலிவுட் இசைஞர்கள்!

பாலிவுட் இசைஞர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாலிவுட் இசைஞர்கள்!

பா.ஜான்சன்

மிழில் அனிருத், சந்தோஷ் நாராயணன், நிவாஸ் கே பிரன்னா, ஜஸ்டின் என இளம் இசைஞர்கள் கலக்குவதுபோல, பாலிவுட்டிலும் புது இசை அலை அடித்து அதிரடிக்கிறது. எல்லா படங்களிலும் ட்ரெண்டிங் ஹிட்டடிக்கும் இசைஞர்களின் அறிமுகம் இங்கே...

பாலிவுட் இசைஞர்கள்!

அமித் திரிவேதி:

விஷால் சேகர், ப்ரீத்தம், ஷங்கர்-இஷான்-லாய் எனச் சுற்றிச் சுழன்று பாலிவுட்டில் புது ட்ரெண்ட் பிடித்தவர் அமித் திரிவேதி. 20 வயதிலேயே கம்போஸிங் செய்ய ஆரம்பித்த அமித், காலேஜ் பேண்ட் `ஓம்’ மூலம் லைவ் பெர்ஃபாமன்ஸ் செய்ய ஆரம்பித்தார். டைம்ஸ் மியூஸிக், ஒரு ஆல்பம் வெளியிட்டது. தனது `தேவ் டி' படத்துக்கு புதுமுக இசையமைப்பாளர்தான் வேண்டும் என அமித்தை டிக் செய்தார் அனுராக் காஷ்யப். படத்தில் இருந்த 18 ட்ராக்குகளும் வேறு ஸ்டைல், வேறு ஃப்ளேவர்,  வேறு லெவல் ஹிட். குறிப்பாக, `எமோஷனல் அட்டாச்யார்...' பாடல். அதன் பின்னர் `வேக்அப் சித்' ஆரம்பித்து சமீபத்தில் வந்த `உத்தா பஞ்சாப்' வரை தொட்டதெல்லாம் ஹிட். இப்போது அனுராக் காஷ்யப்பின் ஃபேவரிட் இசையமைப்பாளர் அமித் மட்டுமே!

ஹிட் நோட்ஸ்:

தேவ் டி  - எமோஷனல் அட்டாச்யார்
உதான் - அஸாதியான்
லோடிரா - மன்மர்ஸியான்
ஃபிதூர் - பஸ்மைனா
உட்தா பஞ்சாப் - உட் தா பஞ்சாப்

பாலிவுட் இசைஞர்கள்!

அங்கித் திவாரி:

இசைக் குடும்பம். இசைக்குழு வைத்திருந்தார் அப்பா. அம்மா, பக்திப் பாடல்கள் பாடும் பாடகி. அதே ரத்தம்... வேறு எப்படி இருக்கும்? அங்கித், முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டார். ரேடியோவில் வேலை பார்த்துக்கொண் டிருந்தவர் அண்ணன் அன்கூர் திவாரியுடன் மும்பைக்கு வண்டி ஏறினார். சின்னச் சின்ன விளம்பரங்கள், டி.வி நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவருக்கு `சாஹேப், பீவி அவுர் கேங்ஸ்டர்' படத்தில் ஒரு பாடலை இசையமைத்துப் பாட வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவதாக `ஆஷிக் 2'-வில் இசையமைத்த `சுன் ரஹா ஹேய் நா து...' என்ற பாடல் மூலம் நிகழ்ந்தது ஒரு மேஜிக். மூலைமுடுக்கெல்லாம் கவனிக்கப்பட்டு, பல விருதுகள் வென்றார் அங்கித். சமீபத்தில் `ரூஸ்டோம்' படத்தில் இசையமைத்த தாய் ஹை வரை அத்தனையும் ஆசம் ஹிட். `ஆஷிக் 2'-வின் தெலுங்கு ரீமேக்காக வந்த `நீ ஜதகா நேன்டாலி’ படத்திலும் வின்டுன்னாவா (சுன் ரஹாவின் தெலுங்கு வெர்ஷன்) சூப்பர் ஹிட்!

ஹிட் நோட்ஸ்:

ஆஷிக் 2 - சுன் ரஹா ஹே
ஏக் வில்லன் - கலியான்
பீகே - தில் தர்பாதர்
சனம் ரே - தேரேலியே
ஜூனியாட் - இஷ்க் தி லாட்

பாலிவுட் இசைஞர்கள்!

மிதுன்:

பாலிவுட் பின்னணி இசையமைப்பாளர் நரேஷ் சர்மாவின் மகன்தான் மிதுன் ஷர்மா. 11 வயதில் இருந்தே இசை பழக ஆரம்பித்த மிதுன், இரண்டு பழைய இந்தி பாடல்களை ரீ-க்ரியேட் செய்ததில் இருந்து பயணத்தைத் தொடங்கினார். இயக்குநர் ஆனிர் மூலம் கிடைத்தது பாலிவுட் டிக்கெட். `பஸ் ஏக் பல்' படத்தில் `தேரே பின்...' பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் மிதுன். `அன்வர்', `தி ட்ரெயின்', `லம்ஹா', `மர்டர்-2', `ஜிஸ்ம்-2', `3ஜி' என அடுத்தடுத்து வாய்ப்புகள். படங்கள் சரியாகப் போகவில்லை என்றாலும் மிதுனின் பாடல்கள் மட்டும் ஹிட் ஷாட்ஸ்! அங்கித் திவாரிக்கு முகவரி அளித்த அதே `ஆஷிக்-2' மிதுனுக்கும் கைகொடுத்தது. தும் ஹி ஹோ, மேரி ஆஷிகி, தீம் மியூஸிக் என மூன்று ட்ராக்குகளும் தாறுமாறு ஹிட்!

 ஹிட் நோட்:

அன்வர் - மௌலா மேரே
ஆஷிகி-2 - தும் ஹி ஹோ, மேரி ஆஷிகி
சனம் ரே - சனம் ரே
கி அண்டு கா - ஜி ஹுஸூரி
டிராஃபிக் - குச் தர்

பாலிவுட் இசைஞர்கள்!

ராம் சம்பத்

கல்லூரியில் ராக் பேண்டில் கீபோர்டு வாசிக்க ஆரம்பித்து, இசைக்குள் நுழைந்தவர் ராம் சம்பத். படிப்பு முடிந்ததும் ஏர்டெல், டொகோமோ, தம்ஸ்அப், பெப்சி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் `ஐ லீட் இந்தியா' தீம் சாங்குக்கு இசையமைத்தார்.

எம் டி.வி-யின் கோக் ஸ்டுடியோவில் கலந்துகொண்டவருக்குக் கிடைத்தது முதல் திரைப்பட வாய்ப்பு. ராம் மத்வானி இயக்கிய `லெட்ஸ் டாக்' ஆங்கிலப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அமீர் கான் தயாரித்த `டெல்லி பெல்லி' படம் மூலம் கவனம் கிடைத்தது. பிறகு, அமீர் கான் நடித்த `தலாஷ்' பாடல்களும் ஹிட். ஃபக்ரீ, ராக் தி ஷாதி, புரானி ஜீன்ஸ், லேட்டஸ்ட்டாக அனுராக் காஷ்யப்பின் `ராமன் ராகவ்' படம் வரை எல்லாமே பம்பர் ஹிட். தற்போது ஷாரூக் கான் நடிக்கும் `ராயீஸ்' படத்தின் இசையமைப்பாளர் இவரே!

ஹிட் நோட்ஸ்:

டெல்லி பெல்லி - பாக் டிகே பாஸ்
தலாஷ் - ஜீலே ஸரா
ஃபக்ரி - அம்பர்சரியா
புராணி ஜீன்ஸ் - யே பேட்டி தின்
ராமன் ராகவ் - கத் லி அம்

பாலிவுட் இசைஞர்கள்!

சச்சின் - ஜிகார்:

சச்சின் சங்கவி, ஜிகார் சரையா காம்போதான் சச்சின் - ஜிகார். இருவருக்குமே இசையில் ஆர்வம். ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பாலிவுட்டின் பகுத் படா இசையமைப்பாளர்கள் பலரிடமும் வேலைபார்த்த பிறகு இண்டிபெண்டன்ட் மியூஸிக் என முடிவெடுத்து சச்சினும் ஜிகாரும் கூட்டணி அமைத்து களம் இறங்கினார்கள். சில படங்களில் இசையமைத்திருந்தாலும் இருவருக்கும் பளிச் அறிமுகம் கொடுத்தது `F.A.U.L.T' படத்தில் வெளியான `லே ஜா து முஜே...',

`சார் பஜ் கயா...' பாடல்கள். அதன் பிறகு ஏ.பி.சி.டி., ராமையா ஒஸ்தாவைய்யா, பட்லபூர் என வரிசையாக ஹிட்கள் கொடுத்தது இந்த இசை டியோ!

ஹிட் நோட்ஸ்:

F.A.U.L.T - சார் பஜ் கயா
ராமையா ஒஸ்தாவையா - ஜீனே லகா ஹூ
இஷக் - இஷக் தேரா
சுத்தேசி ரொமான்ஸ் - தேரே மேரே பீச்சுமே
பத்லபூர் - சோனே கா பானி

பாலிவுட் இசைஞர்கள்!

அமல் மாலிக்:

பாடகர் கம் இசையமைப்பாளர் தபூ மாலிக் மகன். இவரது தம்பி அர்மான் மாலிக் பாடகர். மாமா அனு மாலிக் பாலிவுட்டின் முக்கிய இசையமைப்பாளர் என, இவர் குடும்பம் முழுக்க இசை மழைதான். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு இசைக் கல்லூரிக்குச் சென்று பியானோ பயின்றார். பிறகு, தன் அப்பா தபூ மாலிக், இசையமைப்பாளர் ப்ரீத்தம், சலீம்-சுலைமான் போன்றவர்களிடம் வேலை. இடையில் விளம்பரங்கள், டி.வி நிகழ்ச்சிகளிலும் இசையமைத்துக்கொண்டிருந்த வருக்கு சல்மான் கான் நடித்த `ஜெய் ஹோ' படம் மூலம் இசையமைப்பாளராக என்ட்ரி கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் சிங்கிள் ட்ராக்குகள் இசையமைத்து ஹிட்டடித்தார் அமல். லேட்டஸ்ட்டாக தோனியின் பயோபிக் `எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி' படத்துக்கு அமல்தான் இசை.

ஹிட் நோட்ஸ்:

குஷுபுராட் - நய்னா
ஹீரோ - மே ஹூன் ஹீரோ (சல்மான் கான் பாடியது)
அஸார் - து ஹை நா ஜானே
தோ லஃப்ஸோன் கி கஹானி - குச் தோ ஹே
பார் பார் தேகோ - சா அஸுமான்