லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

``டியர்... டைனிங் டேபிள்ல உட்கார்ந்து சாப்பிடாம ஏன் நின்னுட்டே சாப்பிடுறீங்க?’’

`` `மாமியார் வீட்ல உட்கார்ந்து சாப்பிடுறான்’னு அவப்பெயர் வந்துடக் கூடாதுல!’’

- சி.பி.செந்தில்குமார்

ஜோக்ஸ்

``வரும் உள்ளாட்சித் தேர்தலில்...’’

``சீன் போட்டா செல்லாது தலைவரே!’’

- அம்பை தேவா

ஜோக்ஸ்

``காணாமப்போன உங்க பொண்ணோட அடையாளம் சொல்லுங்க!''

``பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை சிரிச்சுக்கிட்டே செல்ஃபி எடுப்பா சார்?''

- கோ.பகவான்

ஜோக்ஸ்

``போர்க்களத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் ஏன் வாளைத் தூக்கிக் காட்டுகிறார்கள்?''

  ``இது `வாள்ஸ்அப்'பாம்!''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

``வருமானத்துக்கு அதிகமா எப்படி சொத்து சேர்த்தீங்க?''

``இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லணும்னா, எனக்கு நீங்க கன்சல்டேஷன் ஃபீஸ் கொடுக்கணும் மை லார்ட்!''

- கிணத்துக்கடவு ரவி