லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“பணம்... ஆறாவது பூதம்!”

“பணம்... ஆறாவது பூதம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பணம்... ஆறாவது பூதம்!”

ம.கா.செந்தில்குமார்

“பணம்... ஆறாவது பூதம்!”

‘‘நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த ஐந்தையும் பஞ்சபூதம்னு சொல்வோம். அந்த வரிசையில் பணத்தை ஆறாவது பூதம்னு சொல்லலாம். பஞ்சபூதங்கள்ல எப்படி நல்லது கெட்டது ரெண்டும் இருக்கோ, அப்படித்தான் ஆறாவது பூதத்திலும் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. அதில் கெட்டது பணத்தாசை. அதுதான் எல்லா தீமைகளுக்கும் வேர். இதுதான் ‘ரூபாய்’ பட அவுட்லைன்.

சாதாரண ஆட்கள் முதல் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வரை எல்லோருமே பணத்தை நோக்கித்தான் ஓடிட்டு இருக்காங்க. அப்படி ஓடக்கூடியவர்கள்ல நான்கைந்து பேர் ஒரு புள்ளியில் சந்திக்கிறாங்க. அங்கே என்ன நடக்குது என்பதே ‘ரூபாய்’ ’’ - ‘நல்ல ஆசிரியர் என்பவர் யார்?’ என தன் ‘சாட்டை’ படம் மூலம் சவுக்கடி பாடம் நடத்திய இயக்குநர் எம்.அன்பழகன், அடுத்து ‘ரூபாய்’ படம் மூலம் பணத்தாசையின் பல்ஸ் பார்க்க வருகிறார்.

“பணம்... ஆறாவது பூதம்!”

‘‘ ‘கொக்கி’ முதல் ‘மைனா’ படம் வரை நான் பிரபுசாலமன் சாரிடம் உதவி, இணை, துணை இயக்குநர்னு வளர்ந்து, அவர் மூலமாகவே இயக்குநர் ஆனவன். ‘நாலு பாட்டு, நாலு ஃபைட்னு கமர்ஷியலா இருக்கணும்னு அவசியம் இல்லை. ஒரு நல்ல கதையை எடுத்துக்கிட்டு ஒரு படம்

“பணம்... ஆறாவது பூதம்!”

பண்ணுங்க’னு அவரின் உந்துதலில் உருவானதுதான் ‘சாட்டை’. அப்படி இப்ப ‘லாக்கரில் புகுந்து கொள்ளை, ஏ.டி.எம் மெஷின் உடைப்பு'னு வர்ற தொடர் கொள்ளைச் செய்திகளின் பாதிப்பில் இந்த ‘ரூபாய்’ பட லைனை சார்கிட்ட சொன்னேன். ‘சூப்பரா இருக்கு பண்ணலாம்’னு எங்க கூடவே இருந்து இந்த ஸ்கிரிப்ட்டை முழுமையாக்கினார். ‘சாட்டை’யைப்போலவே ‘ரூபாய்' படத்தையும் அவரே தயாரிக்கிறார்.''

‘‘ ‘சாட்டை’க்கு மிகப்பெரிய அங்கீகாரம். ஆனாலும் அடுத்த படம் எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?’’

‘‘எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களே கூப்பிட்டு, ‘நல்லா பண்ணியிருக்க’னு சொன்னது, ‘20 வருஷங்களா டீச்சரா இருந்து நான் பண்ணாததை நீ இந்த ஒரு படத்தின் மூலமா பண்ணியிருக்க’னு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொன்னது, ‘பணம் இல்லைனு என் பொண்ணை ஸ்கூல்ல இருந்து நிப்பாட்ட  நினைச்சுட்டு இருந்தேன். உங்க படத்தைப் பார்த்ததும் அந்த முடிவை மாத்திக்கிட்டேன்’னு ஒரு தகப்பன் சொன்னது, பத்திரிகைகளும் மீடியாக்களும் தந்த உற்சாகம்... இப்படி ‘சாட்டை’ எனக்குத் தந்தது மிகப்பெரிய அங்கீகாரம்.

“பணம்... ஆறாவது பூதம்!”

‘சாட்டை’க்காக நான் சேகரிச்ச விஷயங்களை வெச்சே இன்னும் 10 பாகங்கள் பண்ணலாம். ஏன்னா, நம் பள்ளி, கல்லூரிகளைப் பற்றி பேச அவ்வளவு விஷயங்கள் இருக்கு. ‘சாட்டை’யின் தெலுங்கு ரைட்ஸை வாங்கிய டாக்டர் ராஜசேகர் சார், அங்கேயும் என்னையே டைரக்ட் பண்ணச் சொல்லிக் கூப்பிட்டார். போனேன். ஆனால், அதை உடனடியா ஆரம்பிக்க முடியாத சூழல். பிறகு, அடுத்த ஸ்கிரிப்ட் வேலைகள் ஒரு வருஷம், ஷூட்டிங் இன்னொரு வருஷம்னு ‘ரூபாய்’ படத்தை முடிக்கவே இரண்டே கால் வருஷம் ஆனது.’’

“பணம்... ஆறாவது பூதம்!”

‘‘பணத்தாசைதான் கதை என்றாலும் ‘ரூபாய்’ யாரைப் பற்றி பேசும் கதை?’’

‘‘தேனியில் இருக்கும் ‘கயல்’ சந்திரன், கிஷோர் ரவிச்சந்திரன் இருவரும் நண்பர்கள். ஒரு லாரியைத் தவிர அவங்களுக்கு சொந்தம்னு சொல்ல யாருமே கிடையாது. மூணு மாசத்துக்கான தவணையைக் கட்டலைன்னா, அந்த லாரியும் அவங்க கையைவிட்டுப் போயிடும்கிற நிலை. அந்தச் சூழல்ல சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு, தேனியில் இருந்து பூ ஏத்திட்டு வர்றாங்க. அந்தச் சவாரியை இறக்கிப் போட்டுட்டுத் திரும்பும்போது வீடு ஷிஃப்ட் பண்ற வேறொரு சவாரி கிடைக்குது. `சேட்டுக்கு தவணை கட்ட உதவுமே'னு அந்தச் சவாரியை ஏத்துக்கிறாங்க. பணப் பிரச்னை, காதல், வில்லன்... இப்படி அந்தச் சவாரியால் அவங்க வாழ்க்கைக்குள் ஏகப்பட்ட குறுக்கீடுகள். பணம்தான் வாழ்க்கையின் முக்கிய அச்சா நினைச்சு ஓடும் இந்த கேரக்டர்கள், எதை நோக்கி போறாங்க என்பதே ‘ரூபாய்’ கதை. ‘சாட்டை’ வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்னா, ‘ரூபாய்’ முழுக்க முழுக்க காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து பண்ணியிருக்கிற படம். எங்க டீமின் ஒத்துழைப்பால் `ரூபாய்' யதார்த்தம் மீறாத தரமான ஒரு கமர்ஷியல் படமா அமைஞ்சிருக்கு!''