Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

`` `நதிநீர் பிரச்னைக்காக `அனைத்துக் கட்சிக் கூட்டம்' கூட்டணும்'னு சொன்னதுக்கு, ஆளும் கட்சிக்காரங்க என்னய்யா சொன்னாங்க?''

`` `மொதல்ல உங்க கட்சியில் `அனைத்து கோஷ்டிக் கூட்டம்' கூட்டி, ஒரு முடிவெடுத்துட்டு வாங்க'னு சொல்லிட்டாங்க தலைவரே!''

- கே.லக்‌ஷ்மணன்

ஜோக்ஸ்

“அரசியல்வாதியைக் காதலித்தது தப்பாப்போச்சு!”

“ஏண்டி?”

“ `உன்னோட காதலிக்கும் அணுகுமுறை சரியில்லை'னு சொல்லி வெளிநடப்பு பண்ணிட்டான்!”

- விகடபாரதி

ஜோக்ஸ்

``எங்களுக்கு பெண்ணைப் புடிச்சுப்போச்சு...”

“அப்ப வாங்க, எல்லாரும் சேர்ந்து ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிப்போம்!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்

``மொய்கவர்ல ஏதோ துண்டுச்சீட்டு எழுதிவெச்சீங்களே என்ன அது?''

`` `கல்யாணத்துக்கு வந்தா போதும்னு சொன்னீங்க, வந்துட்டோம்'னு எழுதிவெச்சேன்!''

- அம்பை தேவா

ஜோக்ஸ்

``பொண்ணு நல்லா பாட்டு பாடுவா, சமைப்பா.”

“நல்லா செல்ஃபி எடுக்கத் தெரியுமா, அதைச் சொல்லுங்க மொதல்ல!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்

``தலைவர், சொம்பை எடுத்துக்கிட்டு கூட்டணித் தலைவர் வீட்டுக்குப் போறாரே ஏன்?”

“பஞ்சாயத்துத் தேர்தல் கூட்டணி பேசவாம்!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்

``சார், நீங்க நல்லாதானே இருந்தீங்க... திடீர்னு பொண்ணு மாதிரி டிரெஸ் பண்ணியிருக்கீங்களே, ஒய்?''

``நான் சிவகார்த்திகேயன் ரசிகன். `ரெமோ' கெட்டப்!''

- சி.பி. செந்தில்குமார்

ஜோக்ஸ்

``சொந்தக்காரங்களோட இம்சை தாங்க முடியாம, ஹீரோ படாதபாடு படுறதுதான் படத்தோட கதை.''

``டைட்டில்?''

``சுற்றமே தண்டனை!''

- கே.லக்‌ஷ்மணன்

ஜோக்ஸ்

``விஜய் மல்லையாவை வெளிநாட்டுக்கு விட்டதுபோல், காவிரித் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு விடவேண்டும் கர்நாடகம்!''

``செம டைமிங் தலைவரே!''

- விகடபாரதி

ஜோக்ஸ்

 “2021-ல் ஆட்சிப் பீடத்தில் ஏறப்போவது நாங்கள்தான் என்பதை...”

“என்னாச்சு, தலைவர் பாதியிலேயே நிப்பாட்டிட்டாரு?”

“கவனிச்சுட்டாங்கபோல?”

- எஸ்.எஸ்.பூங்கதிர்

ஜோக்ஸ்

``உங்க பையன் சட்டமன்றத்துக்குப் போவான்னு தோணுது.’’

``ஏன்... நிறையக் கேள்விகள் கேட்கிறானா டீச்சர்?’’

``ஹூம்... பாடத்தில் கேள்வி கேட்டால், உடனே என்னைப் புகழ்ந்து ஒரு சினிமா பாட்டு பாடி, தப்பிக்கிறான்!’’

- எஸ்.ராமன்

ஜோக்ஸ்

``அந்த டி.வி சேனல்காரங்க பிசினஸ்ல புலி.’’

``எப்படிச் சொல்றீங்க?’’

``மியூஸிக் சேனல், காமெடி சேனல் மாதிரி இப்ப ஒரு பேய் சேனலே ஆரம்பிச்சுட்டாங்கலாம்.’’

- நந்தகுமார்