Published:Updated:

“வாழ்க்கை ரொம்ப நைஸ்... நைஸாப் போகுது!”

“வாழ்க்கை ரொம்ப நைஸ்... நைஸாப் போகுது!”
பிரீமியம் ஸ்டோரி
“வாழ்க்கை ரொம்ப நைஸ்... நைஸாப் போகுது!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: ஆ.முத்துக்குமார்

“வாழ்க்கை ரொம்ப நைஸ்... நைஸாப் போகுது!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
“வாழ்க்கை ரொம்ப நைஸ்... நைஸாப் போகுது!”
பிரீமியம் ஸ்டோரி
“வாழ்க்கை ரொம்ப நைஸ்... நைஸாப் போகுது!”
“வாழ்க்கை ரொம்ப நைஸ்... நைஸாப் போகுது!”

`` `கொடுத்தா, கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொடுக்கும்'னு சொல்வாங்க. இப்போ நான் அந்த மோட்லதான் இருக்கேன். மணிரத்னம் சார், முருகதாஸ் சார் படம்னு ஐ யம் வெரி பிஸி!'' - மகிழ்ச்சி மடைதிறந்து பாய்கிறது ஆர்.ஜே பாலாஜியிடம்.

``முருகதாஸ் சார் திடீர்னு கூப்பிட்டார். `உங்க ரோலுக்கு முதல்ல, நிறைய ஹீரோக்களைத்தான் பார்த்தோம். ஆனா, நீங்க இருந்தா நல்லாயிருக்கும்னு எங்க டீம்ல சொன்னாங்க'னு சொன்னார். மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படத்துல நான் நடிக்கிறேன். ஆனா, தமிழ்ல அவருக்கு நான்தான் சீனியர் ஆக்டர். எப்பூடி?'' - கண்ணாடியைத் தூக்கிப்போட்டுப் பிடிக்கிறார் மிஸ்டர் டன்டபன்டன்!

``மணிரத்னம் படத்துல எல்லாம் நடிக்கிறீங்க. அவர் உங்களோட எந்த பெர்ஃபாமன்ஸைப் பார்த்து பிரமிச்சு... தெறிச்சு... உங்களை செலெக்ட் பண்ணார்னு தெரிஞ்சுக்க, உங்க எட்டு கோடி ரசிகர்களும் ஆசைப்படுறாங்க...''

``உண்மையாவே எனக்கும் அந்த டவுட்தான் முதல்ல வந்தது... `மனுஷன் நல்லாத்தானே இருந்தார். என்னை ஏன் நடிக்கக் கூப்பிடுறார்?'னு! சிங்கப்பூர்ல ஒரு விருது நிகழ்ச்சிக்காகப் போயிருந்தேன். நான் நடிச்சதுக்கு முதன்முதல்ல விருது தர்றாங்களேனு நானே கொஞ்சம் பீதியில இருந்தேன். அந்த நேரம் பார்த்து, ஏதோ ஒரு நம்பர்ல இருந்து `உங்களுக்கு மணிரத்னம் படத்துல நடிக்க இன்ட்ரஸ்ட் இருக்கா?'னு மெசேஜ். யாருடா இது, அவார்டு வாங்கப்போற நேரத்துல கலாய்க்கிறாங்கனு நினைச்சு செக் பண்ணா, அது உண்மையாவே மணிரத்னம் சார் ஆபீஸ். உடனே சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். அவரை நேர்ல போய்ப் பார்க்கிற வரைக்கும் வாய்ல டன்டபன்டன் டன்டபன்டன்கூட வரலைங்க.

முதல்ல அவருடைய அசிஸ்டன்ட்ஸ் யாராவது பேசுவாங்கனு பார்த்தால்... மணிரத்னம் சாரே வந்துட்டார். என் ரோல் என்ன, படத்தின் கதை என்னன்னு கொஞ்சம் நேரம் பேசினார். அப்புறம்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். `என்னை எப்படி சார் செலெக்ட் பண்ணீங்க?'னு கேட்டவுடனே ஒரு சின்ன ஸ்மைலியைப் போட்டுட்டு `Go... it will be nice'னு சொன்னார். அதேபோல ஷூட்டிங் ஸ்பாட்லயும் ரெண்டு, மூணு தடவை அவர்கிட்ட `நைஸ்'னு பாராட்டு வாங்கிட்டேன். ஒருதடவை, அவர்கிட்டயே `சார், கார்த்தி, ஹீரோயின் எல்லாரையும்விட நான் ரொம்ப சுமாரா பண்றேன்னுதானே `நைஸ்... நைஸ்'னு சொல்லி உற்சாகப்படுத்துறீங்க?'னு கேட்டேன். அப்பவும் `இல்லை... இட் இஸ் நைஸ்'னு சொல்லிட்டுப் போயிட்டார். நிஜமாவே மணிரத்னம் சாரோட `நைஸ்'க்கு என்ன அர்த்தம்னு எனக்கு இப்பவும் தெரியாது. ஆனா, இவனை ஏன்டா கூப்பிட்டோம்னு அவர் ஃபீல் பண்ணாத மாதிரி நடிச்சிருக்கேன். என் கேரக்டர் என்னன்னு கேட்காதீங்க. அதெல்லாம் `நைஸ்'.''

``தமிழுக்கு முதன்முதல்ல நடிக்க வந்திருக்கும் மகேஷ்பாபு என்ன சொல்றார்?''

``ஹைதராபாத் ஷூட்டிங்லதான் முதல் தடவை மீட் பண்ணினேன்.  `இந்த ஆள் பார்க்க ஃபாரீன்காரன் மாதிரி இருக்காரே. தமிழ் தெரியுமானு தெரியலையே'னு நினைச்சேன். திடீர்னு அவரே `அப்புறம்... நீங்க இருக்கீங்கல?'னு என்னமோ புரிஞ்சும் புரியாத மாதிரி தமிழ்ல கேட்டார். `என்னது... உங்களுக்கு தமிழ் தெரியுமா?!'னு கேட்டேன். `தெரியும்... நான் சென்னையிலதானே இருந்தேன்'னு சொன்னார். அப்புறம் ரெண்டு மணி நேரம் நான்-ஸ்டாப்பா பேசிட்டே இருந்தேன். அவர் சிரிச்சுட்டே இருந்தார். அப்புறம் சென்னை வந்ததும் இன்னும் கொஞ்சம் க்ளோஸ் ஆகிட்டோம். முக்கியமா, ஹீரோக்கள் சிலர் `நான் படம் எல்லாம் பார்க்க மாட்டேங்க. என் படத்தையே நான் பார்க்க மாட்டேன்'னு சொல்வாங்க. ஆனா, மகேஷ்பாபு, நிறையப் படங்கள் பார்க்கிறார்; ஜாலியா இருக்கார். என்னதான் நான் நடிப்பு வராத ஆர்.ஜே-வா இருந்தாலும் என்னையும் ரொம்ப கம்ஃபர்ட்டபிளா வெச்சுக்கிறார். நைஸ்ல!''

``ஆனா, உங்க காமெடி ட்ராக், சந்தானம் செய்த அதே கவுன்ட்டர் காமெடியைத்தான் நினைவுபடுத்துதுனு சொல்றாங்களே?''

``நீங்கதான் முதன்முதல்ல சொல்றீங்க. ஆர்.ஜே-வா இருந்த இந்தப் பத்து வருஷத்துல, நான் ஸ்க்ரிப்ட் எழுதிவெச்சு எந்த ஷோவும் பண்ணதே கிடையாது. அப்ப என்ன தோணுதோ, அதைப் பேசுவேன். ஆனா, நான் வேலை செஞ்ச முதல் சில படங்களில் வாயே மூடாத அளவுக்கு எழுதி எழுதி ஒரே பன்ச் லைனா இருந்தது. காமெடியே இல்லை. `நானும் ரெளடிதான்' படத்துல இருந்துதான் அந்த நேரத்துல அந்த கேரக்டர் என்ன பண்ணுமோ... அப்படிப் பண்ணலாம்னு முடிவுபண்ணினோம். இப்ப பண்ற எல்லா படத்துலயும் இப்படித்தான் நைஸ் பண்ணுறேன்.''

``நீங்க ஹீரோவா நடிக்க ஸ்க்ரிப்ட் எல்லாம் எழுதிவெச்சு நிறையப் பேர் ரெடியா இருக்காங்களாமே?''

``எங்க வீட்டுல காமெடி சேனலைப் பார்க்காமலே இதுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க. நான் டான்ஸ் ஆடி, பாட்டு பாடி, சண்டை போட்டேன்னா... நானே கண்ணையும் காதையும் மூடிப்பேன். என்கிட்ட ஹீரோவா கதை சொல்றவங்ககிட்ட `உங்க கதையில உங்களைவிட எனக்கு அக்கறை அதிகம். வேணும்னா எனக்கு இந்த காமெடி ரோல் தாங்க'னு சொல்லிடுவேன். இதுதான் நைஸ்!''

``சோஷியல் மீடியா ட்ரெண்ட்லயே வளர்ந்தவர் நீங்க. இந்த மீடியத்தை இன்றைய இளைஞர்கள் எப்படிப் பயன்படுத்துறாங்கனு நினைக்கிறீங்க?''

`` `சோஷியல் மீடியா, சாதகமா... பாதகமா?'னு தீபாவளிப் பட்டிமன்றம் மாதிரி பார்க்க வேண்டாம். எல்லா மீடியம்லயும் நெகட்டிவ் இருக்கத்தான் செய்யுது. ஆனா, நாம எப்படி அதை நல்லதுக்குப் பயன்படுத்திக்கிறோம் கிறதுதான் முக்கியம். ஒலிம்பிக் போற ஒரு டீமுக்குக் காசு இல்லை, ஸ்பான்ஸர் கிடைக்கலைனு கேள்விப்பட்டதும், ஒரு ட்வீட் மூலமா மூணு நாளில் அவங்களுக்குத் தேவையான பணத்தைத் திரட்ட முடியுது. ஹார்ட் வேணும்னு 13 வருஷங்களா ஏங்கிக்கிட்டிருந்த ஒரு குழந்தைக்கு, ஒரு வீடியோவால் ரெண்டே வாரத்துல உதவி செய்ய முடியுது. ஒரு சிட்டியே மழை வெள்ளத்தில் மூழ்கும்போது ஆயிரம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி லட்சம் பேருக்கு உதவ முடியுது. இதுல இவ்வளவு பாசிட்டிவ் பக்கங்கள் இருக்கு. ஆனா, மாத்தி மாத்தித் திட்டிக்கிறது, அஜித், விஜய் சண்டை போடுறதுனு நெகட்டிவ் பக்கங்களும் இருக்கு. இதுல நான் ஒரு விஷயத்தை ஆரம்பத்துல இருந்தே கடைப்பிடிக்கிறேன். என்னன்னா, நான் ஒரு  வீடியோ போட்டுட்டேன்னா, அதுக்கு என்ன கமென்ட்ஸ் வந்திருக்குனு பார்க்கவே மாட்டேன். பார்த்தால் எனக்குதான் அது மனஉளைச்சல். நைஸ்!''``உங்க ஹ்யூமர் சென்ஸுக்கு யார் இன்ஸ்பிரேஷன்?''

``எங்க அம்மா. நாங்க ரொம்ப ஜாலியான குடும்பம். அண்ணன், தம்பி, தங்கச்சிங்க நாங்க மொத்தம் அஞ்சு பேர். எங்களை, எங்க அம்மா ஒரே நாளில் மூணு படத்துக்குக் கூப்பிட்டுப் போவாங்க. அப்பத்தான் எனக்கு ஏதாவது எக்ஸாம் இருக்கும். படிச்சுட்டிருப்பேன். `வாடா `விருமாண்டி' பார்க்கப் போகலாம்'னு கூப்பிடுவாங்க. `செமஸ்டருக்குப் படிக்கிறேன்மா'னு சொன்னால், `எப்படியும் அரியர் வைக்கப்போறே... வாடா!'னு இழுத்துட்டுப் போயிடுவாங்க. நான் 100 வார்த்தை பேசுறேன்னா, எங்க அம்மா 1,000 வார்த்தை பேசுவாங்க. அவங்களுக்கு ஹ்யூமர் சென்ஸ் நைஸ்!''

``உங்க ஃபேமிலி?''

``நான் 20 வயசுலேயே ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் மனைவி பேரு திவ்யா. `நான் உருப்பட மாட்டேன், தறுதலை, 20 அரியர் இருக்கு, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவன்'னு என் காலேஜ் டீச்சர்ஸ் எல்லாம் நினைச்சுட்டு இருந்தாங்க. ஆனாலும் அப்பவே `நீ செம டேலன்ட். உன் மேல நம்பிக்கை இருக்கு'னு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. கல்யாணம் ஆன இந்த பத்து வருஷத்துல நான் சக்சஸாகி இருக்கேன்னா, அதுக்கு என் மனைவிதாங்க காரணம். இது கடைசி நைஸ்!''