Published:Updated:

‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!

‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!
பிரீமியம் ஸ்டோரி
‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!

ம.கா.செந்தில்குமார்

‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!
பிரீமியம் ஸ்டோரி
‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!
‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!

‘‘இயக்குநர் அட்லி என் நண்பர். அவர்தான், ‘ரெமோ’வின் ஆரம்பப்புள்ளி. இந்தப் படத்தின் ஒரு காட்சியை முதல்ல அவர்தான் எனக்கு சொன்னார். ‘சூப்பரா இருக்கே’ன்னேன். ‘என் அசிஸ்டன்ட் பாக்கியராஜ் உனக்காகத்தான் எழுதிட்டிருக்கான். அதுல உள்ள சீன்தான் இது. நல்லாயிருக்கும் கேளு’ன்னார். ‘நல்லா இருக்கு. ஆனா இப்பப்போய் பெண்ணா நடிக்கணுமானு யோசனையா இருக்கு?ன்னேன். ‘கேளு. பிடிச்சிருந்தா பண்ணு’ன்னார். கதையை நான்கைந்து முறை கேட்டுட்டு, ஒரு புள்ளியில் ‘எல்லாருக்குமான விஷயங்களும் என்டர்டெயின் மென்ட்டும் இருக்கு. நிச்சயம் இந்தப் படத்தைப் பண்றோம்’னு முடிவுபண்ணினேன். அப்படித்தான் ‘ரெமோ’ தொடங்குச்சு’’ - லேடி கெட்டப், வைரல் ட்ரெய்லர், மாஸ் பிசினஸ்... என செம லைன்அப்பில் இருக்கிறார் ‘ரெமோ’ சிவகார்த்திகேயன்.

‘‘ ‘ரெமோ’ என்ன கதை?''

`` ‘ஏன் அந்தப் பெண் கெட்டப்?’ - இதுதான் கதையின் மையம். ட்ரெய்லர்ல, ‘காதலிக்கிற பொண்ணு கிடைக்கணும்னு முயற்சிபண்ணாதவன், அந்தப் பொண்ணு கிடைக்கலைனு வருத்தப் படுறதுக்குத் தகுதியே இல்லாதவன்’னு ஒரு டயலாக் வரும். அதுதான் கதையே. எளிமையா சொன்னா, பெண் வேஷம் போட்டுட்டுப் போய், ஒரு பெண்ணை எப்படி இம்ப்ரஸ் பண்ணினான் என்பதுதான். ` ‘அந்நியன்’ல விக்ரம் சார் தன் லுக்கை மாத்திக்கிட்டு போய் லவ் பண்ணுவார். அதனால இந்தக் கதைக்கு ‘ரெமோ’தான் சரியான தலைப்பா இருக்கும்'னு ஸ்க்ரிப்ட்ல வொர்க் பண்ண நண்பர் அருண்ராஜா சொன்னார். தேங்க்ஸ் டு அருண்.’’

‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!

‘‘அந்த லேடி கெட்டப்புக்கு வீட்ல என்ன சொன்னாங்க?’’

‘‘எங்க அம்மா மட்டும் முதல்ல, ‘எப்புடிடா, ஐயய்யோ!’ன்னவங்க, ‘நல்லா இருந்தா சரி’ன்னாங்க. பிறகு லுக் டெஸ்ட்ல முதல் இரண்டு முறை பண்ணினது சரியா வரலை. குழம்பிட்டேன். அதனால ஒவ்வொரு லுக் டெஸ்ட் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது, ‘இன்னைக்குச் சரியா வந்துச்சா?’னு வீட்ல மனைவி கேட்பாங்க. இப்படி நாலைஞ்சு லுக் டெஸ்ட் போன பிறகுதான் இப்ப நீங்க பார்க்கிற இந்த நர்ஸ் லுக்கை ஃபைனல் பண்ணினோம். நர்ஸ் கெட்டப் போட்டோவை முதல்ல என் மனைவிகிட்டதான் காட்டினேன். அதைப் பார்த்ததும், ‘ஐய்ய்ய்...’னு ஒரு ரியாக்‌ஷன். ‘கண்டிப்பா வொர்க்கவுட் ஆகும்’னு சந்தோஷமா இருந்தது.’’

‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!

‘‘மீண்டும் கீர்த்தி சுரேஷ் காம்பினேஷன். அவங்க எப்படி நடிச்சிருக்காங்க?’’

‘‘காதலுக்காக ஒருத்தன் வேஷம் போட்டு ஏமாத்துறான்னா அவங்க அழகான, அப்பாவியான பொண்ணாதான் இருக்கணும். ‘அதுக்கு ஹோம்லி லுக் கீர்த்தி சரியா இருப்பாங்க’னு எல்லாருமே சொன்னாங்க. ‘ரஜினிமுருகன்’-ஐ தொடர்ந்து இன்னொரு படமா?’னு யோசிக்கும்போது, பி.சி சார்தான் ‘கலர் டோன், டிரஸ்ஸிங்ல இருந்து வெவ்வேறயா இருக்கிறதால இந்தப் படத்துக்கு பெஸ்ட் ஆப்ஷன் அவங்கதான்’னு சொன்னார். 15-வது நிமிஷம் படத்துக்குள் வந்தாங்கன்னா, கடைசி ஷாட் வரை இருப்பாங்க. ‘நான் இப்படிப் பண்ணப்போறேன் கீர்த்தி, அதுக்குத் தகுந்த மாதிரி நீங்க பண்ணிக்கங்க’ன்னா போதும் ரிகர்சல்கூட எங்களுக்குத் தேவை இல்லை. டேக் போயிடலாம். அடுத்து அவங்களோட பலம், தமிழ் நல்லா பேசுறதும் புரிஞ்சுக்கிறதும். ஹ்யூமர் போர்ஷன் வரும்போது நான் நிறைய விஷயங்கள் சொல்வேன். அதை உடனடியா அடாப்ட் பண்ணிப்பாங்க. நான் நர்ஸ் கேரக்டர்ல வரும்போது அவங்களும் குட்டிக்குட்டி கரெக்‌ஷன்ஸ் சொல்வாங்க. கீர்த்தி, எமோஷன்ஸை ஸ்க்ரீன்ல கொண்டுவர்றதுல ரொம்ப ஸ்ட்ராங்.’’

‘‘அனிருத் ஆல்பம் மாஸ் ஹிட். ஒவ்வொரு படத்திலும் அந்த மேஜிக் எப்படி நிகழுது?’’

‘‘அவர் தனக்குத் திருப்தி தராத ஒரு விஷயத்தைப் பண்ணவே மாட்டார். தனக்குப் பிடிக்காத பாடலை  இதுவரை அவர் டெலிவர் பண்ணினதே கிடையாது. நாங்க ஓ.கே-னு சொன்ன பிறகுகூட ‘வேண்டாம்’னு சொல்லி தனக்குப் பிடிச்சது வர்றவரை விட மாட்டார்.  இதுல வர்ற ‘செஞ்சிட்டாளே...’ பாடல் எங்ககிட்ட ரெண்டு வருஷமா இருக்கு. சரியான படத்துல பயன்படுத்தணும்னு காத்திருந்தார். ‘சிவாவுக்குனு வரும்போது எக்ஸ்ட்ராவா பண்ணுவேன்’ - இது அவரே சொன்னதுதான். அனி என் நண்பர், சகோதரர் மாதிரி. அனிருத், படத்துக்கு மட்டும் அல்ல; என் லைஃபுக்கே மிகப்பெரிய சப்போர்ட்.’’

‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!

‘‘நயன்தாரா காம்பினேஷன், மோகன் ராஜா டைரக்‌ஷன்... அடுத்த படம் பெரிய ஸ்கேல்ல பண்றீங்க. அது எப்படி இருக்கும்?’’

‘‘இதுவரை பெரிய டைரக்டரா ஆகப்போறவங்க கிட்டதான் வொர்க் பண்ணியிருக்கேன். இப்பதான் முதல்முறையா பெரிய டைரக்டர்கூட வொர்க் பண்ணப்போறேன். நயன்தாரா, ஃபஹத் பாசில், பிரகாஷ்ராஜ் சார், சிநேகா மேடம், சதீஷ், ஆர்.ஜே பாலாஜி, ரோபோ ஷங்கர்னு ஸ்ட்ராங் டீம்.  ஸ்ட்ராங்கான சீரியஸான களத்துக்குள் போய் என்னை நானே பரிசோதிச்சுப்பார்க்க சரியான படமா இருக்கும். இதையடுத்து பொன்ராம் சார் படம்.’’

‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!

‘‘தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத்... இந்த மூவரின் நட்பு எந்த அளவுக்கு இருக்கு?’’

‘‘என் ஆரம்பகட்டத்தில் நாங்க எல்லாரும் சந்திச்சுக்க நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. ‘எதிர்நீச்சல்’ சமயத்துல இருந்தே அந்த வாய்ப்புகள் குறைஞ்சுடுச்சு. அனிருத் வீடோ, தனுஷ் சார் வீடோ... எங்கேயாவது எப்போதாவது சந்திச்சுப்போம். பிறகு, அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அதிகமா கிடைக்கலை. கிடைக்கலைனு சொல்றதைவிட இப்ப இல்லைனு சொல்லலாம். அதுக்காக சண்டை, கோவிச்சுக்கிட்டோம், பேசிக்கிறது `இல்லை’னு கிடையாது. அவங்கவங்க படங்கள் வரும்போது, பிறந்தநாள் வரும்போது வாழ்த்துகளைப் பரிமாறிக்கிறது... அது எல்லாம் அப்படியேதான் இருக்கு.’’

‘‘சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி. இந்த ஒப்பீடு குறைஞ்சிருக்குனு நினைக்கிறீங்களா?’’

‘‘இவங்களைத் தாண்டிடணும், அவங்களை ஜெயிக்கணும்னு படம் பண்றது இல்லை. அப்படி ஒருத்தரைப் போட்டியாளரா நினைச்சு ஃபிக்ஸ் ஆகிட்டோம்னா, அவரை மட்டும் ஜெயிச்சா போதும்னு நினைக்க ஆரம்பிச்சுடுவோம். அதனால இந்த ஒப்பீட்டுக்குள் நான் போனதே இல்லை. முதல்ல மீடியாவுக்கு வந்தது நம் வறுமையை ஜெயிக்க. இப்ப அதன் மூலம் ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு.

‘ரெமோ’ சிவா ஜாலி மீட்!

அதுக்குள்ள நாம என்ன பண்ண முடியும்கிறதுதான் இப்ப எனக்கான சவால். ‘ரெமோ’கூட, என்னை நிரூபிக்கப் பண்ணினது இல்லை; என்னை அடுத்த கட்டத்துக்குத் தகுதிப்படுத்திக்கணும்னு பண்ணினது.  ‘வியாபாரமா உங்க படம் எங்கேயோ இருக்கு...’னு சொல்றாங்க. பெரிய கன்டென்ட்னா  நிச்சயம் இன்வெஸ்ட்மென்ட்டும் பெருசா இருக்கணும். அதுக்கான மார்க்கெட்டை  உருவாக்கிகிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். ஷங்கர் சார், முருகதாஸ் சார்னு பெரிய இயக்குநர்கள் படங்கள்ல நடிக்கணும்னு நிறைய நிறைய ஆசை. இப்ப இருக்கிற இடத்தை டெவலப் பண்ணி அவங்களைத் தொட்டுட முடியுமானு நினைச்சு ஓடுறேன். மத்தபடி எந்த ஒப்பீடுகளையும் நான் தலைக்குள் ஏத்திக்கிறது இல்லை.’’

‘‘சேனல் டு சினிமா. எப்படி இருக்கு லைஃப்?’’

‘‘ஒரு சிலர், ‘டக்குனு ஃபாஸ்ட்டா வந்துட்டீங்களே’னு சொல்வாங்க. இருக்கலாம். அதுக்கு, நான் தொடர்ந்து வெற்றியைக் கொடுத்திருக்கேன்னு சொல்றதைவிட, தவறுகளைக் குறைவாகப் பண்ணியிருக்கேன் என்பதுதான் காரணம். இந்த இடம் எனக்கும் ஆச்சர்யம்தான். சிலர், ‘நீங்கதான் இன்ஸ்பிரேஷன்’னு சொல்லும்போது இந்த இடத்தை இன்னும் அழகா அர்த்தமுள்ளதா எடுத்துட்டுப் போகணும்னு ஆசைப்படுறேன். அப்பப்ப மூணு வருஷங்களுக்கு ஒருமுறை ‘ரெமோ’ மாதிரி வெரைட்டி ஃபிலிம், போகப்போக நிறைய மாஸ் ஃபிலிம் பண்ணணும். நான் உங்களை என்டர்டெயின் பண்ணிட்டே இருக்கத் தயாரா இருக்கேன். என்னை வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்.’’