Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

“க்ளைமாக்ஸ்ல கிட்டார் வாசிச்சே, ஹீரோ வில்லனைப் பழிவாங்குறாரு!”

“படத்தோட பேரு?”

“கிட்டாரி!”

- கே.லக்ஷ்மணன்

ஜோக்ஸ்

`` `பணம் ஒன்பதும் செய்யும்'னு தலைவர் சொல்றாரே ஏன்?''

``பத்தாவதா அவர் கேட்ட முன்ஜாமீன் கிடைக்கலையாம் அதான்!''

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

``அடடே... காலம் எவ்வளவு மாறிப்போச்சு! இந்த டூத்பேஸ்ட்ல உப்பு மட்டும் இல்லாம... புளி, காரம் எல்லாம் சேர்த்திருக்காங்களே!''

``நீங்க வெச்சுக்கிட்டது டூத்பேஸ்ட் இல்லைங்க... புளியோதரை பேஸ்ட்!''

- எஸ்.பாலசுப்ரமணியன்

ஜோக்ஸ்

“ஆளும் கட்சி என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலைய்யா.”

“எதை வெச்சு தலைவரே அப்படிச் சொல்றீங்க?”

“என் மேல ஒரு அவதூறு வழக்குகூட பதிவாகலையே!”

- எஸ்.எஸ்.பூங்கதிர்

ஜோக்ஸ்

``தலைவர் டக்குனு வெளிநடப்பு பண்ணிட்டார்!''

``அப்புறம்?''

`` `கோர்ட்ல எல்லாம் வெளிநடப்பு பண்ணக் கூடாது'னு சொல்லி, பிடிச்சுத் திரும்பவும் சாட்சிக் கூண்டுல நிறுத்திட்டாங்க!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ்

``தலைவருக்கு 4ஜி மோகம் அதிகரிச்சிருச்சுனு எதை வெச்சு சொல்றீங்க?''

``நாட்டுத் தலைவர்களின் பெயர்களைச் சொல்லும்போது காந்தி`ஜியோ', நேரு`ஜியோ', நேதா`ஜியோ'னு சொல்றாரே!''

- தொண்டி முத்தூஸ்