Published:Updated:

“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”

“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”

பா.ஜான்ஸன்

“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”

பா.ஜான்ஸன்

Published:Updated:
“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”
“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”

``போலீஸ் படங்கள்னாலே அதில் வர்ற ஹீரோ, விறைப்பும் முறைப்புமா, நீதி, நேர்மை, கண்ணியமாத்தான் பார்த்துப் பழகியிருப்போம். இல்லைன்னா, இன்னொரு எக்ஸ்ட்ரீம்ல வில்லனாப் பார்ப்போம். ஆனால், நிஜத்தில் ஒரு போலீஸ்காரர் எப்படி இருப்பார்? அவருக்கும் பயம் இருக்கும், பிரச்னைகள் இருக்கும், குடும்பம் இருக்கும். அந்த மாதிரி ஒரு போலீஸ்தான் இந்த ‘நிபுணன்' '' -  `அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் மூலம் சைல்டு அப்யூஸ் பிரச்னையைப் பற்றி பேசிய இயக்குநர் அருண் வைத்தியநாதன், இந்தமுறை கையில் எடுத்திருப்பது க்ரைம் த்ரில்லர்.

“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”

``பல போலீஸ் கதாபாத்திரங்களில் அர்ஜூனை ஏற்கெனவேப் பார்த்திருக்கிறோம். இதில் என்ன

“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”

வித்தியாசம்?''

``உண்மையான போலீஸா அர்ஜூன் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம். பெரிய லெவல் குற்றவழக்குகளை எல்லாம், க்ரிமினல் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மென்ட்தான் விசாரிக்கும். அந்த மாதிரி ஒரு டிபார்ட்மென்ட்ல இருக்கும் போலீஸ்தான் அர்ஜூன். அவருடைய உதவியாளர்கள் பிரசன்னா, வரலட்சுமி. படத்தில் அர்ஜூன் சார் இருக்கார் என்பதற்காக, அவரே எல்லாத்தையும் பண்ண மாட்டார். அவர் அந்த டீம் லீடர். பிரசன்னாவும் வரலட்சுமியும் அவருக்கு ரெண்டு கைகள். அர்ஜூன் சாரோட டெடிகேஷன்தான் என்னைப் பிரம்மிக்கவெச்சது.  நடிகர், இயக்குநர்னு அவர் பார்க்காத வெற்றிகள் இல்லை. ஆனால், சின்னத் தலைக்கனம்கூட அவர்கிட்ட கிடையாது. படத்துக்கான ரிகர்சலில்கூட கலந்துக்கிட்டார். படத்துல அவ்ளோ இன்வால்வ்டா இருந்தார்.''

“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”

``பிரசன்னாவும் வரலட்சுமியும் இந்தக் கதையில் எப்படிப் பொருந்தினார்கள்?''

``அர்ஜூன் சார் டப்பிங் முடிச்சுட்டு, பிரசன்னாவையும் வரலட்சுமியையும் ரொம்பப் பாராட்டினார். அவங்களோட நடிப்பு, இந்தப் படத்துல ரொம்ப வித்தியாசமா இருக்கும். வரலட்சுமிக்கு `தாரை தப்பட்டை'யில் இருந்து அப்படியே வேற ஒரு வெர்ஷன். ரொம்பப் புத்திசாலித்தனமான, தைரியமான கேரக்டர். பிரசன்னா வருவுக்கு ஆப்போசிட். புத்திசா லித்தனமா பேசும்போது எல்லாம் வரலட்சுமியைக் கலாய்ச்சுக்கிட்டே இருப்பார். ‘லூசியா’ படத்தில் நடிச்ச ஸ்ருதி ஹரிஹரன் நடிச்சிருக்காங்க. வைபவ், ஒரு ரோல் பண்ணியிருக்கார். ஒரு பெரிய படையே படத்தில் இருக்கு''

“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”
“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்!”

``முதல் படமான ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, நீங்க தயாரிச்ச ‘கல்யாண சமையல் சாதம்’, மலையாளத்தில் நீங்க இயக்கின ‘பெருச்சாளி’னு அந்தப் படங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கலைனு வருத்தம் உண்டா?''

``நான் அமெரிக்காவில் குறும்படங்கள் எடுத்திட்டிருந்தபோது நான் படிச்ச ஒரு நிஜ சம்பவத்தின் பாதிப்பில் எடுத்ததுதான் `அச்சமுண்டு அச்சமுண்டு'. `கல்யாண சமையல் சாதம்' படத்தின் ஒன்லைனை அந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா சொன்னப்போ, ஒரு கல்யாண சினிமானு மட்டும்தான் ப்ளான் பண்ணோம். அதுக்குப் பிறகு நிறைய விஷயங்கள் சேர்த்தோம். படம் பார்த்துட்டு எங்களுக்கு நெருக்கமானவங்களே `இதை எல்லாம் ஏன் சினிமாவா எடுத்துக்கிட்டு?'னு கேட்டாங்க. ஆனா, இதுவும் ஒரு பிரச்னைனுதான் எடுத்திருக்கோம். அதையும் எவ்வளவு ஜாலியா, எவ்வளவு டீசன்டா எடுக்க முடியுமோ அவ்வளவு கவனமா எடுத்தோம். ஆனா, இந்த விஷயத்தை எல்லாம் இன்னும்கூட ரகசியமாப் பேச மட்டும்தான் மக்கள் விரும்புறாங்க. மற்ற மொழிகள்ல எடுக்கும்  `ஹேங் ஓவர்', `அமெரிக்கன் ஸ்பை', `விக்கி டோனர்' போன்ற படங்கள் ஓடும். ஆனா, நம்ம ஊர்ல இப்படி ஒரு விஷயம் பண்ணா, அது எல்லாரையும் சங்கடப்படுத்துது.''

நம்ம ஊர்ல நடக்கும் பொலிட்டிக்கல் ஸ்டன்ட்ஸ் வெச்சு வெளிநாட்டில் நடக்கும் தேர்தல்ல எப்படி ஜெயிக்கிறதுனு பண்ணின சட்டையர்தான் `பெருச்சாளி'. படத்தின் ஸ்க்ரிப்ட்டை மோகன்லால் சாருக்கு ரொம்ப நாள் முன்னாடியே அனுப்பி, அவர் படிச்சு, அவருக்கு ரொம்பப் பிடிச்சு பண்ணினார். இது பிடிக்கும்... இது பிடிக்காதுனு யாருக்குமே தெரியாதுல. நாமளே பத்து வருஷம் முன்னால ரசிச்ச படத்தைப் பார்த்து ‘ஐயோ... இதை எல்லாம் எப்படித்தான் ரசிச்சோமோ!’னு நினைப்போம். பிடிக்காத ஒரு படம் இப்போ பிடிக்கும். அவ்ளோதான்.''