Published:Updated:

தொடரி - சினிமா விமர்சனம்

தொடரி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
தொடரி - சினிமா விமர்சனம்

தொடரி - சினிமா விமர்சனம்

தொடரி - சினிமா விமர்சனம்

தொடரி - சினிமா விமர்சனம்

Published:Updated:
தொடரி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
தொடரி - சினிமா விமர்சனம்
தொடரி - சினிமா விமர்சனம்

டெல்லி டு சென்னை ரயிலில், தனுஷ் கேன்டீன் ஊழியர். மத்திய மந்திரி, அவரது கமாண்டோக்கள், ஒரு நடிகை என வெரைட்டியான பயணிகள். அதில் நடிகையின் டச்சப் பொண்ணு கீர்த்தி சுரேஷ். லோகோ பைலட் (ட்ரெயின் டிரைவர்தாங்க) மயங்கி ஸ்பீடு லிவரில் விழுந்து மரணிக்க, 120 கிலோ மீட்டர் வேகத்தில் தறிகெட்டு ஓடுகிற ரயிலை எப்படித் தடுத்து நிறுத்தினார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

எந்த கெட்டப்பும் இல்லாத இயல்பான தனுஷ், `நடிப்புதான் சார் கவர்ச்சி’ எனச் சொல்லிச் சொல்லி ஸ்கோர் செய்கிறார். `சார், அவ லூஸு சார்!' என, காதலியையே கலாய்ப்பது, கமாண்டோ ஹரீஷ் உத்தமனை மந்திரியிடம் மாட்டிவிடுவது, ட்ரெயினையே காப்பாற்றும்போதும் கவுன்ட்டர் கொடுப்பது என, பார்ட்டி பக்கா. ஆனா...  சரி விடுங்க!

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் கோடம்பாக்கத்தில் நட்டு கழண்ட ஹீரோயின். `வலிக்குதுப்பா' என்பதைக்கூட வாய் திறந்து சிரித்தபடி சொல்கிறார். நமக்குதான் கவுண்டமணி போல `ஆத்தா... குழந்தை பயப்படுது!' வசனம் நினைவில் வந்துவிடுகிறது.

மைண்ட் வாய்ஸுக்கு மைக்ரோபோனை மாட்டித் தெறிக்க விட்டிருக்கிறார் தம்பி ராமையா. மீசையில் மட்டுமே வெரைட்டி என்றாலும், சிரிப்பு கியாரன்டி. ராதாரவி, ஆர்.வி.உதயகுமார், தர்புகா சிவா, கருணாகரன் என கோச்-க்கு இரண்டு என ஸ்டார் பட்டாளம்.

`தொடரி' தலைப்பு அழகு. மொத்தக் கதையையும் ஒரு ரயிலில் என்ற பிரபுசாலமனின் ஐடியாவும் அட்டகாசம். ஆனால், சர்க்கரைப் பொங்கலுக்கு வடைகறிதான் சைட் டிஷ் என்பதுபோல, இந்தப் பரபர திரைக்கதையிலும் வழிய வழிய காமெடி, காதலை ஊற்றியிருப்பதுதான் தாங்க முடியவில்லை.

படத்தின் முதல் 45 நிமிடங்களை அப்படியே வெட்டி ஃப்ரீஸரில் வைத்துக்கொள்ளலாம். 120 கிலோ மீட்டர் வேகத்தில் பிரேக் இல்லாமல் ஓடும் ரயில் மீது, தனுஷ் பிரேக் டான்ஸ் ஆடுகிறார்; காலாட்டி கவிதை படிக்கிறார்; கைகளை விரித்து காற்றை அளக்கிறார். கொசுவத்திச் சுருள் ஏற்றித்

தொடரி - சினிமா விமர்சனம்

தூங்கவில்லை என்பது மட்டுமே மிஸ்ஸிங். அதனாலேயே, கதையின் வீரியம் ஆடியன்ஸுக்கு ஏற மறுக்கிறது.    
அதே டெம்ப்ளேட் மெட்டுகள் காலாவதி ஆகிவிட்டதை இமான் புரிந்துகொள்ளவேண்டிய நேரம் இது.  வி.மகேந்திரனின் கேமரா 1,008 மெகாபிக்ஸல்போல. எதை எடுத்தாலும் அழகு அப்பிக்கொள்கிறது. ஸ்டன்ட் சிவாவுக்கு எக்கச்சக்கப் பாராட்டுக்கள்.

சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்தான். ஆனால், எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று போவதுதான் சோகம்!

- விகடன் விமர்சனக் குழு