Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 20

குறும்புக்காரன் டைரி - 20
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 20

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 20

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 20
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 20
குறும்புக்காரன் டைரி - 20

யுத பூஜைக்காக வீட்டைச் சுத்தம் செய்யணும்னு அம்மா சொன்ன நாளில் இருந்து, நானும் என் அண்ணன் லோகேஷும் பயங்கர பிஸி. ஆமாம்... ஸ்ரீ குரூப் ஸ்டடியை இப்பவே ஆரம்பிக்கிறோம், டீச்சர் அவங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க’னு கிளம்பிடுவோம். வீட்டுல தங்கறதே இல்லை. ஒரு வழியா ஆயுத பூஜை அன்னிக்கு காலையில் புத்தகங்களை எடுத்து, தூசித் தட்டிக்கிட்டு இருந்தேன். அப்போ, லோகேஷ் வயித்தைப் பிடிச்சுக்கிட்டு, 'அய்யோ... அம்மா...’னு சவுண்டு கொடுத்துக்கிட்டே வந்தான்.

'என்னடா ஆச்சு?’னு கேட்டதும், 'பயங்கரமா வயிறு வலிக்குதுடா கிஷோர்’னு ஒரு கமல்ஹாசனை அவுத்துவிட்டான்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே ஒரு ஆப்பிளை ஆட்டைப் போட்டுத் தின்னான்.  அதுக்குள்ளே வயிற்றுவலியானு யோசிக்கும்போதே, அம்மா ரூமுக்குள்ளே வந்தாங்க. 'டேய் கிஷோர், மார்க்கெட் வரைக்கும் போகணும். லோகேஷுக்கு வயிற்று வலியாம். நீ போயிட்டு வா’னு சொன்னாங்க. அடப்பாவி இதுக்குதான் இந்த ஆக்டிங்கா?

'மார்க்கெட் வரைக்கும் தனியாவா? அவ்ளோ தூரம் எப்படி போகணும்னு தெரியாதே’னு  நான் உதட்டைப் பிதுக்க, 'சும்மா நடிக்காதேடா. மார்க்கெட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிற கிரவுண்டுலதானே விளையாடப் போவே’னு பணத்தை என் பாக்கெட்ல வெச்சாங்க.

'ஆமா... நான் நடிக்கிறது மட்டும் தெரியுதாக்கும்’னு மனசுல நினைச்சுக்கிட்டு, 'என்ன வாங்கிட்டு வரணும்?’னு கேட்டேன்.

'

குறும்புக்காரன் டைரி - 20

ஷேர் ஆட்டோவில் போ. பூஜைக்குப் பொரியும், கொஞ்சம் பழமும் வாங்கிட்டு வா. நீ 10 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கிக்கோ''னு சொல்ல, அந்த டீலிங் எனக்குப் பிடிச்சிருந்தது. உடனே கிளம்பிட்டேன்.

ஆட்டோ ஸ்டாண்ட் போனதும், 'நடந்தே போனால், போக வர 10 ரூபாய் மிச்சம் ஆகுமே, அதிலும் சாக்லேட் வாங்கலாமே’னு தோணுச்சு. ஆனா, நேத்து ஓடி ஓடி ரன் எடுத்ததில் கால் ரெண்டும் வலிக்குது. சாயந்திரம் ஃபேமிலியோடு வெளியே போகிற பிளான் இருக்கு. இந்த 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு படுத்துக்கிட்டா, லோகேஷ் பயலே மொத்தமா என்ஜாய் பண்ணிட்டு வந்துருவான். அதனால, ஆட்டோவில் போவோம்னு முடிவு செஞ்சேன்

குறும்புக்காரன் டைரி - 20

'காந்த்தீஸ்லேய்ய்ய்ய்... காந்த்தீஸ்லேய்ய்ய்ய்’னு ரொம்ப நேரமா கத்திட்டு இருந்த ஒரு ஆட்டோக்காரர், திரும்பி என்னைப் பார்த்து, 'தம்பி எங்கே போகணும்?’னு கேட்டார்.

'காந்தி சிலை மார்க்கெட்டுக்குப் போகணுங்க’னு சொன்னதும்,  'ஏம்ப்பா, அதுக்குத்தானே இவ்ளோ நேரமா கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னார்.

'அய்யோ அண்ணே... நீங்க பூஜை பண்றதுக்கு ஏதோ மந்திரம் சொல்றீங்கனு நினைச்சேன்’னு ஆட்டோவில் ஏறினேன்.

காந்த்தீஸ்லேய்ய்ய்ய்.... அடச்சே காந்தி சிலை ஸ்டாப்ல இறங்கி, மார்க்கெட்டுக்குள்ளே நுழைஞ்சேன். பொரி கடை முன்னாடி போய் நின்னதும், எவ்வளவுக்கு வாங்க சொன்னாங்கன்னு மறந்துபோச்சு.  குத்துமதிப்பா கேட்போமேனு 'அஞ்சு கிலோ பொரி கொடுங்க’னு சொன்னேன்.

'தம்பி, அஞ்சு கிலோ பொரின்னா, ஒரு சின்ன மூட்டை அளவுக்கு வரும். வீட்டுக்கா... ஃபேக்டரிக்கா?’னு சந்தேகமா கேட்டார் கடைக்காரர்.

தலையில நறுக்குனு குட்டின மாதிரி இருந்துச்சு. சட்டுனு ஞாபகமும் வந்துச்சு. 20 ரூபாய்க்கு வாங்கிட்டு, பழங்களும் வாங்கிட்டுத் திரும்பினேன். வீட்டுக்குள்ளே நுழைஞ்சா, கையில ஒரு கொய்யாப்பழத்தோடு லோகேஷ் வந்தான்.

'நான் கடைக்குப் போனதும் உனக்கு வயிற்றுவலி சரியாகி இருக்குமே. இப்படி முன்னாடியே தின்னு தின்னு மறுபடியும் என்னை கடைக்கு அனுப்பிடாதே’னு முறைக்க, அவன் 'ஹி ஹி’னு இளிச்சான்.

'கிஷோர் வந்துட்டியா? இப்போ, ரெண்டு பேருமா சேர்ந்து நீங்க அடிக்கடி யூஸ் பண்ற திங்ஸை சுத்தம் பண்ணி, பொட்டு வைங்க’னு சொல்லிட்டு அம்மா சமையல் அறைக்குள்ளே போய்ட்டாங்க.

'அம்மா எனக்கு...’னு வயிற்றைப் பிடிச்சுக்கப்போன லோகேஷ் வாயைப் பொத்தினேன். 'போதும்டா. நீ திங்கிறதைப் பார்த்துட்டாங்க. இதுக்கு மேலே நடிக்க முடியாது. என்னோடு வந்து ஹெல்ப் பண்ணு’னு இழுத்துட்டுப் போனேன்.

கையில கிடைச்ச எல்லாத்தையும் எடுத்து கழுவ ஆரம்பிச்சோம். லோகேஷ் ஓடிப்போய் சேரைத் தூக்கிட்டு வந்தான். 'கிச்சன் டாப்ல அம்மா வைக்கிற பிஸ்கட் டப்பாவை ஏறி எடுக்க இதுதானே யூஸ் ஆகுது. இதுக்கு முதல்ல பொட்டு வைப்போம்’னு சொன்னான்.

அப்போ மண்டைக்குள்ள ஒரு பல்பு எரிஞ்சது. 'லோகேஷ், நாம டெய்லி படம் பார்க்கிற  டி.வியை மறந்துட்டியே. அதுக்குத்தான் முதல் பொட்டு வைக்கணும்’னு சொன்னேன்.

'கரெக்ட்! இரு, நான் போய் டி.வியைத் தூக்கிட்டு வரேன். இங்கேவெச்சு சுத்தம் பண்ணி, பொட்டு வைப்போம்’னு லோகேஷ் ஓடினான்

குறும்புக்காரன் டைரி - 20

சில நிமிஷத்தில் தொம்னு ஒரு சத்தம். அந்த நேரம் பார்த்து, கிச்சனில் மிக்ஸி ஓட ஆரம்பிச்சது. அதாவது, டி.வி விழுந்ததுக்கும் மிக்ஸி ஓட ஆரம்பிச்சதுக்கும் நடுவில் . . . இப்படி மூணு புள்ளி இடைவெளிதான். அதனால், அம்மா கவனிக்கலை.  எனக்குத்தான் பாம்பு காது ஆச்சே? ஓடிப்போய் பார்த்தேன்.

பேய் முழி முழிச்சுட்டு இருந்தான் லேகேஷ். 'ஆஹா இன்னிக்கு வீட்டுல உனக்கு ஸ்பெஷல் ஆயுத பூஜை போலிருக்கே’னு துள்ளினேன்.

'அடேய் எட்டப்பா, சும்மா இருந்த என்னை டி.வியை எடுத்துவரச் சொன்னது நீதானே? ஹெல்ப் பண்ணு. இல்லைன்னா, ஸ்பெஷல் பூஜையில உன்னையும் சேர்த்துடுவேன்’னு மிரட்டினான்.

இவன் நிச்சயமா செய்வான். இவன் சொல்றதையும் நம்புவாங்க. அதனால், சுயநலத்தில் பொதுநலமா உதவி செய்ய முடிவு பண்ணினேன். டி.வியை எடுத்துப் பார்த்தோம். நல்லவேளை, ஸ்கிரீனில் ஸ்க்ராச் எதுவும் விழலை. தூக்கும்போது, டி.விக்குள்ளே எதுவோ உருளும் ஃபீலிங். அப்படியே  ஸ்டாண்டில் வெச்சு, துடைச்சுப் பொட்டு வெச்சுட்டு சத்தம் காட்டாமல் நகர்ந்துட்டோம்.

சாயந்திரம் பூஜை போட்டு முடிச்சதும், அப்படியே கடற்கரைக்கு கிளம்பிட்டோம். ராத்திரி வந்ததும், டயர்ட்டா படுத்துட்டோம். இதோ, இந்த டயரியை எழுதிட்டு இருக்கேன். அப்படியே ஹாலில் எட்டிப் பார்த்தேன். பொட்டு வெச்சுக்கிட்டு அப்பாவியாக இருந்துச்சு அந்தப் பெட்டி.  விடிஞ்சதும் நியூஸ் பார்க்கிறதுக்கு அப்பா, டி.வியை ஆன் பண்ணுவார். 'நிஜமான ஆயுத  பூஜை’ இருக்கா இல்லையானு அப்போதான் தெரியும்.

(டைரி புரட்டுவோம்...)