Published:Updated:

தேவி - சினிமா விமர்சனம்

தேவி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தேவி - சினிமா விமர்சனம்

தேவி - சினிமா விமர்சனம்

தேவி - சினிமா விமர்சனம்

னைவியின் உடலில் புகுந்த ஆவியைச் சமாளிக்க, அதனுடன் கான்ட்ராக்ட் போடும் கணவனின் கதை.

`மாடர்ன் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன்' என்ற பிரபுதேவாவின் ஆசையில் ஆசிட் வீசுகிறார் அவரது பாட்டி. பக்கா கிராமத்துப் பெண் தேவியை (தமன்னா), பிரபுதேவாவுக்கு உடனடித் திருமணம் செய்து, மும்பைக்கு ரயில் ஏற்றிவிடுகிறார்கள். விஷயம் நண்பர்களுக்குத் தெரியக் கூடாது என ரிமோட் ஏரியாவில் வீடு பிடித்துக் குடியேறுகிறார் பிரபு. ரூபி என்கிற பெண்ணின் ஆவி, தமன்னாவின் உடலில் புகுந்துகொண்டு `நடிகை ஆகி, ஒரு படத்தில் நடித்துவிட்டுத்தான் போவேன்’ என அடம்பிடிக்கிறது. பிரபுவும் வேறு வழி இன்றி பேயுடன் ஒரு கான்ட்ராக்ட் போட்டு அனுமதிக்கிறார். ரூபியையும் தேவியையும் பிரபுதேவா எப்படிச் சமாளித்தார் என்ற காமெடி ட்ராஜிடிகள்தான் `தேவி'.

பேய் படத்துக்குப் பேயே பேட்டன் ரைட்ஸ் எடுக்க யோசிக்கும் அளவுக்கு கோலிவுட்டில் பேய் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. வழக்கமாக, பேயை வைத்து எடுக்கப்படும் `போர்' படங்களுக்கு நடுவே பேயுடன் கான்ட்ராக்ட் என சுவாரஸ்ய லைன் பிடித்த விதத்தில் இயக்குநர் விஜய் வித்தியாசப்படுகிறார்.

நடிகர் பிரபுதேவாவை எவ்வளவு மிஸ் செய்திருக்கிறோம்? காமெடி, அக்கறை, இயலாமை, பயம் என எல்லா எமோஷன்களிலும் எகிறி அடித்திருக்கிறார். ஆவி புகுந்த பிறகு வந்திருப்பது தேவியா... ரூபியா? எனக் குழம்புவது, தமன்னாவை சோனு சூட் நெருங்கும் போது எல்லாம் கொதிப்பது, ஆவியைப் பற்றி தமன்னாவிடம் சொல்ல முடியாமல் தவிப்பது, சல்மார் பாடலில் ஆடும் அந்த ஸ்பெஷல் டான்ஸ் என வெல்கம் பேக் ப்ரோ!

தமன்னாவுக்கு தேவியாகவும் ரூபியா கவும் வித்தியாசம் காட்டவேண்டிய சவால். சரியாகச் செய்திருக்கிறார். ``மாட்டுப் பொண்ணு... மாட்டுப் பொண்ணுனு சொல்வாங்க. கடைசியில உனக்கு

தேவி - சினிமா விமர்சனம்

ஒரு மாட்டுப் பொண்ணையே கட்டிவெச்சுட்டாங் களேடா'' என, கிடைக்கும் கொஞ்ச கேப்பிலும் ஒன்லைனர்கள் தட்டுகிறார் ஆர்.ஜே.பாலாஜி.

`பேய்கூட கான்ட்ராக்ட்டா..?!' என்ற அதிர்ச்சி லாஜிக்கைச் செரிக்க முடிந்தால்தான் படம். முதல் பாதி முழுக்க, அடுத்து நடக்கப்போவதை முந்தைய காட்சியே சொல்லிவிடுகிறது. மூன்று மொழிகளில் தயாரானதால், பல மொழி நடிகர்கள் இருப்பது டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. திரும்பத் திரும்ப வரும் நான்கு லொக்கேஷன்கள் தருவதோ மேடைநாடக அனுபவம்.
பேய் படம்தான். ஆனால், சம்பிரதாயத்துக்குக்கூட பயமுறுத்தலையே பாஸ்! சாஜித்-வாஜித் இசையமைத்திருக்கும் சல்மார் பாடல் மட்டும் ஓ.கே. கோபி சுந்தரின் பின்னணி இசை, பேய்க்கான த்ரில்லைவிட சில சென்டிமென்ட் காட்சிகளை அழகாக்குகிறது.

`இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?' என்ற கேள்வியை, தியேட் டருக்கு வெளியே வந்த பிறகுதான் கேட்கத் தோன்றுகிறது. அந்தக் கேள்வி தான் படத்தின் பலமும் பலவீனமும்!

- விகடன் விமர்சனக் குழு