Published:Updated:

"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை!”

"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை!”
பிரீமியம் ஸ்டோரி
News
"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை!”

ம.கா.செந்தில்குமார்

"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை!”

‘‘ `புதுப்பேட்டை’ படத்தில் பாலகுமாரன் சார், ‘கடவுள் இருக்கான் குமாரே!’னு எழுதி யிருப்பார். அந்தப் படம் வந்தப்பவே அந்த வசனம் வைரல். பெரிய பிரச்னையில் இருந்து எஸ்கேப் ஆகிட் டோம்னா, ‘கடவுள் இருக்கான் குமாரு’னு சென்னையில் சொல் வாங்க. ‘இதையே தலைப்பா வெச்சா எப்படி இருக்கும்?’னு முதன்முதல்ல சொன்னது ஜி.வி.பிரகாஷ்தான். இது கதைக்கு பொருத்தமாவும் எல்லாரையும் லோக்கலா இணைக்கிற வார்த்தை களாவும் இருந்ததால், அதையே படத் தலைப்பா வெச்சுட்டோம்’’ - சந்தானத்தை வைத்து மற்றவர் களைக் கலாய்த்துக் கொண்டிருந்த இயக்குநர் ராஜேஷ்.எம், இப்போது இளம் பார்ட்னர் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்திருக்கிறார்.

‘‘ஜி.வி.பிரகாஷை எப்படி இந்தப் படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணீங்க?’’

‘‘‘ஒரு மியூஸிக் டைரக்டர், நடிகராகும்போது சின்னச்சின்னத் தயக்கங்கள் இருக்கும். ‘ஏதோ சின்னதா

"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை!”

ட்ரை பண்றார்’னு நினைச்சுட்டு இருந்தப்ப, ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’வில் எதையும் யோசிக்காமப் பண்ணியிருந்த அவரோட ஆட்டிட்யூட் பிடிச்சிருந்தது. தவிர, அது இளைஞர்களைக் கவர்ற வகையிலும் இருந்தது. ‘யூத்ஃபுல்லா ஜாலியான ஒரு படம் பண்ணலாம்னா நிச்சயமா ஜி.வி-யோடு தான்’னு அப்பவே தோணியது. பிறகு, இந்த ஸ்க்ரிப்ட்டும் அதே மாதிரி அமைஞ்சதால், நான்தான் முதல்ல அவரை அப்ரோச் பண்ணினேன். அப்பதான் ஜி.வி-யும் ‘அம்மா க்ரியேஷன்ஸ்’ சிவா சாரும் ஒரு புராஜெக்ட்டுக்காகப் பேசிட்டு இருந்தாங்க. எனக்கும் சிவா சார் ரொம்ப நாள் பழக்கம். அதனால் படம் டக்குனு டேக் ஆஃப் ஆகிடுச்சு.’’

‘‘படத்தின் கதை என்ன?’’

‘‘ஜி.வி., ஆனந்தி, நிக்கி கல்ராணி, மூணு பேரும் காலேஜ் கடைசி வருஷம் படிக்கும் ஸ்டூடன்ட்ஸ். மூவருமே ஃப்ரெண்ட்ஸ். மெயின் ஸ்க்ரிப்ட், அந்த மூணு பேருக்குள்ள தான் இருக்கும். ஜி.வி., இவங்கள்ல ஒருத்தரை லவ் பண்ணுவார். அதில் பிரச்னை. சின்ன பிரேக்அப். அடுத்து இன்னொருத்தரை லவ் பண்ணுவார். `இதை விடலாமா... அதைத் தொடரலாமா..!'ங்கிற குழப்பம். இந்த முக்கோணக் காதல்தான் படம்.’’

"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை!”

‘‘உங்களோட எல்லா படங்களிலும் சந்தானம் இருந்தார். இதில் அவர் இல்லையே. மிஸ் பண்ணீங்களா?’’

‘‘சந்தானம் சார், காமெடியனா 10 வருஷம் பண்ணிட்டார். ரஜினி, விஜய், அஜித்னு பெரிய ஹீரோக்கள் எல்லார்கூடவும் சேர்ந்து நடிச்சுட்டார். நிறைய நல்ல படங்கள்ல இவர் பங்கு இருக்கு. ஒரு காமெடியனா `இதுக்குமேல எதுவும் இல்லை'னு நினைக்கிற அளவுக்கு உச்சம் தொட்டார். இதிலேயே தங்கிடக் கூடாது... ஹீரோ ஆகணும்னு முடிவெடுத்து, ஜிம் வொர்க்கவுட், டான்ஸ்னு அதுக்கான வேலைகள்ல இறங்கி ஹீரோவா பண்ணிட்டு இருக்கார். நல்லாவும் நடிக்கிறார். ‘தில்லுக்கு துட்டு’ செம ஹிட். நான் கேட்டா, என் படத்துல நிச்சயம் நடிப்பார். ஆனால், என் சுயநலத்துக் காக நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை.''

‘‘இதில் ஆர்.ஜே.பாலாஜி. எப்படி இருக்கு இந்தப் புது காமெடி காம்பினேஷன்?’’

‘‘இன்னைக்கு இருக்கும் இளைஞர்கள் எல்லாருக்குமே ஆர்.ஜே.பாலாஜியைப் பிடிச்சிருக்கு. ஜி.வி-க்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருக்கு. அது படத்துலயும் வொர்க்அவுட் ஆகியிருக்கு.’’

‘‘தொடர்ந்து மூணாவது படமா ஜி.வி.பிரகாஷுக்கு ஆனந்திதான் ஜோடி. என்ன விஷயம்?’’

‘‘இந்தப் படத்துக்கு ஆனந்தி முதல் சாய்ஸ் கிடையாது. ஆரம்பத்துல மும்பை பெண்ணைத்தான் ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். அவங்க தெலுங்குல ரெண்டு படங்கள் பண்ணியிருக்காங்க. போட்டோசெஷன் எல்லாம் முடிச்சுட்டோம். அந்த நேரம் பார்த்து வேற கமிட்மென்ட்டால் அந்த பெண் ஷூட்டிங் வர முடியலை. கடைசி நேரத்துல ‘சரி, வேற யார் ஆப்ஷன்?’னு யோசிச்சப்ப, `ஆனந்தி சரியா இருப்பாங்க'னு தோணியது. ‘ஜி.வி-யுடன் ஏற்கெனவே ரெண்டு படங்கள் பண்ணியிருக்காங்க. ‘சண்டிவீரன்’ல அவங்க நடிப்பு ரொம்ப லைவ்லியா இருந்தது. அதனால் ஆனந்தியை நான்தான் தேர்ந்தெடுத்தேன்.

"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை!”

நிக்கி கல்ராணிக்கும் சமீபத்துல படங்கள் வரிசையா ஹிட். பெங்களூரு பெண்ணா இருந்தாலும் நல்லா தமிழ் பேசுறாங்க. இவங்க ரெண்டு பேரும் இந்த கமர்ஷியல் படத்துக்கு நல்ல காம்பினேஷன்.’’

‘‘உங்களோட முதல் படம் தொடங்கி இந்தப் படம் வரை எல்லா பாடல்களையும் எழுதியவர் நா.முத்துக்குமார். அவரின் திடீர் இழப்பு, உங்களை எப்படி பாதிச்சிருக்கு?’’

‘‘நான், யுவன், முத்துக்குமார் சார் மூணு பேரும் சேர்ந்து ‘சிவா மனசுல சக்தி’க்காக முதன்முதல்ல கம்போஸ் பண்ணின பாடல், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி...’. அதில் தொடங்கிய நட்பு, ‘கடவுள் இருக்கான் குமாரு’ வரை தொடர்ந்தது. அவர் இறக்கிறதுக்கு 20 நாட்களுக்கு முன்னாடி சந்தித்து, இந்தப் படத்துக்கான கடைசிப் பாடலை உட்கார்ந்து எழுதி வாங்கிட்டு வந்தேன். ஆனா, அது அவர் எனக்குத் தந்த கடைசிப் பாட்டா இருக்கும்னு அப்ப எனக்குத் தெரியாது. அந்தப் பாட்டின் சிறு போர்ஷனை சமீபத்துலதான் ஷூட் பண்ணினேன். அப்ப ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டேன். அவர் எனக்கு அவ்வளவு நெருக்கம். அவரின் இறப்பை, என்னால ஜீரணிக்கவே முடியலை.

"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை!”

நாங்கள், எல்லா பாடல்களையுமே பயணத்துலதான் எழுதியிருக்கோம். சென்னையில் இருந்து காலையில் காரை எடுத்துட்டுக் கிளம்பினா, திண்டிவனம் ரூட் போவோம். இல்லைனா ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். திடீர்னு வண்டி திருப்பதியைத் தாண்டி ஆந்திராவுக்குள்ள போயிடும். ‘இங்கே ஒரு கிராமத்துல நல்ல கடை ஒண்ணு இருக்கு. சாப்பாடு சூப்பரா இருக்கும்’னு கூட்டிட்டுப் போவார். எனக்கு புதுசா இருக்கும். ஆனால், அந்தக் கடையில் இருக்கிறவங்களுக்கு அவரை ஏற்கெனவே தெரியும். ப்ரியத்தோடு வரவேற்பாங்க. அவருக்கு மீன்தான் ஃபேவரிட். மீன் சாப்பிட்டுட்டே பேசிட்டு இருப்பார்.

கண்ணதாசன், வாலி பற்றி நிறையப் பேசுவார். வாலி சார் பாராட்டினது அவருக்குப் பெருமையான தருணம். அதை அடிக்கடி சொல்வார். இந்தத் தலைமுறை கவிஞர்கள்ல இளையராஜா சார்கூட அதிகமா வொர்க் பண்ணது நா.முத்துக்குமார்தான். அந்த அனுபவம் சொல்வார். ‘நிறைய டிராவல் பண்ணுங்க. அதுதான் மிகப்பெரிய சொத்து’ம்பார்.

ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு அவரது மரணம்.’’