“முதல் படம் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ல நடிக்கும்போது ரொம்ப ஈஸியா இருந்தது. ஏன்னா நிவின், வினீத் ஸ்ரீனிவாசன், ரஞ்சித்னு எல்லாருமே நண்பர்கள். ஒரு குடும்பம் மாதிரி செம ஜாலியா ஷூட் பண்ணோம். தமிழில் நடிக்க கௌதம் சார் கூப்பிட்டப்போகூட ஜாலியாத்தான் வந்தேன். ஆனா, தெலுங்குலயும் நடிக்கணும்னு தெரிஞ்சப்போ, கொஞ்சம் பயமா இருந்தது. எனக்கு தெலுங்கு தெரியாது. ஆனாலும், கஷ்டப்பட்டு வசனம் பேசிட்டேன். டப்பிங் மட்டும் பேசலை. ஆனா, என் முதல் தமிழ்ப் படத்துக்கும் நானே டப்பிங் பேசியிருக்கிறேன். ரொம்பச் சந்தோஷமா இருக்கு’’ - படபடவெனப் பேசகிறார் மஞ்சிமா மோகன். ‘அச்சம் என்பது மடமையடா’ நாயகி.

``கெளதம் சாரின் ஹீரோயின்கள் எனக்குப் பிடிக்கும். குறிப்பா `விடிவி’, `என்னை அறிந்தால்’ த்ரிஷா, `காக்க காக்க’ ஜோதிகா ரொம்பப் பிடிக்கும். கெளதம் சார் படத்துல நடிக்கப் போறோம்னு தெரிஞ்சதும், அதுக்கு ஏத்த மாதிரி தயாராகணுமேனு பதற்றமா இருந்தது. ஆனா, `நீ எதுவும் ப்ரிப்பேர் பண்ண வேணாம். இயல்பா இரு’னு சொல்லிட்டார். ஹீரோயின் லுக்கை எப்படி அழகா பிரசன்ட் பண்ணணும், ஒரு வசனத்தை எப்படிப் பேசினா அழகா இருக்கும்னு அவருக்குத் தெரியும். வழக்கமா அவர் படங்கள்ல வர்ற ஹீரோயின்கிட்ட இருக்கும் அதே அழகு, என் கேரக்டர்லயும் இருக்கும்.’’

``கெளதம் மேனனின் அடுத்த படத்திலும் நடிக்கிறீங்களாமே?’’

``ஆமாம்... கதை சொல்லியிருக்கிறார். அது கௌதம் சாரோட ட்ரீம் ஸ்க்ரிப்ட்ல ஒண்ணு. வெவ்வேற மொழிகளில் இருக்கிற நாலு ஸ்டார்களை வெச்சுப் பண்ற படம். ஆனா, அதை உடனடியா தொடங்க முடியாது. ரொம்பப் பெரிய புராஜெக்ட். இப்போ ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ பண்ணிட்டிருக்கார். எல்லாம் முடிச்சுட்டு அடுத்த வருஷம்தான் அந்தப் பட ஷூட்டிங் ஆரம்பமாகும்.’’

``சென்னையில் காலேஜ் படிச்ச பொண்ணு நீங்க. சென்னையை மிஸ் பண்றீங்களா?’’

``யெஸ்... என்கிட்ட `உனக்கு என்ன வேணும்?’னு கேட்டா, `சென்னையில் ஒரு வீடு வேணும்’னு சொல்வேன். சென்னை அவ்ளோ பிடிக்கும். ஸ்டெல்லா மாரீஸ்ல படிச்ச நாட்கள் அவ்ளோ ஸ்வீட். காலேஜ் கட் பண்ணிட்டு தியேட்டருக்குப் போய் படம் பார்க்கிறது, எழுந்து ஆடறதுனு செம கலாட்டா பண்ணுவோம். அப்பவே நான் கௌதம் சாரை காபி ஷாப்ல நிறைய முறை பார்த்திருக்கேன். சிம்புவையும் பார்த்திருக்கேன். அவங்ககூட சினிமாவில் இருப்பேன்னு அப்போ தெரியாது.

`வடக்கன் செல்ஃபி’ படத்துல நடிச்சப்போ, என்னை யாருக்கும் தெரியாது. ஆனா, `தள்ளிப் போகாதேனு ஒரு பாட்டு வந்ததுமே ‘ஹேய்... தள்ளிப் போகாதே பாட்டுல வர்ற பொண்ணு!’னு எங்கே போனாலும் அடையாளம் கண்டுபிடிச்சுடுறாங்க. அதனால இப்போ சென்னையில ஜாலியா சுத்த முடியலை.’’

``உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்க?’’

``அப்பா விபின் மோகன், மலையாள சினிமா ஒளிப்பதிவாளர். அம்மா கிரிஜா, ஹவுஸ் வொய்ஃப். அண்ணன் பெங்களூருல வேலை பார்க்கிறார்.’’

``ரியல் லைஃப் மஞ்சிமா எப்படி?’’

``அம்மா, அப்பா, கீர்த்தி சுரேஷ் மாதிரி கொஞ்சமே ஃப்ரெண்ட்ஸ். இவங்ககூடத்தான் நிறையப் பேசுவேன். மியூஸிக் பிடிக்கும். புதுப்புது ரெஸ்டாரன்ட்ஸ் போய் சாப்பிடுறது பிடிக்கும். இதை எல்லாம்விட தூங்குறது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். விட்டா, ஒருநாள் முழுக்கக்கூடத் தூங்குவேன். இவ்ளோதான் ரியல் மஞ்சிமா.’’