படித்தால் அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் 12 வயது பிரியங்கா சோப்ரா. அப்பாவும் அம்மாவும் விவாதித்தனர். இருவரையும் சம்மதிக்கவைத்தார். நண்பர்களால் அமெரிக்கா அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ஆனால், பள்ளியில்தான் பிரச்னை... `உன் மேல மசாலா வாசனை அடிக்குதுடி, தள்ளி உட்காரு…’ என தன் வாழ்க்கையில் முதன்முதலாக இன துவேஷத்தைச் சந்தித்தார் பிரியங்கா. சக மாணவிகள் அவரை, ‘ஆசியப் பெண்’, ‘ப்ரௌன் கேர்ள்’ என விநோதமான பட்டப் பெயர்கள் வைத்து தொடர்ச்சியாக அவமதிக்க, பிரியங்காவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்த மாணவிகளைக் கண்டாலே நடுங்குவார்... Xenophobic.

‘அந்தப் பெண்ணின் பெயர் ஜீனைன். அவள் என்னை நடத்திய விதம் நோகடிக்கக் கூடியதாக இருந்தது. நாம் குழந்தையாக இருக்கும்போது, நம்முடைய வேர்கள் பற்றி பெருமையாக நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், அவைதான் நாம் அவமானப்பட காரணமாக இருந்தால், அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.’

இனவெறி மாணவர்களைச் சமாளிக்க முடியாமல் இந்தியாவுக்கே திரும்பினார் பிரியங்கா. அந்த நாட்டின் மீது இருந்த, அத்தனை வண்ணங்களும் சித்திரங்களும் அழிந்துபோயிருந்தன. இனி இந்த ஊருக்கே வரக் கூடாது என்பதுதான் பிரியங்கா அப்போது எடுத்த முடிவு.

20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா அமெரிக்காவுக்குப் போகிறார்... ஆனால், இந்த முறை 50 திரைப்படங்களில் நடித்த பாலிவுட்டின் மிகப் பெரிய நட்சத்திரமாக, பல விருதுகளை வென்றவராக. அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் அழைத்திருந்தது. அந்த நிறுவனத்தின் சீரியல் ஒன்றில் பிரியங்காதான் நாயகி. முழுத் திரைக் கதையையும் கொடுத்துப் படிக்கச் சொன் னார்கள். படித்து முடித்து ஷூட்டிங்குக்குத் தயாராக இருந்தவரை, ஆடிஷன் பண்ண வேண்டும் என அழைத்தனர். ஏழு பேர் எதிரில் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி, நிரூபித்து, வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும். இதெல்லாம் அவருக்கு அவசியமே இல்லாதது. பாலிவுட்டின் ராணிகளில் ஒருவர் பிரியங்கா. ஆனால், அவருக்கு அந்தச் சந்தர்ப்பம் மிகவும் புதியதாக இருந்தது. வெற்றிகளை நேசிக்கிற துடிப்பு அவரிடம் தீராமல் இருந்தது.

‘பதற்றத்தில் என் கைகள் ஈரமாகிவிட்டன. வாஷ் ரூமுக்குச் சென்றேன். அங்கே என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன். `நீ இதுவரை 50 படங்கள் செய்திருக்கிறாய். உனக்கு என்ன பிரச்னை. ஏன் பதற்றமாகிறாய்’. என்னை அமைதியாக்கிவிட்டு மீண்டும் சென்றேன். நடித்துக் காட்டி னேன். வாய்ப்பு கிடைத்து விட்டது’ - இதுதான் பிரியங்கா.

2000-ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றவர் பிரியங்கா. இறுதிப் போட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

‘இப்போது உயிரோடு வாழ்கிறவர்களில் நீங்கள் அதிகம் மதிக்கும் நபர் யார்?’

கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னார் 17 வயது பிரியங்கா… `மதர் தெரேசா’ என.

நல்ல பதில்தான். எனினும் அப்போது மதர் தெரேசா உயிரோடு இல்லை. பிரியங்காவின் பதில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. `அழகு இருக்கு... ஆனா அறிவு இல்லையே’ என்று கேலிக்கு ஆளானார். ஆனால், பிரியங்கா அதற்கு எல்லாம் அசந்துபோகிற ஆள் இல்லை. மிஸ் வேர்ல்டு என்ற சின்னச் சட்டகத்துக்குள், அவர் தன்னைப் பொருத்திக் கொண்டு அழகு பொம்மையாக மட்டுமே வலம்வர விரும்ப வில்லை.

பள்ளியில் பிரியங்காவின் பட்டப்பெயர் ‘கில்லர்’. போட்டி எதுவாக இருந்தாலும், அதில் எப்பாடுபட்டாவது வெற்றிபெறுகிற பெண்! இப்போதும் பிரியங்கா கில்லர்தான். அதனால்தான் ஹாலிவுட்டின் கதவுகளை உடைத்து நுழைந்துவிட்ட பிறகும், `நான் யார்னு எனக்குத் தெரியும். அமெரிக்கா எனக்கு மார்க் போடத் தேவை இல்லை’ எனத் தடாலடியாகப் பேசுகிறார்!

பிரியங்கா, ஆஸ்கர் மேடையில் கம்பீரமாக நின்றார்; வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அழைக்கப்பட்டார்; ஹாலிவுட் படம் ஒன்றில் வில்லியாக நடிக்கிறார்; அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதை, எம்மா ராபர்ட்ஸ் மாதிரி உள்ளூர் ஆட்களோடு போட்டியிட்டு வென்றார். இன்னொரு பக்கம் இந்தியாவில் ஒரு தேசிய விருது, பத்ம மரியாதை.

மிஸ் வேர்ல்டு வெற்றிக்குப் பிறகு 2002-ல் அவர் `அடுத்தது என்ன?’ என்று திசைபுரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் இரண்டு விஷயங்களைச் செய்தார். ஒன்று - தமிழ்ப் படத்தில் (தமிழன்) நடிக்க முடிவெடுத்தது; இரண்டாவது - தன் காதலனின் தாயார் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றது. இரண்டுமே தோல்வியில் முடிந்தது.

முறையாக நடிக்கத் தெரியாது. இருந்தும் கஷ்டப்பட்டுச் சமாளித்திருப்பார் பிரியங்கா. தன் சொந்தக் குரலில் ஒரு பாடலும்கூடப் பாடியிருப்பார். ஆனால், ‘தமிழன்’ படம் அவர் நினைத்த வாய்ப்புகளையோ, பாராட்டுகளையோ பெற்றுத்தரவில்லை. தோல்வியைத் தூக்கிக் கொண்டு மும்பைக்குத் திரும்பிவிட்டார். திரையில் பெரிய அளவில் சோபிக்கமுடியாத யுக்தா முகியோடு பிரியங்கா ஒப்பிடப்பட்டார்.

அடுத்த ஆண்டு வெளியான ‘அந்தாஸ்’ அத்தனை பேருக்கும் பதிலடி தந்தது. அதன் பிறகு வெளியான ‘அய்ட்ராஸி’ல் பிரியங்கா காட்டிய வில்லத்தனம், பாலிவுட்டில் அவருக்கு நிரந்தர இடத்தை உறுதிசெய்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஷாருக் கானுடன் `டான்’, ஹ்ருத்திக் ரோஷனுடன் `க்ரிஷ்’ என, பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்தார்.

2008-ம் ஆண்டு வெளியான `ஃபேஷன்’, பிரியங்காவின் சினிமா வாழ்வில் முக்கியமான படம். மாடலிங் உலகத்தின் வக்கிர முகங்களைத் தோலுரித்துக்காட்டும் மேக்னா மாதுராக அத்தனை யதார்த்த நடிப்பு. அவருடைய திறமைக்கு முதன்முதலாக தேசிய விருது அங்கீகாரம் கிடைத்தது. அதற்குப் பிறகு தன்னுடைய பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தருகிற மாதிரி வேடங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார்.

`மேரிகோம்’ - பிரியங்கா வாழ்வில் மிகக் கடினமான படம். `பர்ஃபி’யில் பார்த்த ஆட்டிசம் வந்த அந்த அப்பாவிப் பெண் ஜில்மிலியா இவர் என்று, நம்பவே முடியாத அளவுக்கு முழுமையான சேஞ்ச் ஓவர்! மேரிகோம், 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உருவாக்கிய உடல் அமைப்பை, பிரியங்கா மூன்றே மாதங்களில் உருவாக்க வேண்டும். மேரிகோம் பாணியிலேயே பாக்ஸிங் ரிங்கில் சண்டையிட வேண்டும். 90 நாட்கள் நான்ஸ்டாப்பாக பாக்ஸிங் ரிங்கிலும் ஜிம்மிலுமே தவம் கிடந்தார் பிரியங்கா. முழுமையாக அந்த விளையாட்டைக் கற்றுக்கொண்டார்.

‘பாக்ஸிங் செய்வதுபோல நடிக்கவே முடியாது. அது ஒரு மதம். அதைக் கற்றுக்கொண்டு முழுமையாகப் பின்பற்றத்தான் முடியும். நான் அதைக் கற்றுக்கொண்டேன். இன்று பாக்ஸிங் என் வாழ்க்கையில் ஒரு பகுதி’ என்கிறார் பிரியங்கா.

`மேரிகோம்’ பட ஷூட்டிங் ஆரம்பிக்க நான்கு நாட்கள் முன்னர் பிரியங்காவின் அப்பா அசோக் இறந்துவிட அதிர்ந்துபோனார் பிரியங்கா. ஆனால், தன்னுடைய சோகம், துக்கம், இழப்பு அத்தனையையும் தன் நடிப்பாக வெளிப்படுத்தினார். ‘என் ஆத்மாவின் ஒருபகுதி இந்தப் படத்தில் இருக்கிறது’ என்றார்.

பிரியங்காவின் அர்ப்பணிப்புக்கும் திறமை யான நடிப்புக்கும் இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்தது. `சஞ்சய் லீலா பன்சாலி’யில் பாஜிராவோ, `மஸ்தானி’யின் காசிபாயாக நடித்த போது, பிரியங்காவை அண்ணாந்துதான் பார்த்தது பாலிவுட்.

சென்ற ஆண்டு வெளியான `க்வான்டிக்கோ’ டி.வி தொடர் அவரை அமெரிக்காவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றியிருக்கிறது. உலகம் முழுவதும் க்வான்டிக்கோவின் எஃபிஐ ஏஜென்ட் அலெக்ஸ் பர்ரீஸ் பிரபலமாகிவிட்டார்.

இந்திய நடிகர்கள் தொடர்ச்சியாக ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அப்படி இருக்க பிரியங்கா நடிப்பதில் என்ன சிறப்பு, அதுவும் சீரியலில்? இந்திய நடிகர்கள் எல்லோருமே குணசித்திர வேடங்களில்தான் நடிக்கிறார்கள். ஆனால், பிரியங்காவோ `ஸ்ட்ரைட்டா ஹீரோயின்’. சீரியலில் ஹீரோயின் என்றால், தன் முதல் ஹாலிவுட் படமான `பே வாட்ச்’சில் ட்வெயின் ஜான்சனை எதிர்த்து நிற்கிற வில்லி! விரட்டியடித்த அமெரிக்காவையே இப்போது தெறிக்கவிடுகிறார் பிரியங்கா.

`நான் எதில் ஜெயிப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் தொடர்ந்து அடுத்தடுத்த விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். ஒன்றில் ஜெயித்ததும், ஓகே... அடுத்தது என்ன என்று அதில் மூழ்கிவிடுவேன். இந்த எண்ணம்தான் என்னைத் தொடர்ந்து இயக்குகிறது' - இதுதான் பிரியங்காவின் வெற்றி!