எங்கேயும் எப்போதும் பார்க்க முடியாத `80-களின் ஹெப் ஹீரோயின்ஸ் இப்போ என்ன பண்றாங்க?’ என்று தேடியதில் இருந்து...

மாதவி

‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு...’ என ரஜினியைப் பாடவைத்த காந்தக் கண்ணழகி மாதவி, இப்போது வியாபார காந்தம். அமெரிக்காவில் கணவர் ரால்ஃப் ஜெயதீப் ஷர்மா நடத்திவரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர்.

‘`ஐந்து வயதில் பரதம் ஆட ஆரம்பித்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகள். 13 வயதில் நடிக்க வந்தேன். அப்போது முதல் இப்போது வரை எனக்கு ஓய்வே கிடையாது.

என் கணவரின் அம்மா ஜெர்மன், அப்பா பஞ்சாபி. 1996-ம் ஆண்டு பென்சில்வேனியாவில் உள்ள ஸ்வாமி ராமா ஆசிரமத்தில்தான் திருமணம் நடந்தது. மூன்று மகள்கள்.

பிசினஸ், மகள்கள், கணவர்னு ரொம்ப பிஸியா இருக்கேன். சினிமா பற்றி யோசிக்கவே நேரம் இல்லை’’ என்னும் மாதவி, ரஜினி, கமல், சிரஞ்சீவி, ராஜ்குமார், அமிதாப், பிரேம்நசீர், மம்மூட்டி, மோகன்லால் என அத்தனை சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்தவர்.

‘‘பைலட் லைசென்ஸ் வைத்திருக்கிறேன். மனசை ரிலாக்ஸ் பண்ண, அடிக்கடி சொந்த விமானத்தில் ரவுண்டு அடிப்பதுதான் ஹாபி. மூன்று பெண்களுக்குமே சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறது’’ என்கிறார் மாதவி.

நோட் பண்ணுங்கப்பா!

ரஞ்சனி

சாஷா செல்வராஜைத் தெரியுமா?

அப்போது சிங்கப்பூரில் இருந்தார் சாஷா.

13 வயது. சிங்கப்பூர் வந்திருந்த பாக்யராஜ் கண்ணில் பட, `நடிக்கும் ஆசை இருக்கிறதா?’ என விசாரித்திருக்கிறார். ‘சின்னவீடு’ படத்துக்காக போட்டோஷூட் எடுக்கப்பட, திடீரென சாஷாவின் அம்மா மறுக்க, அந்த முயற்சி கைவிடப்பட்டது.

அதன் பிறகு அந்த போட்டோக்கள் பாரதிராஜா கண்களில் பட, இந்த முறை மறுக்காமல் சென்னை வந்தார் சாஷா. `முதல்மரியாதை’ படத்தில் சாஷாவுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம்தான் `செவுளி’. ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்...’ ரஞ்சனிதான் அந்த சாஷா!

எங்கே இருக்கிறார் இந்த நிலா என சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் என்று தாறுமாறாகத் தேடியதில் ‘`அட... இங்கேதாங்க கொச்சினில் இருக்கேன்’’ என்றார் ரஞ்சனி.

“ரெண்டு வாரம் ஷூட்டிங்னுதான் சிங்கப்பூர்ல இருந்து தமிழ்நாடு வந்தேன். ஆனா, இப்படி பிஸியான ஆர்ட்டிஸ்ட்டா மாறுவேன், ஐம்பது படங்களுக்கு மேல நடிப்பேன்னு நினைக்கவே இல்லை” என்கிறார்.

“கணவர் பெயர் பியர் கொம்பாரா (Pierre Kombara). கொச்சினில் பெரிய பிசினஸ்மேன். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மன, உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு எதிரான ‘ஸ்த்ரீ’ அமைப்பில் பொறுப்பில் இருக்கேன். தமிழ்ப் படங்களைத் தொடர்ந்து பார்த்துட்டுத்தான் இருக்கேன். நல்ல கேரக்டர்ஸ் வந்தா பண்றதுக்கும் தயாரா இருக்கேன்!” என்கிறார் ரஞ்சனி.

நிலா சார்!

ரூபிணி

“தமிழை மறந்துட்டீங்களா?” எனக் கேட்டவுடன் பட்டாசாகப் பேசுகிறார் கோமல் மஹுவாகர் (எ) ரூபிணி. `சிவராத்திரி... தூக்கம் ஏது...’ என கமலுக்கு ஜோடியாக ஆடிப் பாடிய அதே லட்டு!
`கூலிக்காரன்’ படத்தில் விஜய காந்துக்கு ஜோடி. `காள காள... முரட்டுக் காள...’ என ரஜினிக்கும் ஹீரோயின். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் என உச்ச நட்சத்திரங்களோடு நடித்தவர், இப்போது மும்பையில் செட்டில்டு!

``ஜெமினி ஸ்டுடியோ இருந்த பார்சன் காம்ப்ளெக்ஸ்லதான் தங்கியிருந்தேன். அதெல்லாம் கோல்டன் டேஸ்!

எங்க அம்மா மும்பையில் பிரபல டாக்டர். எனக்கு நாலு வயசு இருக்கும்போதே இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். குச்சிப்புடி கத்துக்க அம்மாவோடு சென்னைக்கு வந்தேன். எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்தான் பூர்ணிமா. அவங்க வீட்டில் தங்கித்தான் நான் டான்ஸ் கத்துக்கவே ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் பூர்ணிமாவுக்கு பாக்யராஜுடன் திருமணம் நடக்க, அப்பதான் பாக்யராஜ் சார் என்னைப் பார்த்து, ‘சார் ஐ லவ் யூ’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்துக்கான ஷூட்டிங் கொஞ்ச நாள்தான் நடந்தது. படம் டிராப்.

அப்புறம் தாணு சார் தயாரிப்பில் `கூலிக்காரன்’ படத்தில் நடிக்க சான்ஸ் வந்தது. என் முதல் ஹீரோ விஜயகாந்த். அதுக்கு அப்புறம் ரஜினி சார்கூட `மனிதன்’. அதுல இருந்து செம பிஸி. ஏகப்பட்ட படங்கள்.”

``ஏன் சினிமாவுக்கு பிரேக்?’’

‘` `சினிமாவில் எல்லா பேரும் வாங்கிட்ட. நாளைக்கு பெரிய வேலைகள் இல்லாமல் மனஅழுத்தம் எல்லாம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நீ கல்யாணம் பண்ணி நல்லபடியா செட்டில் ஆகணும்’னு அப்பா ஆசைப்பட்டார். 1996-ல் சென்னையைவிட்டுக் கிளம்பினேன். ஏர்போர்ட்ல நின்னு அப்படி அழுதேன். தமிழ்நாட்டைவிட்டு வரவே மனசு இல்லை. அமெரிக்காவில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் நேச்சுரோபதி படிச்சேன். அப்படியே கல்யாணம்.

மகள் அனிஷா. பத்தாவது படிக்கிறாள். இப்போ நான், அனிஷா, அம்மானு சின்னக் குடும்பம். சமீபத்துல சென்னை வந்திருந்தப்ப, ரஜினி சாரைப் பார்த்தேன். நான் ரொம்ப இம்மெச்சூர்டா இருக்கிறப்ப அவர்கூட நடிச்சது எல்லாம் ஞாபகம் வந்தது. ஆனால், அவர் அப்படியே அதே சிம்ப்ளிசிட்டியோடு இருக்கார். லெஜண்ட்னா அப்படித்தான் இல்லையா?” எனச் சிரிக்கிறார் ரூபிணி.

ஹீரா

காதலைச் சொல்லாமல் தவித்த முரளியின் ‘இதயம்’ பட நாயகி, இப்போது எழுத்தாளர். அமெரிக்காவில் வசித்துவரும் ஹீரா, மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக உலகம் முழுக்கச் சுற்றி வருகிறார். `ஹீரா ராஜகோபால்’ என்கிற பெயரில் இணையதளம் நடத்திவரும் ஹீரா, அதில் தன் எழுத்துக்கள் மூலம் பாசிட்டிவ் விதைகளை விதைக்கிறார். பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ஹீரா, மீடியாக்களுக்கு அவுட் ஆஃப் ரீச்!

கிரிஜா

80-ன் ஏமி ஜாக்சன் இவர்தான். பிரிட்டனில் இருந்து வந்த ஆங்கிலோ இந்திய ஹீரோயின் கிரிஜா. மணிரத்னத்தின் `இதயத்தைத் திருடாதே’ படத்தின் சூப்பர் ஹிட் நாயகி.

இப்போது லண்டனில் வசித்துவரும் கிரிஜா, அங்கே பத்திரிகைகளில் எழுதிக்கொண்டி ருக்கிறார். ‘`இந்திய வாழ்வியல்முறையில் கவரப்பட்டே இந்தியா வந்தேன். அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்துகொண்டே பத்திரிகை களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. நடித்தேன். ஆனால், என் ஆன்மிகத் தேடலுக்கு சினிமா தடையாக இருப்பதுபோல் ஒரு ஃபீல். நடிப்பதை நிறுத்திவிட்டு, அரவிந்தர் ஆசிரமத்தில் சிஷ்யையாகத் தொடர்ந்தேன்’’ என்கிறார் கிரிஜா!