நல்ல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சிலரை, ``யாரு இவரு... பின்றாரே!’’ என ஆச்சர்ய ஸ்மைலியோடு கடந்திருப்போம். அப்படி நம்மை வியக்கவைத்த குணச்சித்திரக் கலைஞர்கள் இவர்கள்...

ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடைவேளைக்குப் பின்வரும் விசாரணை அதிகாரியின் தோரணை, மிரளவைக்கிறது. சந்தேகக் கண்கொண்டு அறையை ஆராயும் கூர்மையான பார்வை, மனம், உடல், மொழி மூன்றிலும் ஓர் ஒருங்கிணப்பு... அசரடிக்கிறார் ஹரீஷ் பேரடி. மலையாள நாடகக் கலைஞர். நாடகப் பயிற்சியாளர் ஜெயப்ரகாஷ் குலூரிடம் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக நான்கு வருடங்கள் குருகுலப் பயிற்சி. பிறகு சீரியல் வாய்ப்புகள்.

20 வயதில் குலூரிடம் மாணவராகச் சேர்ந்த இவருக்கு, இந்தத் துறையில் இது 28-வது வருடம். “சீரியலில் நடிச்சதைப் பார்த்துட்டு பிரபல தயாரிப்பாளர் ரஞ்சித் ரஜபுத்ர என்னை சினிமாவுக்கு அழைத்துவந்தார். இயக்குநர் சிபி மலயில் எனக்குப் பெரிய பெரிய கதா பாத்திரங்கள் கொடுத் தார். மம்முட்டி, மோகன்லால் உட்பட பலருடன் 35 மலையாளப் படங் களுக்கு மேல் நடிச்சிருக்கேன். என் க்ராஃபை சட்டென உயர்த்தியது... ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ என்கிற மலையாளப் படம்தான். அதில் நான் நடிச்ச ‘சகாதேவன்’ என்ற அரசியல்வாதி கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. நான்கு வருடங்களுக்கு முன் வெளியான ‘சுழல்’ என்ற தமிழ்ப் படத்தில் நடிச்சிருந்தேன். ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ பார்த்துட்டுத்தான், ‘கிடாரி’ படத்துக்கு இயக்குநர் பிரசாத் சாரும், ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்காக மணிகண்டன் சாரும் அழைச்சாங்க.”

ஹரிஷின் பெரிய ப்ளஸ் அவருடைய குரல்தான்.

`‘மணிகண்டன் சார்தான், ‘மலையாள உச்சரிப்போடு இருக்கிற உங்க சொந்தக் குரல்ல பேசணும்’னு சொன்னார். ‘கிடாரி’ படத்தில் கிராமப்புற வேஷம்கிறதால அதுல நான் பேசலை.
தமிழில் ஒரே மாதத்தில் இரண்டு படங்கள். அதன் இயக்குநர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். அவர்கள் மனதில் இருந்த கதாபாத்திரத்தை, நமக்குள் முழுவதும் கடத்திவிடுவதால்தான் இது சாத்தியம்” என்கிறார் ஹரீஷ்.

இவரது மனைவி பிந்து, ‘நடராஜ மண்டபம்’ க்ளாசிக்கல் டான்ஸ் ஸ்கூலின் டீச்சர். மூத்த மகன் விஷ்ணு பேரடி, கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர். இரண்டாவது மகன் வைத்தி பேரடி, ஆறாம் வகுப்பு படிக்கிறார்.

‘‘தமிழ்ப் படங்களைக் கூர்ந்து கவனிப்பேன். விக்ரம், பாலா படங்களை விடாமல் பார்ப்பேன். சொன்னால் மிகையாக இருக்கலாம்... ‘சுப்ரமணியபுரம்’ படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கே இல்லை. ‘காக்கா முட்டை’ படம் பார்த்துவிட்டு நண்பர்களிடம் சிலாகித்தேன். விஜய் சேதுபதி குறித்து ஒரு பயம் இருந்தது. அத்தனை ஈஸியாக தன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர். ஒரு கதாபாத்திரம் பேசப்படுவதற்கு உடன் நடிப்பவர்கள்தான் முக்கியக் காரணம். சினிமா என்பதே ‘ஆக்ஷன் - ரியாக்ஷன்’ தானே. அந்த விதத்தில் விஜய் சேதுபதியுடனான காட்சிகள் எனக்குப் பெரிய சவால்தான்.”

‘‘சினிமாவில் உங்கள் கனவு?’’

``ரஜினியுடன் ஒரு காட்சியாவது நடிச்சிரணும்.’’

சீக்கிரமே அழைப்பு வரும்!