நல்ல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சிலரை, ``யாரு இவரு... பின்றாரே!’’ என ஆச்சர்ய ஸ்மைலியோடு கடந்திருப்போம். அப்படி நம்மை வியக்கவைத்த குணச்சித்திரக் கலைஞர்கள் இவர்கள்...

‘மனிதன்’ படத்தில் கார் ஆக்ஸிடென்ட்டில் கால் உடைந்த கமலக்கண்ணனாக, முழுநீள வசனம் பேசி எல்லாரையும் கலங்கடித்தவர் ராஜரிஷி. அவரின் கதை, போராட்டங்களின் தொகுப்பு.

“சொந்த ஊர் வண்ணாரப்பேட்டை. ப்ளஸ் டூவோடு படிப்பை மூட்டை கட்டிவெச்சுட்டு கோடம்பாக்கம் பக்கம் சுத்த ஆரம்பிச்சிட்டேன்’’ என்று சொல்லும் ராஜரிஷி தொலைகாட்சி நிறுவனம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு தேடப்போய் புரொடக்ஷன் வேலைகளும் பார்த்திருக்கிறார். “சினிமாவுல என்னோட முதல் வசனம் எது தெரியுமா சார்? சிவாஜி சார் பேசின வசனம்தான். `சக்ஸஸ்’ ” - சொல்லும்போதே ராஜரிஷியின் கண்களில் பெருமிதம்.

“என்ன படம்?”

“யாருக்குத் தெரியும்?, அந்தப் படம் இரண்டு நாள் ஷூட்டிங்கோடு நிறுத்தப்பட்டது. மீண்டும் சான்ஸ் தேடும் படலம். டைரக்ஷன் டிபார்ட்மென்ட்ல ஏதேதோ வேலைகள் செஞ்சேன். அப்படியே போய்ட்டிருந்தது. பட வாய்ப்பு வரும்... நடிப்பேன். பாதியில் நின்னுடும். இல்லைன்னா ஃபுட்டேஜ்ல கட்டாகிப்போய்டும். `பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் `காதல்’ பரத் போல நயன்தாராவைப் பயமுறுத்தும் வேடம் கிடைத்தது கொஞ்சம் ஆறுதல்’’ எனச் சொல்லிக்கொண்டே போனவர் சிறுமௌனத்தில் ஆழ்கிறார். அடுத்து சொன்னது வேறு ஒரு விஷயம்.

``பெரிய டைரக்டர், அவர் படத்தில் நடிப்பது பலருக்கும் கனவு, எனக்கு மட்டும் 28 நாள் ஷூட்டிங். அப்படி ஒரு கதாபாத்திரம். ‘எனக்கு 380 அடிக்கு ஒரே ஷாட்டா வேணும்’னு சொல்வார். பண்ணினேன். பெரிய குரு அவர். அப்படிப் பாராட்டுவார். ‘டேய்... பின்றடா’ம்பார். படம் ரிலீஸ் அன்னைக்கு, ஃபர்ஸ்ட் ஷோ. பெரிய கனவோடு தியேட்டர்ல போய் உட்கார்ந்தேன். ஆனால், ஒரு காட்சியும் படத்தில் இல்லை. ஒரு காட்சி என்றால் ஒரு காட்சிகூட. ‘அந்த இயக்குநர் மேல தப்பு இல்லை சார். ஒரு பிட் காண்பிச்சாலும் முழுசா காண்பிக்கணும். அந்த கேரக்டர் அப்படி. எப்படியும் 45 நிமிஷம் வரும்.

அவ்ளோ பெரிய ஆள். காரணமில்லாம கட் பண்ணிருக்க மாட்டார்.”

“அப்ப உங்களுக்குச் சங்கடமா இல்லையா?”

“சினிமாவே வேணாம்னு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு, ஃபேப்ரிக்கேஷன் வேலைக்குப் போய்ட்டேன். ஆனா மனசு கேட்கணுமே. ஒரே வாரம்தான். மறுபடி வாய்ப்புகளுக்காக அலைய ஆரம்பிச்சேன்.

பிறகு `மூடர்கூடம்’ ‘வக்கா’ கேரக்டர். அதுவும் ஓரளவு பேசப்பட்டது. `மனிதன்’ பட கமலக்கண்ணன் கேரக்டர் கிடைத்தது வேறு வகையில். நண்பர் ஒருத்தரைப் பார்க்க ஒரு செட்டுக்குப் போயிருந்தேன். அங்கே `மனிதன்’ ஷூட்டிங் போய்ட்டிருந்தது. `மனிதன்’ பட அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருத்தர், என்னைப் பார்த்து ‘நீங்க ஆர்ட்டிஸ்டா? ஒரு கேரக்டருக்கு மட்டும் ஆள் கிடைக்காமல் டைரக்டருக்குத் திருப்தி இல்லை. நீங்க முயற்சி பண்ணிப்பாருங்க’னு ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. நாலு தடவை போனேன். கடைசியா இயக்குநர் அஹ்மத் சார் பார்த்தார். நீங்கதான் பண்ணணும்னு சொல்லிட்டார். ரொம்ப லோ வாய்ஸில் அந்த வசனத்தை ஒரே டேக்ல அழுதுட்டே நான் பேசினேன். ராதாரவி சார்... அப்படியே அசந்துபோய் ‘டேய்... டேய்... என்னடா பண்ணின?’னு கேட்டார். கண்கலங்கிட்டேன்”

``இப்போது?’’

“சான்ஸ் கேட்டுட்டு இன்னும் பல படிகள் ஏறி இறங்கிட்டுத்தான் இருக்கேன். யாரோ ஒருத்தர் பேனாவுல எனக்கான கேரக்டர் ஒளிஞ்சுட்டுத்தானே இருக்கும்? அவர் எழுதட்டும். அந்தப் பேனா எப்ப அசையுதோ... அசையட்டும். வெய்ட் பண்ணுவோம் பாஸ்!”