நல்ல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சிலரை, ``யாரு இவரு... பின்றாரே!’’ என ஆச்சர்ய ஸ்மைலியோடு கடந்திருப்போம். அப்படி நம்மை வியக்கவைத்த குணச்சித்திரக் கலைஞர்கள் இவர்கள்...

என் அம்மாவுக்குப் பூர்வீகம் திருச்சி; அப்பாவுக்கு மதுரை. தாத்தா காலத்துல இலங்கைக்குப் போயாச்சு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்கேதான். என் தம்பிகள் இரண்டு பேரும் கோவையில்தான் படிச்சாங்க. இப்போ சென்னையில இருக்காங்க. அடிக்கடி சென்னை வர்றது உண்டு. தமிழ்நாடும் என் சொந்த ஊர்தான்’’ - சுத்தத் தமிழ் பேசுகிறார் நேசன்... ஸாரி அரவிந்தன்.

`ஆண்டவன் கட்டளை’ படத்தில் ஈழத் தமிழர் ‘நேசனா’க நெகிழவைத்தவர். விஜய் சேதுபதிக்கு இணையான வேடம்.

“எல்லாம் ஆண்டவன் கட்டளை தான் சார்” என வானத்தை நோக்கிப் பார்க்கிறார். இலங்கையில் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். டாக்குமென்டரிகள் இயக்கி, நடித்திருக்கிறார். இயக்குநர் மணி கண்டன் இந்தக் கேரக்டருக்கு ஆடிஷன் நடத்திக்கொண் டிருக்கும் தகவல் நண்பர் ஒருவர் மூலம் தெரிய வர, அதற்கு தன் வீடியோக்களை அனுப்பி, ஆடிஷனில் தேர்வாகியிருக்கிறார் அரவிந்தன்.
“மணிகண்டன் சார் சொல்றப்போ என்ன படம்கிறது எல்லாம் தெரியாது. இங்க எப்படி கோவைத் தமிழ், மதுரைத் தமிழ்னு இருக்கோ... அப்படி இலங்கையில நாலைஞ்சு ஸ்லாங் இருக்கு. சிட்டியில் நார்மலாத்தான் பேசுவாங்க. மலையகத் தமிழ் கொஞ்சம் வேறுபட்டிருக்கும். மட்டக்களப்புத் தமிழ் வேற மாதிரி. படத்துல நான் பேசியிருக்கிறது யாழ்ப்பாணத் தமிழ்.

ஷூட்டிங் போறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாடிதான், `ஹீரோ விஜய் சேதுபதி, உங்களுக்கு அவர்கூடவே வர்ற கேரக்டர்’னு சொன்னாங்க. எனக்கு என்ன பேசுறதுனே தெரியலை. ஏன்னா இலங்கையில் நான் செஞ்ச ரெண்டு புராஜெக்ட்களுக்கும் மேக்கப் முதல் நடிப்பு வரை எல்லாத்துக்கும் ரோல்மாடல் விஜய் சேதுபதிதான். இப்போது அவர்கூடவே நடிக்கும் வாய்ப்புன்னா சும்மாவா!’’

முதல் நாள் ஷூட்டிங்... ‘இப்படி வாங்க பிரதர்’ என்று அரவிந்தை அழைத்த விஜய் சேதுபதி, இரண்டு நிமிடங்களுக்கு இறுக்கக் கட்டிப்பிடித்தாராம். ‘படம் முழுக்க என் ஃப்ரெண்டா, என்கூடவே டிராவல் பண்ணப் போறீங்க. உங்க சீன் ஷூட் முடிஞ்சதுனு ஓரமா போய் உட்காரக் கூடாது. என்கூடவே உட்காரணும்; என் ஃப்ரெண்டாவே இருக்கணும்’ என்றாராம்.

“இதை நான் எதிர் பார்க்கவே இல்லை சார். அதேபோல மணிகண்டன் சாரும் பொறுமையா சொல்லிக் கொடுத்து, `நேசன்’ கதாபாத் திரத்தை அப்படியே எனக்குள் கடத்தினார். ஒரு கட்டத்துல உண்மையாவே நான் பாஸ்போர்ட்டைத் தொலைச்சு இங்க சுத்துறதா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.”

``குடும்பம்..?”

“மனைவி சைலயா. இலங்கை மனிதவளத் துறையில் மேலாளர் வேலை. மகள் காயத்ரிக்கு ஆறு வயசு.”

“அவங்க படம் பார்த்துட்டாங்களா?”

“இலங்கையில ரிலீஸ் ஆகிடுச்சு. ஆனாலும் என்கூட இங்க பார்க்கணும்னு வந்தவங்க, நேத்துதான் பார்த்தாங்க. கடைசிக் காட்சியில போலீஸ் ஜீப்ல நான் போறப்ப, மகள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டா. நான் நல்லாதான் நடிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டேன்.”