நல்ல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சிலரை, ``யாரு இவரு... பின்றாரே!’’ என ஆச்சர்ய ஸ்மைலியோடு கடந்திருப்போம். அப்படி நம்மை வியக்கவைத்த குணச்சித்திரக் கலைஞர்கள் இவர்கள்...

தமிழ் சினிமா ஹீரோ, ஹீரோயின்களுக்கு லேட்டஸ்ட் அப்பா ஃப்லோரென்ட் பெரெரா (Florent Pereira). ‘கயல்’ படத்தில் ஆனந்திக்கு அப்பாவாக நடித்து கவனிக்கவைத்தவர். இவர் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஜி.எம் என்பது ஸ்பெஷல் தகவல்.

“எனக்குச் சொந்த ஊர் கும்பகோணம்.

எம்.ஏ முடிச்சுட்டு கொஞ்சம் வருஷம் அரபு நாட்டில் வேலையில இருந்தேன். 1995-ல் விஜய் டி.வி-யில் சேர்ந்தேன். அடுத்து கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்துட்டேன். தமிழ் தொலைக்காட்சி வரலாறே 23 வருஷம்தான். அதுல 22 வருஷம் நான் தொலைக்காட்சியில் இருக்கேன். இப்ப தொலைக்காட்சி வேலை பார்த்துக்கிட்டே சினிமாவுல நடிக்கிறேன்.”

“டிவி ஜி.எம்., எப்படி சினிமாவுக்கு வந்தார்?”

“கலைஞர் டி.வி-யில் ‘நாளைய இயக்குநர்’னு நிகழ்ச்சி நடந்துட் டிருந்தது. அதுல ஒரு சீஸன் பிரபு சாலமன் சார் கெஸ்ட். நிகழ்ச்சியிலும் ‘வணக்கத்துக்குரிய அன்பு நெஞ்சங்களே...’னு வரவேற்றுப் பேசினேன். அந்த நிகழ்ச்சி முடிஞ்ச அடுத்த நாளே பிரபு சாலமன் சார் ஆபீஸ்ல இருந்து போன்... ‘சார் ‘கயல்’னு ஒரு படம் எடுக்கிறார். நீங்க அதுல ஜமீன்தாரா நடிக்கணும்னு கூப்பிட்டாங்க.

‘நடிக்கறீங்களா?னுகூடக் கேட்கலை. நீங்க நடிங்க’னுதான் சொன்னாங்க. மதுரைக்கு வரச் சொன்னாங்க. அங்கே போனா, ஒரு வயக்காட்டுல எங்கேயோ ஒரு கிராமத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

பிரபு சாலமன் சார், என் காஸ்ட்யூமை எடுத்துட்டு வரச் சொன்னார். ‘எக்ஸ்க்யூஸ்மி சார்... ஹீரோயின் அப்பா கேரக்டர்ங்கிறதால நானே நிறைய ட்ரெஸ் எடுத்துட்டு வந்திருக்கேன்’னு சொன்னேன். அவர் `உங்களை யாரு இதை எல்லாம் எடுத்துட்டு வரச் சொன்னா? நீங்க ஆழ்வார்பேட்டை அப்பா கிடையாது. ஆண்டிப்பட்டி அப்பா’னு சொன்னவர், கையில ஒரு அழுக்கு வேட்டியை எடுத்து மண்ணுல புரட்டிக்கொடுத்தார். அதைவிட அழுக்கான வேட்டி இருக்கவே இருக்காது. முண்டாசு பனியனையும் போடச் சொன்னார். போட்டேன். ‘சாருக்கு செம ஃபிட்டா இருக்கு ட்ரெஸ். இதுதான் உங்க காஸ்ட்யூம்னு சொன்னார். நாலு நாள்ல ஷூட்டிங் முடிஞ்சுடும் சொன்னாங்க. அடுத்த ரெண்டு நாள் அந்த அழுக்கு வேஷ்டி கட்டிக்கிட்டு ஸ்பாட்டுக்கு வந்திடுவேன். யாரும் என்னை நடிக்கக் கூப்பிடவே இல்லை. ரெண்டு நாளா என் கண்ணுல மட்டும் மாத்தி மாத்தி கிளிசரின் போட்டுட்டே இருந்தாங்க. ‘என்னடா?’னு கேட்டா... ‘உங்க கண்ணை அவிக்கச் சொல்லி இருக்காங்க சார்’னு சொன்னாங்க. ஏதோ சமையல்காரர் ரோல் போலனு `பேசாம ஓடிப்போய்டலாமா?’னு நினைச்சுட்டிருந்தேன்.

மூணாவது நாள் பிரபு சாலமன் சார் கூப்பிட்டு, என் தாடியை எடுக்கச் சொன்னார். ‘சார்... உங்களை மூணு நாளா தூரத்துல இருந்து வாட்ச் பண்ணிட்டேதான் இருக்கேன். உங்களை யாராவது சிவாஜி கணேசன்’னு சொல்லி யிருக்காங்களா?’னு கேட்டார். நானும் ரொம்ப ஆர்வமா ‘ஆமா சார். எங்க ஊர்ல நிறைய நிகழ்ச்சிகள்ல அப்படித் தான் சொல்வாங்க’னு சொன்னேன். அவர் ‘அதை எல்லாம் முதல்ல தூக்கிப்போட்டுடணும். உங்க பாடிலாங்வேஜ் பார்க்கத்தான் ரெண்டு நாளா விட்டுவெச்சேன்’னு சொல்லிட்டு என்னை இயல்பா நடிக்கச் சொன்னார்.

படம் ரிலீஸ் ஆனதும் செம ரெஸ்பான்ஸ். அப்புறம் தொடர்ந்து படங்கள் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ‘கயல்’ படம் பார்த்துட்டு சீனுராமசாமி சார் ‘இடம் பொருள் ஏவல்’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். அதுல நடிச்ச விஜய் சேதுபதி ‘மெல்லிசை’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். அப்படியே தொடங்கி 20 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன்.இப்ப தனுஷ்கூட நடிச்ச ‘தொடரி’ ரிலீஸ் ஆகியிருக்கு.”

தொடரட்டும் வெற்றிப் பயணம்!