Published:Updated:

வீரப்பன் சீஸன் - 2

ம.கா.செந்தில்குமார்

வீரப்பன் சீஸன் - 2

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

''இது 11 வருட உழைப்பு. பழ.நெடுமாறன் ஐயா, கொளத்தூர் மணி, டி.ஜி.பி. விஜயகுமார், டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், முத்துலட்சுமி, மலைவாழ் மக்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் சொன்ன தகவல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட வீரப்பன் பற்றிய விதவிதமான வாக்குமூலங்கள். வீரப்பன் ஹீரோவா, வில்லனாங்கிற கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பலை. அதைப் படம் பார்த்துட்டு மக்களே முடிவு பண்ணட்டும். ஆனா, என் உழைப்பு உண்மையானது. கேள்விகள் எழாதுனு நம்புறேன்!'' - உள்ளங்கைகளைப் பரபரவெனத் தேய்த்துக்கொண்டு நம்பிக்கை பகிர்கிறார் ஏ.எம்.ஆர். ரமேஷ். 'குப்பி’, 'காவலர் குடியிருப்பு’ என உண்மைக் கதைகளைப் படமாக் கியவர், இப்போது சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை 'வன யுத்தம்’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார்.  

 ''மிக சென்சிட்டிவான கதை வீரப்பனுடையது. ஏகப்பட்ட எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்குமே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீரப்பன் சீஸன் - 2

''ஆமாம்! வீரப்பனால் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, கர்நாடக வாழ் தமிழர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று பல பணி களை முன்னெடுத்துச் சென்றதில் பழ.நெடுமாறன் ஐயா, கொளத்தூர் மணி, ரங்கநாத்துடன் நானும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையாளரும் இணைந்து செயல்பட்டோம். நாங்கள் வகுத்துத் தந்த வழியில்தான் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். ராஜ்குமாருடன் கடத்தப்பட்டு 62-வது நாளன்று வீரப்பனைத் தாக்கிவிட்டுத் தப்பி வந்த நாகப்பா மாரடகி, அன்று முதல் இன்றுவரை என் உதவியாளராக இருக்கிறார். கடந்த 11 வருடங்களாக நான் வீரப்பன்பற்றி விசாரித் துத் தெரிந்துகொண்ட சம்பவங்களை உண்மைக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறேன்னு சொல்றதைவிட, உண்மையாகவே வைத்திருக்கிறேன்னு சொல்லலாம்!''  

''வீரப்பனின் வாழ்க்கை 'சந்தனக் காடு’ என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிட்டது. அதைத் தாண்டி, படத்தில் என்ன சொல்லப்போகிறீர்கள்?''

''ஒரே ஒரு எபிசோடு தவிர, அந்த சீரியலை நான் பார்க்கவில்லை. ஆனால், அதன் இயக்குநர் கவுதமனிடம் பல விஷயங்களைப் பேசினேன். அந்த சீரியலின் ஒளிப்பதிவுக் குழு தற்போது எங்களுடன் படப்பிடிப்புத் தளத்தில் ஒத்துழைக்கிறது. மற்றபடி இது மிகப் பெரிய பட்ஜெட்டில் மக்களுக்கு நன்கு அறிமுகமான டெக்னீஷியன்களைக் கொண்டு உருவாக்கப்படும் சினிமா!''

வீரப்பன் சீஸன் - 2

''ஆர்ட்டிஸ்ட்டுகள் நச்சென்று அமைந்தாலே பாதிக் கிணறு தாண்டிவிடுவீர்கள். ஏனென்றால், வீரப்பனைத் தவிர பலரும் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள்...''

  ''அந்தப் பயம் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், இப்போது அந்தக் கவலையே இல்லை. டி.ஜி.பி. விஜயகுமார் கேரக்டருக்கு அர்ஜுனும் வீரப்பனுக்கு கிஷோரும் அச்சுஅசலாகப் பொருந்தினார்கள். முத்துலட்சுமியாக விஜயலட்சுமி. 'குப்பி’ படத்தில் சிவராசனாக நடித்த ரவி

வீரப்பன் சீஸன் - 2

காலேவுக்கு செந்தாமரைக்கண்ணன் வேடம், ராஜ்குமாராக நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய், முதல்வர் ஜெயலலிதாவாக ஜெயசித்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். ஃபாரஸ்ட் சினிமாவாக மிகப் பெரிய விஷ§வல் ட்ரீட் என்பதைத் தாண்டி, மிகப் பெரிய வரலாற்றுப் பதிவாகவும் இந்தப் படம் இருக்கும்!''

''வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப் படையினரால் மலைவாழ் மக்கள் பாதிக்கப்பட்ட கொடூரங்களும் படத்தில் இடம்பெறுமா?''

''நடுநிலையுடன் சொல்லி இருந்ததாக 'குப்பி’யைப் பாராட்டினார் கொளத்தூர் மணி. அந்தப் பாராட்டை 'வன யுத்த’மும் தக்கவைக்கும்!''