
தீபாவளிக்கு தனுஷ் கொளுத்தியிருக்கும் வெடிதான் `கொடி'.
``முதல்முறையாக `கொடி' படத்தில் டபுள் ஆக்ஷன். அனுபவம் எப்படி?''
``நான் ரொம்ப கூலா, ஜாலியா நடிச்சேன். கஷ்டம் எல்லாம், டைரக்டருக்கும் டெக்னிக்கல் டீமுக்கும்தான். ரெண்டு கேரக்டர்களுக்கும் அதிகமா வித்தியாசம் காட்ட நான் விரும்பலை. கதைப்படி ரெண்டு கேரக்டரும் ட்வின்ஸ். அதனால் ரொம்ப நுணுக்கமாப் பார்த்தாதான், வித்தியாசம் தெரியும்.
`கொடி'யோட ஒரே ஐடியா, ரசிகர்களையும் ஃபேமிலி ஆடியன்ஸையும் என்டர்டெயின் பண்றதுதான். அரசியலின் நல்ல பக்கங்களோடு கெட்ட விஷயங்களையும் சொல்லியிருக்கோம். நகைச்சுவை, ஆக்ஷன், சென்டிமென்ட்னு ஒரு ஃபுல் பேக்கேஜ் `கொடி'. தீபாவளிக்காக ஆர்வமா காத்துட்டிருக்கேன்.''
`` `ஆடுகளம்' படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பதாக இருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஜோடி சேர்ந்திருக்கிறீர்கள்...''
``த்ரிஷா, என்னோட பல வருஷ ஃப்ரெண்ட். இப்பதான் சேர்ந்து நடிக்க சரியான டைம் அமைஞ்சிருக்கு. இதில் த்ரிஷாவுக்கு, சும்மா பாட்டு, ரொமான்ஸ்னு வந்து போற கேரக்டர் இல்லை. கதைக்கு முக்கியமான ரோல். அதை ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``இன்னொரு ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரனும் இருக்காங்களே...''
``ஏகப்பட்ட திறமைகளோடு வந்திருக்கிற பொண்ணு அனுபமா. நடிக்கவந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. ஆனா, ரொம்ப புரஃபஷனலா நடந்துக்கிறாங்க. `கொடி' படத்தின் க்யூட் ஏரியாவுக்கு அவங்கதான் பொறுப்பு.''

` `சுழலி...' பாட்டு செம ஹிட். படத்தில் சந்தோஷ் நாராயணனின் பங்களிப்பு எப்படி?''
``சந்தோஷ் செம பிரில்லியன்ட் பாஸ். இந்தக் காலத்துல இவ்வளவு குறைவான ட்ராக்ஸ்ல பாட்டுக்கு ட்யூன் அமைக்கிறது சாதாரண விஷயம் இல்லை. அதுல அவ்வளவு அழகா ஒரு அவுட்புட் கொடுத்திருக்கிறார். பாட்டு எல்லாமே ஆல்ரெடி ஹிட். அதோட பேக்கிரவுண்ட் இசையையும் கேட்டுட்டுச் சொல்லுங்க... ஏன்னா, படத்தோட மிகப்பெரிய பலமே பி.ஜி.எம்-தான்.''
`` `நான் எழுதும் எல்லா கதைகளும் உங்களுக்காகத்தான்' என இயக்குநர் துரை செந்தில்குமார் சொல்லியிருந்தார்... அவரைப் பற்றி சொல்லுங்க.''
``செந்தில் வேலையில் ரொம்ப ஆர்வமான ஆள். அவரோட ஹ்யூமர்சென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் நடிச்ச படங்கள்ல பல வருஷங்களா உதவி இயக்குநரா இருந்தார். இயக்குநரா அவரோட முதல் படமான `எதிர்நீச்சல்' படத்தை நான் தயாரிச்சேன். இப்ப `கொடி'யில் என்னை டைரக்ட் பண்ணியிருக்கார். அவரோட எல்லா கதைகளிலும் நான் இருக்கேன்கிறதைக் கேட்க, சந்தோஷமா இருக்கு. `கொடி'யில் பாருங்க. பக்கா மாஸா இறங்கி அடிச்சிருக்கார்.''
``ரஜினியின் தலைப்புகள் உங்களுக்கு எப்போதும் ராசியானது. `கொடி பறக்குது' தலைப்பை யோசித்துதான் `கொடி'னு டைட்டில் வெச்சீங்களா?''
``இல்லை. அப்படி ஒரு எண்ணம் எப்பவுமே வரலை. `கொடி’தான் இந்தக் கதைக்குச் சரியான டைட்டில். படம் பார்த்த பிறகு `கொடி’தான் சரின்னு உங்களுக்கும் தோணும்.’’