சினிமா
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

“ஜெயலலிதா பயோபிக்ல நடிக்கணும்!” - ச்சோ ச்வீட் த்ரிஷா

“ஜெயலலிதா பயோபிக்ல நடிக்கணும்!” - ச்சோ ச்வீட் த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
“ஜெயலலிதா பயோபிக்ல நடிக்கணும்!” - ச்சோ ச்வீட் த்ரிஷா

பி.எஸ்.முத்து

“நான் ஓப்பனான பொண்ணு கிடையாது. எனக்கு எப்பவுமே தனியா இருக்கத்தான் பிடிக்கும். என் பிரச்னைகள் எதையும் வெளிக்காட்ட விரும்ப மாட்டேன். நிறையப் பிரச்னைகள், சங்கடங்கள் கடந்துதான் வந்திருக்கேன். சில படங்கள் ஏன் நடிச்சோம்னுகூட யோசிச்சி ருக்கேன். நடிகைனு வந்துட்டாலே ஒரு வார்த்தை பேசினாலும் பெரிசா வெடிச்சுடுது. அதனாலதான் நான் எப்பவுமே சைலன்ட் மோட்ல இருக்கேன்.”

த்ரிஷா, இன்னமும் பழைய துறுதுறு பெண் அல்ல...  பக்குவமாக வெளிப்படுகின்றன வார்த்தைகள். `மோகினி’ ஷூட்டிங். பரபரப்புகளுக்கு நடுவே சந்தித்தேன்.

“ஜெயலலிதா பயோபிக்ல நடிக்கணும்!” - ச்சோ ச்வீட் த்ரிஷா

``தமிழ்சினிமாவில் உங்களுக்கு இது 15-வது ஆண்டு... மிகப்பெரிய வெற்றிகளைப்போலவே, நிறையப் பிரச்னைகள், சோகங்களையும் சந்திச்சிருக்கீங்க... எப்படி இருக்கு இந்தப் பயணம்?''

``நடிப்புலேயே கத்துக்கவேண்டியது இன்னும் நிறைய இருக்கு. ஃபிலிம் ரோல்ல ஆரம்பிச்சு இப்போ டிஜிட்டல் வரைக்கும் ஒவ்வொரு வருஷமும் புதுப்புது மாற்றங்கள் சினிமாவில் வந்துட்டே இருக்கு. அதுக்கு ஏற்ற மாதிரி நம்மையும் நாம தகுதிப்படுத்திக்கணும். அப்போதான் ஜெயிச்சுட்டே இருக்க முடியும்.

இந்த 15 ஆண்டுகளில் நிறையக் கத்துக்கிட்டேன். புது இயக்குநர்களை அறிமுகப்படுத்துறதும் அவங்களோட வேலை செய்யுறதும் ரொம்ப சந்தோஷமான விஷயம். இதுக்கு நடுவுல வதந்திகள், தப்பான செய்திகள்னு என்னைப் பற்றி என்கிட்டயே என்னலாமோ சொல்வாங்க. அதைக் கேட்கும்போது கஷ்டமா இருக்கும். பட், சீரியஸா எடுத்துக்க மாட்டேன். சினிமாவில் இருப்பது, எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ஐ லவ் சினிமா.''

`` `மோகினி' ஃபர்ஸ்ட் லுக்கே வேற லெவல்ல இருக்கே?''


``வேலைக்காக லண்டன் போற இடத்துல நிறையச் சவால்களைச் சந்திக்க நேரிடும். அப்போ நடக்கும் சம்பவங்கள்தான் படம். த்ரில்லர், காமெடி, காதல்னு ரசிகர்களுக்கு அலுப்பே தர மாட்டா `மோகினி'. 90 சதவிகிதப் படப்பிடிப்பு முடிஞ்சிடுச்சு. பேங்காக், கேரளாவில் மட்டும் ஷூட்டிங் இருக்கு. படத்துல நிறைய சிஜி வேலைகள் இருக்கிறதால, ஜனவரியில் ரிலீஸ் ஆகலாம். பொதுவா, ஹீரோஸ் மாதிரி ஹீரோயின்களுக்கு சண்டைக் காட்சி எல்லாம் இருக்காது. ஆனா, `மோகினி'யில் முதல்முறையா ஆக்‌ஷன் காட்சி எல்லாம் பண்றது செம த்ரில்லிங்கா இருந்தது.''

“ஜெயலலிதா பயோபிக்ல நடிக்கணும்!” - ச்சோ ச்வீட் த்ரிஷா

``த்ரிஷானாலே நண்பர்கள், பார்ட்டிகள்தான் ஞாபகத்துக்கு வரும். சினிமாவில் உங்கள் நண்பர்கள் பற்றிச் சொல்லுங்க?''

``இப்போதைக்கு சினிமாவில் எனக்கு நெருக்கமான நண்பர்கள்னு யாருமே கிடையாது.
20 வருஷங்களா என்னோடு நட்பா இருக்கிறது பள்ளி, கல்லூரி நண்பர்கள்தான். இவங்களோடு நேரம் செலவிடவே சரியா இருக்கு. சினிமா நண்பர்கள் பிடிக்காதுன்னு கிடையாது. நிச்சயம் அவங்களோட நல்ல நட்பு இருக்கும். ஆனா, சந்திக்கிறதுக்கான வாய்ப்பு ரொம்பக் குறைவு. ஹன்சிகா, மஞ்சிமா, பிருந்தா மாஸ்டர்னு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. முக்கியமா, நயன்தாராவும் நானும் சந்திச்சுக்கிட்டா, சினிமாவைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் நிறையப் பேசிப்போம். பிஸியா இருக்கிறதுனால அதிகமா மீட் பண்ண முடியலை.''

``தமிழ், தெலுங்குனு நிறையப் படங்கள் நடிச்சுட்டீங்க. ரெண்டு இண்டஸ்ட்ரிக்குமான வித்தியாசம்னு எதை நினைக்கிறீங்க?''

``ரெண்டு மொழிகளுக்கும் கலாசாரமே வித்தியாசம்தான். நான் சென்னைப் பொண்ணுங்கிறதால, தாய்மொழியில் நடிக்கிறது மனசுக்கு நெருக்கமா இருக்கு. தெலுங்கு, எனக்கு ரெண்டாவது வீடு மாதிரி. தெலுங்கில், நாயகிகளைத் தங்கம் மாதிரி பார்த்துப்பாங்க.''

“ஜெயலலிதா பயோபிக்ல நடிக்கணும்!” - ச்சோ ச்வீட் த்ரிஷா

``முதல் படத்தில் பார்த்த மாதிரியே இப்பவும் அப்படியே இருக்கீங்களே?''

`` சந்தோஷமா இருக்கிறது மட்டும்தான் அழகுக்குக் காரணம்னு நினைக்கிறேன். `இப்பவும் எப்படி இவ்ளோ இளமையா இருக்கீங்க?'னு எங்க அம்மாவைப் பார்த்து நிறையப் பேர் கேட்பாங்க. ஜெனிட்டிக்காவே நானும் அப்படி இருக்கேன்னு நினைக்கிறேன். அது மட்டும் இல்லாம, ஒரு நடிகையா அழகைப் பராமரிச்சுத்தானே ஆகணும்.''

``த்ரிஷாவுக்குக் கல்யாணம்னா தமிழ்நாடே சந்தோஷப்படும்...''

``எனக்குப் பிடிக்கிற மாதிரியும், அவருக்கு  என்னைப் பிடிக்கிற மாதிரியும் ஒருத்தரை முதல்ல சந்திக்கணும். அதுக்கு அப்புறம்தான் கல்யாணம். முதல்ல யாரையாவது காதலித்தால்தானே கல்யாணம் பற்றி யோசிக்க முடியும். இப்போ நான் எந்த ரிலேஷன்ஷிப்லயும் இல்லை.''

“ஜெயலலிதா பயோபிக்ல நடிக்கணும்!” - ச்சோ ச்வீட் த்ரிஷா

``த்ரிஷாவுக்குப் பிடிக்கும்...''

உணவு: தென்னிந்தியச் சாப்பாடு.

படம்: `விடிவி', `உயிரே'.

நகரம்: நியூயார்க்.

புத்தகம்: கேர்ள் ஆன் தி ட்ரெய்ன்.

வாசகம்: There's no competition, when you're manifesting your own lane.

ஸ்வீட்: சாக்லேட்.

கேம்: கேண்டி க்ரஷ்.

நடிகை: மஞ்சிமா.

ட்ரிங்க்: கிரீன் டீ.

விருப்பம்: ரஜினியோடு ஒரு படம்.

முதல் நண்பர்: அம்மாதான்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: நோ ஸ்டேட்டஸ்.

தீபாவளி ப்ளான்: முதல் காட்சி `கொடி' பார்க்கணும்.

கடைசியாகப் பார்த்த படம்: `சுல்தான்.'

நடிக்க விரும்பும் பயோபிக்: ஜெயலிலிதா பயோபிக்ல நடிக்கணும்.

“ஜெயலலிதா பயோபிக்ல நடிக்கணும்!” - ச்சோ ச்வீட் த்ரிஷா

``ஒருவார்த்தையில் உங்கள் நாயகர்கள் பற்றி..?''

கமல்: ஸ்கூல் ஆஃப் சினிமா.

அஜித்: ஜென்டில்மேன்

விஜய்:
நேர்மை

விக்ரம்: ஜாலி

சூர்யா: கடுமையான உழைப்பாளி.

சிம்பு:
சிறந்த நண்பர்.

தனுஷ்: சின்சியர்.