Published:Updated:

“மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது!”

“மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது!”
பிரீமியம் ஸ்டோரி
“மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது!”

பா.விஜயலட்சுமி, ஆர்.வைதேகி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், மீ.நிவேதன்

“மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது!”

பா.விஜயலட்சுமி, ஆர்.வைதேகி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், மீ.நிவேதன்

Published:Updated:
“மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது!”
பிரீமியம் ஸ்டோரி
“மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது!”

சின்னத்திரை வானை அலங்கரிக்கும் எழிலான நட்சத்திரங்கள், இந்த சீரியல் நாயகிகள். நம் குடும்பங்களில் ஓர் உறுப்பினராகிவிட்ட இந்த டி.வி செல்லங்களைச் சந்தித்தோம்...

உமா @ பிரவீணா

“மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிஜத்திலும் பிரியமானவளாகவே பேசுகிறார் ‘பிரியமானவள்’ உமா Alais பிரவீணா. ஷூட்டிங் ஸ்பாட்டில் சீரியல் மருமகள்களுடன் பிஸியாக இருந்தார். கூடவே நிரஞ்சனி, கிரண்மயி, ப்ரீத்தி ஆகியோரும் இணைந்துகொண்டனர். `‘இன்னிக்கு மூணு பேர்தான் இருக்காங்க. என் பெரிய மருமக அவந்திகா எஸ்கேப் ஆகிட்டா. அவளும் இருந்திருந்தா நல்லா இருக்கும்’' என்று ‘அவந்திகா’ சிவரஞ்சனியை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் பிரவீணா.

``சேச்சி, உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன். நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்’' என்று நமக்காகக் கேள்வியை எடுத்துக்கொடுத்தார் `கவிதா’ நிரஞ்சனி. ``எண்ட பேர் பிரவீணா. ஆனா, இங்கே உமானு சொன்னால்தான் தெரியும். என்னோட சின்ன வயசில் இருந்தே நடிச்சுட்டு இருக்கேன். இதுவரை 70 படங்களுக்கு மேல நடிச்சாச்சு. முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாத்தான் நடிச்சேன். மலையாளத்தில் எல்லோரும் என்னை ‘வீணா’னு விளிக்கும். சினிமா மேல இருந்த ஆர்வத்தில் காலேஜுலையும் நான் பி.ஏ மியூஸிக்தான் படிச்சேன். நான் சினிமாவில் நடிக்கிறது, முதல்ல வீட்டில் யாருக்கும் இஷ்டம் இல்லை. ஆனால், எனக்குக் கிடைத்த மரியாதை, கெளரவம், மம்மூட்டியில் இருந்து திலீப் வரை என்கிட்ட காமிச்ச அன்பு, பாசம்தான் அந்த இண்டஸ்ட்ரி மேல இருந்த பார்வையை மாத்திச்சு. தமிழிலும் `வெற்றிவேல்' படம் மூலமா என்ட்ரி கொடுத்தாச்சு. மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது’' என்று மலையாளமும் தமிழும் கலந்த கொஞ்சல் மொழியில் பதில் சொல்கிறார் பிரவீணா.

இடைமறிக்கும் கிரண்மயி, `‘வந்த புதுசில் அம்மாவுக்கு தமிழ் அவ்வளவா வராது. ஆனால், இப்போ அழகாப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. டயலாக்கை உள்வாங்கி பேசற அளவுக்கு, தமிழில் எக்ஸ்பெர்ட் ஆகிட்டாங்க'’ என்று எடுத்துக் கொடுக்கிறார்.

`‘இருங்க... இருங்க, நானே பேசிட்டே இருக்கேன். இன்னிக்கு என்கூட ரெண்டு மருமகளும், மருமகளா இல்லையாங்கிற குழப்பத்திலேயே ரசிகர்களை வெச்சுட்டு இருக்கிற ப்ரீத்தியும் கூட இருக்காங்க. அவங்களைப் பற்றியும் சொல்லிடுறேன்’' என்று பிரவீணா சொல்லும்போதே, ‘`அத்தை... நான்தான் உங்களுக்கு நாலாவது மருமகளா வருவேன்’' எனச் செல்லமாக மிரட்டுகிறார் `நந்தினி’ ப்ரீத்தி.

``அவந்திகாவும் சரி, கவிதாவும் சரி நிஜத்துலயும் ரொம்ப மெச்சூர்டான பொண்ணுங்க. வாழ்க்கையில் கஷ்ட, நஷ்டங்களை எல்லாம் தாண்டி வந்ததால் நிதானமா யோசிக்கிற பக்குவம் ரெண்டு பேருக்குமே வந்திடுச்சு. கிரண்மயியை, நாங்க `ஸ்வீட்டி'னுதான் கூப்பிடுவோம். பூமிகாவா எப்படி நடிக்கிறாளோ, அதே மாதிரி பாசமான பொண்ணு. ப்ரீத்தி அமைதியான, அலட்டல் இல்லாத பொண்ணு. ஆனா மருமகளா வந்துட்டா, ஆண்டவா... என்ன பாடுபடப்போறேனோ? அதனாலதான் இவளா... அவளானு சஸ்பென்ஸ்லேயே வெச்சிருக்கோம். நீ நடந்துகிறதைப் பொறுத்துதான் இருக்கு'’ என்று ப்ரீத்தியைக் கலாய்க்கிறார் பிரவீணா.

``அத்தை... நானும் உங்களைப் பற்றிச் சொல்வேன்’' என்று நிரஞ்சனியும் வேகமாகிறார். ‘`சேச்சி, ரொம்பப் பாசமானவங்க. வேலையில் அவ்ளோ பெர்ஃபெக்ட். எனக்கு நிறையச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. நிஜமா வீட்டில் எந்த ஒரு தலைக்கனமும் இல்லாம எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. அதைவிட செட்ல அதிகமா காமெடி பண்ணி எங்களை எல்லாம் சிரிக்கவைக்கிறவங்களும் சேச்சிதான்'’ என்று புகழ்ந்து தள்ளினார்.

`‘அதுக்குக் காரணம், வாழ்க்கையில் நான் கடந்து வந்த படிகள்தான்னு சொல்வேன். எதுவுமே நிரந்தரம் இல்லை. எல்லோரையும் அனுசரிச்சு, எதிர்காலத்துக்காகச் சேமித்து வெச்சு, வேலையைத் தாண்டி குடும்பம்தான் நமக்கு முக்கியம்கிற எண்ணத்தோடு இருக்கணும்கிறது என்னோட பாலிசி'’ அவ்வளவு பொறுப்பாகப் பேசுகிறார் பிரவீணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism