சினிமா
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

30 நாட்களில் தமிழ் பேசுவது எப்படி?

30 நாட்களில் தமிழ் பேசுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
30 நாட்களில் தமிழ் பேசுவது எப்படி?

பா.விஜயலட்சுமி, ஆர்.வைதேகி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், மீ.நிவேதன்

சின்னத்திரை வானை அலங்கரிக்கும் எழிலான நட்சத்திரங்கள், இந்த சீரியல் நாயகிகள். நம் குடும்பங்களில் ஓர் உறுப்பினராகிவிட்ட இந்த டி.வி செல்லங்களைச் சந்தித்தோம்...

சந்தியா

30 நாட்களில் தமிழ் பேசுவது எப்படி?

த்து வருடங்களுக்கு முன்னர் சந்தியாவிடம் பேச வேண்டும் என்றால், தெலுங்கில் மாட்லாடும் யாரையாவது பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்று, சந்தியா வேற லெவல். அவரைப்போலவே அவரது தமிழும் மெருகேறியுள்ளது. மறந்தும்கூட தெலுங்கு எட்டிப்பார்த்துவிடாதபடி சுந்தரத்தமிழில் உரையாடுகிறார் சன் டி.வி `வம்சம்' தொடரின் நாயகி சந்தியா.

``ஹைதராபாத் பொண்ணு நான். ப்ளஸ் டூ முடிச்சுட்டு பாக்கெட் மணிக்காக தெலுங்கு சேனல்ல காம்பியரிங் பண்ணிட்டிருந்தேன். அப்படியே தெலுங்கு சீரியல்லயும் நடிக்க ஆரம்பிச்சேன். நடிக்கத் தெரியுமானுகூட யோசிக்கலை. ஆனாலும் நடிப்பு நல்லாவே வந்தது. அப்ப எல்லாம் தெலுங்கு சீரியல்களோட ஷூட்டிங் சென்னையில்தான் அதிகமா நடக்கும். அப்படி நான் சென்னைக்கு ஷூட்டிங் வந்தப்ப தான் `செல்லமடி நீ எனக்கு' தமிழ் சீரியலுக்குக் கேட்டாங்க. அதுக்கு முன்னாடியே மலையாள சீரியல்ல நடிக்கவும் சான்ஸ் வந்தது. `எனிக்கி மலையாளம் அறியல்லா'னு சொல்லிட்டேன். கன்னடத்துல கேட்டப்ப, `கன்னடா கொத்தில்லா'னு சொல்லி, எஸ்கேப் ஆகிட்டேன். தமிழ்ல நடிக்கச் சொல்லிக் கேட்டபோதும் `எனக்கு தமிழ் தெரியாதுப்பா!'னு சொன்னேன். எல்லா மொழிகள்லயும் இந்த ஒண்ணை மட்டும் தெரிஞ்சுவெச்சுப்பேன். ஆனா, டைரக்டர் எஸ்.என்.சக்திவேல், `நாங்க பார்த்துக்கிறோம். நீ தைரியமா நடி!'னு சொல்லி தமிழ் சீரியல்ல என்னை நடிக்கவெச்சார். அவர்தான் என்னோட தெலுங்கு சீரியலுக்கும் டைரக்டர். ஏதோ ஒரு தைரியத்துல ஓ.கே சொல்லிட்டேன். எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது, அந்த நாள் வர்ற வரைக்கும். என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நாள் அது'' என்பவர், ஃப்ளாஷ்பேக்குக்குக் கூட்டிச் செல்கிறார்.

``ஒருநாள் பகல் 12 மணி வெயில்ல ஷூட்டிங். செருப்பு இல்லாம வெறும் கால்ல நடந்துகிட்டே பெரிய டயலாக் பேசுற மாதிரி சீன். கால் சூடு ஒரு பக்கம்... மண்டையைப் பிளக்கும் வெயில் இன்னொரு பக்கம். இதுல அவ்ளோ பெரிய டயலாக் பேச முடியாம, டேக் மேல டேக் போச்சு. `பாஷை தெரியாம ஏன் இங்கே வர்றீங்க? நம்ம ஊர்ல நடிகைகளே இல்லையா? இவங்களை எல்லாம் கூப்பிட்டு நடிக்கவெச்சா இப்படித்தான்!' என, என் காதுபடவே சிலர் பேசினாங்க. அன்னிக்கு அவ்ளோ அழுதேன். வீட்டுக்கு வந்து `30 நாட்களில் தமிழ் பேசுவது எப்படி?'கிற புக்கை வாங்கி வெறித்தனமா படிச்சேன். ரொம்ப கஷ்டப்பட்டு தமிழ் கத்துக்கிட்டேன். இன்னிக்கு எனக்கு தமிழ்ல பேச மட்டும் இல்லை, எழுதவும் படிக்கவும்கூட தெரியும். கலைஞர்களுக்கு, மொழிங்கிறது ஒரு தடை இல்லை. அதைக் கத்துக்கிறது மூலமா அந்த மொழிக்கு நாம மரியாதை செய்றோம். மொழியைவெச்சு ஒருத்தரோட திறமையை யாரும் முடிவுபண்ண வேணாம். ப்ளீஸ்!'' என்றார்.

``சினிமா ஆசை இல்லையா?''

``ஏன் இல்லை... ரொம்ப நாள் முன்னாடி ரகுவரன் சார் மகளா ஒரு படம் பண்ணியிருக்கேன். `பேய்கள் ஜாக்கிரதை'யில் நடிச்சேன். `மீச்சேரி வனபத்ரகாளி'னு நிறையப் படங்கள் பண்ணிருக்கேன்.''

``அடுத்து..?''

``பைலட் ஆகணும்னு எனக்கு சின்ன வயசுல ஆசை. என் உயரம் 5.7. ஆனா, எனக்கு சுத்தமா கணக்கு வராது. அதனாலேயே அந்த ஆசை நிராசையாச்சு. அப்புறம் அந்த ஆசையை ஏர் ஹோஸ்டஸ் ஆகியாவது நிறைவேத்திக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நடிகையாகிட்டேன். எல்லாமே கடவுளோட ப்ளான். யோசிச்சுப்பார்த்தா `நமக்கு எது பெஸ்ட்?'னு கடவுள் போடுற ப்ளான்தான் பல நேரங்கள்ல சரியா இருந்திருக்கு. அதனால், அவர் விருப்பத்துக்கே விட்டுட்டேன். வாழ்க்கையில் நமக்கு எல்லாம் டைரக்டர் அவர்தானே!'' சீரியல் மொழியிலேயே தத்துவம் சொல்கிறார் சந்தியா.