சினிமா
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

“வீட்டில் விரைவில் நாதஸ்வரம்!”

“வீட்டில் விரைவில் நாதஸ்வரம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“வீட்டில் விரைவில் நாதஸ்வரம்!”

பா.விஜயலட்சுமி, ஆர்.வைதேகி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், மீ.நிவேதன்

சின்னத்திரை வானை அலங்கரிக்கும் எழிலான நட்சத்திரங்கள், இந்த சீரியல் நாயகிகள். நம் குடும்பங்களில் ஓர் உறுப்பினராகிவிட்ட இந்த டி.வி செல்லங்களைச் சந்தித்தோம்...

ஸ்ரிதிகா

“வீட்டில் விரைவில் நாதஸ்வரம்!”

பார்த்துப் பார்த்துப் பிடித்துப்போன முகம் ஸ்ரிதிகா. சன் டி.வி-யில் `குலதெய்வம்' தொடரின் நாயகி. அலமேலுவாக மாறிய பிறகும்கூட இவரை `மலர்' என அழைப்பவர்களே அதிகம். அப்படி அழைப்பதில்தான் ஸ்ரிதிகாவுக்கும் மகிழ்ச்சி!

`` `நாதஸ்வரம்' முடியும்போது திருமுருகன் சார்கிட்ட, `நீங்களும் மலரும் அடுத்த சீரியல்லயும் சேர்ந்து நடிக்கணும்'னு நிறையப் பேர் கேட்டாங்க. கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் `நாதஸ்வரம்' யூனிட்ல `மலர்' கேரக்டராகவே வாழ்ந்தாச்சு. மறுபடி அதே பேனர்ல இன்னொரு சீரியல்லயும் என்னை நடிக்கவைப்பாங்கனு நினைச்சுகூடப் பார்க்கலை. அந்த சீரியல் முடிஞ்சு 15 நாள்ல `குலதெய்வம்' சீரியலுக்கு பூஜை போட்டாங்க. அப்பகூட நான்தான் அதுல ஹீரோயின்னு தெரியாது. திடீர்னு ஒருநாள் திருமுருகன் சார் கூப்பிட்டு, `நாளையில இருந்து ஷூட்டிங்'னு சொன்னப்ப, ஒண்ணும் புரியலை. இப்படியொரு சான்ஸ் எந்த நடிகைக்கும் கிடைக்காது. என் அக்கா சுதாவுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். அவ மட்டும் எனக்கு அட்வைஸ் பண்ணலைன்னா, இதெல்லாம் நிச்சயமா நடந்திருக்காது'' என, ஆரம்பக்கால எபிசோடுக்குள் அழைத்துச் செல்கிறார் ஸ்ரிதிகா.

``மலேசியாவுல சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா நிறைய நாடகங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அப்புறம் படிக்கிறதுக்காக இந்தியா வந்தேன். எனக்கு மியூஸிக்ல கொஞ்சம் ஆர்வம் உண்டுங்கிறதால சென்னையில்தான் அதுக்கான வாய்ப்பு கிடைக்கும்னு வந்தேன். என் அக்கா சுதா, ஏற்கெனவே சென்னையில் காம்பியரிங் பண்ணிட் டிருந்தா. ப்ளஸ் டூ லீவுல அவகூட ஷூட்டிங் வேடிக்கை பார்க்கப் போனப்ப, எனக்கும் ரெண்டு புரோகிராம் கொடுத்து காம்பியரிங் பண்ணச் சொல்லிட்டாங்க. அப்புறம் விளம்பரங்கள்ல நடிச்சேன். `கலசம்'னு ஒரு சீரியல்ல ரம்யாகிருஷ்ணன் மகளா நடிச்சேன். `வெண்ணிலா கபடி குழு', `மதுரை டு தேனி'னு ரெண்டு படங்கள் பண்ணினேன். அந்த டைம்லதான் `நாதஸ்வரம்'ல நடிக்கக் கேட்டாங்க. எனக்கு சீரியல் பண்ற ஐடியாவே இல்லை. என் அக்காதான் திருமுருகன் சார் பற்றி எடுத்துச் சொல்லி, `இது நிச்சயம் உனக்கு நல்ல பேர் வாங்கித் தரும்... பண்ணு'னு சொன்னா. திருமுருகன் சாரைப் போய்ப் பார்த்தேன். அன்னிக்கு ராத்திரியே காரைக்குடி கிளம்பியாச்சு. அஞ்சு வருஷம் எப்படிப் போச்சுன்னே தெரியலை. வாழ்க்கையில் நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்து நல்ல மனுஷங்களைச் சம்பாதிச்சுக் கொடுத்தது நாதஸ்வரம்'' என சிலிர்க்கும் ஸ்ரிதிகாவின் லேட்டஸ்ட் அவதாரம் பின்னணிப் பாடகி.

``சாப்பாடு இல்லாமக்கூட இருந்துடுவேன், மியூஸிக் இல்லாம என்னால வாழவே முடியாது. பாடிக்கிட்டே இருப்பேன்; பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன். இப்போ சினிமாவுலயும் பாட ஆரம்பிச்சுட்டேன். நிறையப் பாடணும்னு ஆசைதான். ஐ யம் வெயிட்டிங்'' என ஸ்டைலாகச் சொல்பவரின் வீட்டில் விரைவில் நாதஸ்வரம் ஒலிக்கப்
போகிறது.