Published:Updated:

“எனக்கு இதுதான் முதல் படம்!” - செல்வராகவன் ஓப்பன் டாக்

“எனக்கு இதுதான் முதல் படம்!” - செல்வராகவன் ஓப்பன் டாக்
பிரீமியம் ஸ்டோரி
“எனக்கு இதுதான் முதல் படம்!” - செல்வராகவன் ஓப்பன் டாக்

ம.கா.செந்தில்குமார்

“எனக்கு இதுதான் முதல் படம்!” - செல்வராகவன் ஓப்பன் டாக்

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
“எனக்கு இதுதான் முதல் படம்!” - செல்வராகவன் ஓப்பன் டாக்
பிரீமியம் ஸ்டோரி
“எனக்கு இதுதான் முதல் படம்!” - செல்வராகவன் ஓப்பன் டாக்
“எனக்கு இதுதான் முதல் படம்!” - செல்வராகவன் ஓப்பன் டாக்

‘‘எதுக்கு இவ்வளவு போட்டி, பொறாமை? இங்க நீயா... நானா ஜாஸ்தியா தெரியுதே தவிர, ஒற்றுமையைக் காணோம். ஏன்னா எனக்குக் குழி தோண்டத் தோண்ட, எனக்கு ரெண்டு பக்கங்கள்ல இருக்கிறவங்களும் கீழத்தான் போவாங்க. நாமெல்லாம் சேர்ந்து இந்த இண்டஸ்ட்ரியைத் தான் புதைக்கப்போறோம். இது மாறினா நல்லாயிருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்’’ - ‘‘இன்றைக்கு சினிமா எப்படி இருக்கு?’’ என்ற கேள்விக்குத்தான், இப்படிப் பதில் சொல்கிறார் இயக்குநர் செல்வராகவன். சிறிய இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா காம்போவுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துடன் வருகிறார்.

‘‘‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ன மாதிரியான படம்?’’

‘‘ஹாரர், மியூஸிக்கல், காமெடி, அது, இதுனு சினிமாவை ஒரு எல்லைக்குள் அடக்கக் கூடாது. அப்படி ஒரு எல்லைக்குள் இல்லாம படம் எடுக்கணும்னு ஆசை. இது அப்படியான படம். எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தீங்கன்னா, ‘நெஞ்சம் மறப்பதில்லை’  ஆச்சர்யப்படுத்தும்.’’

‘‘இப்படி ஒரு படம் பண்ணலாம்னு எப்ப தோணுச்சு?’’

‘‘என் நெருங்கிய நண்பர் டான்ஸ் மாஸ்டர் கல்யாண். அவர் டைரக்ட் பண்றதுக்கு ஒரு லைன் வெச்சிருந்தார். அதை நான் தயாரிக்கிறதா இருந்தது. பிறகு ‘இதை எழுதித் தர முடியுமா?’னு கேட்டார். எழுதித் தந்தேன். அதைப் படிச்சுட்டு, ‘நீங்க பண்ணினாத்தான் இது சரியா இருக்கும்’னு சொன்னார். இதுக்கு கல்யாண்தான் ஆரம்பப்புள்ளி.’’

‘‘ஆவி, பேய் படம்னு தோணுது. ‘பேய் படம் பண்ணணுமா?’னு யோசிச்சீங்களா?”

‘‘எனக்கு 41 வயசு. இதுவரை எந்த ஆவியையோ பேயையோ பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் தி.நகரில் நாங்க குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் சுடுகாடு. அப்ப அதுதான் எங்க ப்ளே கிரவுண்ட். அந்தக் கல்லறைகள் மேல பலநாள் படுத்துத் தூங்கியிருக்கோம். ஆனா, எந்த ஆவியையும் நான் பார்த்ததும் இல்லை. அந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. எதையும் எதிர்பார்க்காம வர்றதுதான் கலை. `இப்படித்தான் வேணும்'னா அது வியாபாரம். நாங்களும் வியாபாரத்துக்கு உட்பட்டுத்தான் இருக்கோம். ஆனா, ‘இப்படி ஒரு படம் பண்ணலாம்’னு தோணும்போது, மக்களும் திறந்த மனதோடு வந்தாங்கன்னா புதுப்புது முயற்சி பண்ண உந்துதலா இருக்கும்.’’

‘‘செல்வா-எஸ்.ஜே.சூர்யா ஆச்சர்ய காம்பினேஷன். அவர் எப்படிப் பண்ணியிருக்கார்?’’

‘‘இது, 12 வருஷங்களுக்கு முன்னாடி ‘7ஜி’ சமயத்துலேயே நடக்கவேண்டியது. ‘ஒரு படம் பண்ணலாமா?’னு அப்ப கேட்டேன். அவரும் ரொம்ப ஆர்வமா வந்தார். ஆனா, நான் வேறு ஒரு படத்துக்கு ஓடிட்டேன். ‘நீங்க 12 வருஷங் களுக்கு முன்னாடியே பண்ணியிருந்தீங்கன்னா இந்நேரம் நான் பெரிய ஸ்டார் ஆகியிருப்பேன். இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது’னார். முதல்ல இந்தப் படம் பண்ற ஐடியாவிலேயே இல்லை. ‘நாம ரெண்டு பேரும் ஒரு படம் பண்ணுவோம்’னு சொல்லி இந்த புராஜெக்டை ஆரம்பிச்சது கௌதம் வாசுதேவ் மேனன்தான். அவருக்குத்தான் நன்றி சொல்லணும்.’’

“எனக்கு இதுதான் முதல் படம்!” - செல்வராகவன் ஓப்பன் டாக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘டைரக்டர் சூர்யாவை நடிகரா ஹேண்டில் பண்றது எப்படி இருந்தது?’’

``தன்னை முழுசா ஒப்படைக்கிறவன் நடிகன். ஆனா, தானும் ஒரு பகுதியா புகுந்து அதில் விளையாடுறவன் டைரக்டர். அவர்கிட்ட அப்பப்ப டைரக்டர் வெளியே வருவான். ‘முதல்ல நீங்க வெளியே போய் உங்களுக்குள் இருக்கிற டைரக்டரை ஆஃப் பண்ணிட்டு வாங்க. பிறகு எடுக்கிறேன்’ம்பேன். ஏன்னா, டைரக்டர்ங்கிறவன், ‘இது சரியா, அது சரியா?’னு யோசிச்சிட்டே இருப்பான். நீங்க நினைக்கிற மாதிரி ஒரு டைரக்டர், நடிகராவது அவ்வளவு எளிது இல்லை. என் மேல இருக்கிற நம்பிக்கையில் வந்தார். இந்த கேரக்டர் பண்ண அவரைத் தவிர வேறு யாரும் கிடையாது. வெகுநாட்களுக்குப் பிறகு எனக்குக் கிடைச்ச நல்ல நண்பன் சூர்யா.’’

‘‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் காம்பினேஷன். என்ன பண்ணியிருக்கீங்க?’’

‘‘சேர்ந்தோம்; வாசிச்சோம்; காசாக்கினோம் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்தப் பட முதல் நாள் கம்போஸிங் அன்னைக்குச் சொன்னேன், ‘யுவன், இது உனக்கு முதல் படம்; எனக்கும் முதல் படம். அப்ப எப்படி வேலை செஞ்சேமோ அப்படியே வேலை செய்வோம்’னேன் அப்படியேதான் பண்ணினோம். நா.முத்துக்குமார் இல்லை என்ற வருத்தத்தைத் தவிர இது ஒரு நல்ல ஆல்பம்.”

‘‘நா.முத்துக்குமார் இழப்பை எப்படி உணர்றீங்க?’’

‘‘இதில் அவர் பாட்டு எழுதணும்னு விரும்பினோம். அந்த டைம்ல அவர் அமெரிக்காவுல இருந்தார். ‘மான்டேஜ்தானே, டம்மி லிரிக் எழுதி ஷூட் பண்ணிடுவோம். அவர் வந்ததும் எழுதி வாங்கிடலாம்’னு ரெண்டு பாட்டு பண்ணிட்டு அவர் வருவார்னு காத்திருந்தோம். அதுக்கு மேல நான் என்ன சொல்ல? நான் இடிஞ்சு உட்கார்ந்துட்டேன். யுவன் கண் கலங்கிட்டார். ‘என் நண்பன் எழுத வேண்டிய படத்துல வேறு ஒரு பாடலாசிரியர் எழுத வேண்டாம். அவருக்காக நீங்க எழுதினதா இருக்கட்டும். நீங்களே எழுதிடுங்க’னு யுவன் சொன்னார். நானே எழுதிட்டேன். மத்தவங்களுக்குத் தெரிஞ்ச முத்துக்குமாரை எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்ச முத்துக்குமார் ஒரு குழந்தை. அந்த நினைவோடவே நானும் போய்ச்சேரணும்னு ஆசைப்படுறேன். இந்த ஆல்பம் அவருக்கான ட்ரிபியூட்.’’

‘‘இந்த 17 வருட சினிமா பயணத்தை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘காலேஜ் முடிச்சுட்டு சினிமா ஆசையில் இருக்கும்போது, ஒரு ஃபயர் இருக்கும். சினிமாவை மாற்றப்போறேன்னு பல கனவுகள் வரும். ஆனா ‘இது அவ்வளவு எளிது இல்லை. மிகப்பெரிய ஆர்ட்’னு உள்ளே போய் நிக்கும்போதுதான் புரியும். திருமணம் ஆச்சு; பல நாடுகள் சுற்றியிருக்கேன். ‘சந்தோஷம் எது, எங்க கிடைக்கும்’னு தேடாத இடம் கிடையாது. இப்படி நிம்மதி இல்லாம திரிஞ்சப்ப, ‘வேலை செய்யுற அந்த எட்டு, பத்து மணி நேரம்தான் உண்மையான சந்தோஷம்’னு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மூலம்தான் விடை கிடைச்சது.  அந்தச் சந்தோஷம், வேலையில் மட்டும்தான் இருக்கு. மற்றவை எல்லாம் போலி. இதுமட்டும்தான் நான் கத்துக்கிட்ட பாடம். ஆனா, அந்த ஒரு பாடம் எனக்கு போதும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism