Published:Updated:

‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்!’

‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்!’
பிரீமியம் ஸ்டோரி
‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்!’

- கலங்கிய சிம்பும.கா.செந்தில்குமார்

‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்!’

- கலங்கிய சிம்பும.கா.செந்தில்குமார்

Published:Updated:
‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்!’
பிரீமியம் ஸ்டோரி
‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்!’
‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்!’

‘‘சிம்பு டப்பிங் பேச வருவார்னு மூணு நாளாக் காத்திருந்தோம். ஒருநாள் மதியம் 3 மணிக்கு வந்தார். கிட்டத் தட்ட அஞ்சு மணி நேரம் ஏதேதோ பேசிட்டிருந் தோம். நைட் 8 மணிக்கு டப்பிங் பேசத் தொடங்கினார். தொடர்ந்து அடுத்த நாள் மதியம் 12 மணி வரை ஒரே ஸ்ட்ரெச்ல பேசி முடிச்சார். பிரமாதமான டப்பிங். ரெண்டாவது பாதியில் அவரும் மஞ்சிமாவும் டாக்ஸியில் போற ஒரு போர்ஷன். டப்பிங் பேசிட்டு இருக்கும்போது திடீர்னு ‘ஸ்டாப்’னார். அறையில் அஞ்சு நிமிஷம் சைலன்ஸ். ஆடியோ ரூம்ல இருந்து வெளியே வந்தவர், என்னை அப்படியே கட்டிப் பிடிச்சுக்கிட்டார். அவர் அழுகிறார்ங்கிறதை என் ஷோல்டர்ல விழுந்த அவரோட கண்ணீரால உணர்ந்தேன். ‘எனக்கு 10 நிமிஷம் பிரேக் கொடுங்க’னு சொல்லி, என் அசோசியேட்டுடன் வெளியே போயிட்டார். பிறகு வந்தவர், ‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர். உங்களால மட்டும்தான் என்னை வெச்சு இப்படி எல்லாம் பண்ண முடியும். யாருமே என்னை இந்த அளவுக்குப் பயன்படுத்துறது இல்லை. நமக்குள்ள அப்படி ஒரு சிங்க் இருக்கு’னார். இதுதான் சிம்பு. ஆமாம், அவர் மாதிரியான ஆர்ட்டிஸ்ட்கூட வொர்க் பண்ணணும்னு நாங்க எல்லாரும் ஏங்குறோம், காத்திருக்கோம். இதுதான் உண்மை. அடுத்த படமும் அவர்கூடப் பண்ணக் கேட்டிருக்கேன்’’ - ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். காலதாமதம், பிரச்னை அனைத்தையும் கடந்து, படம் முடித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.

‘‘மூணு மாசத்துக்கு முன்னாடி வரை இந்தப் பட வியாபாரத்தில் எந்த மூவ்மென்ட்டும் கிடையாது. ஆனா, பாடல்கள், ட்ரெய்லர்கள் ரிலீஸ் ஆனதும் எதிர்பார்ப்பு வேற எங்கேயோ போயிடுச்சு. ஒரு படம் இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகு வெளிவருதுன்னா, ரிலீஸுக்கு முதல் நாள் நைட் வரை ஃபைனான்ஷியர் ஆபீஸ்ல உட்கார்ந்து கெஞ்சிட்டு இருப்போம். ஆனா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தின் பிசினஸ் முடிஞ்சிடுச்சு. லிங்குசாமி சார் போன் பண்ணி, ‘என்ன பிரச்னை இருந்தாலும் நமக்குள்ள இருக்கும் இந்தத் திமிர்தான் நம்மளைத் தொடர்ந்து இயக்கவைக்குது’னு சொன்னார். அவர் சொன்னதுதான் உண்மை.’’

‘‘இந்தப் படத்துல சிம்பு எப்படி பெர்ஃபார்ம் பண்ணியிருக்கார்?’’

‘‘இந்தப் படத்தை ரெண்டாவது முறை பார்க்கும்போது, உங்களுக்கு நிறைய கேரக்டர்ஸ் தெரிவாங்க. முதல் முறை பார்க்கும்போது நீங்க சிம்புவைத் தாண்டி வேற எதையும் பார்க்க மாட்டீங்க. அழகான ஹீரோயின் இருக்காங்க. ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா, சிம்பு உங்களை அரெஸ்ட் பண்ணுவார். சில இடங்கள்ல அவர் வெயிட் போட்டுதான் இருக்கார். அங்கே எல்லாம் `பிசிக்கலா அவர் இன்னும் சரியா இருந்திருக்கலாம்'னு தோணும். ‘பிரதர், நான் அந்த டைம்ல கொஞ்சம் ஃபோக்கஸ் இல்லை. கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன். அது என் தப்புதான்’னு அவரே சொன்னார். அதையும் தாண்டி நீங்க ஸ்க்ரீன்பிளேவுக்குள்ள இறங்கிட்டீங்கன்னா, அந்தக் கதையோடு கரைஞ்சுடுவீங்க.’’

‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஆனா, அவர் ‘நான் என் ரசிகர்களுக்காகத்தான் நடிக்கிறேன்’னு சொல்கிறாரே?’’

‘‘அவர் சொல்றதை என்னால ஏத்துக்கவே முடியாது. இன்னைக்கு அவர் இருக்கிற பொசிஷன் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அந்த இடத்துக்கு வர, ஒரு பிரேக் கிடைச்சுடாதானு எவ்வளவு பேர் ஏங்கி நிக்கிறாங்கனு அவருக்கே தெரியும். ஆனா, அவங்க எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைச்சுடுறது இல்லை. அப்படி இருக்கும்போது ‘அடுத்து என்ன, அடுத்து என்ன?னு, அவர் ஏன் பண்ணக் கூடாது?'னு தோணுது. எனக்கு அவர் மீது நிறைய விஷயங்கள்ல கோபம் இருக்கு. `நீங்க வேற லெவல்ல இருக்கணும். தினமும் ஷூட்டிங் போகணும். வருஷத்துக்கு உங்களோட ரெண்டு படங்கள் வரணும்'ங்கிறதுதான் என் எண்ணம்.’’

‘‘தாமரையின் பாடல் வரிகளை ரசிச்சு வாங்குறீங்க. அந்த மேஜிக் எப்படி?’’

‘‘ ‘கௌதம், என்ன சூழல்னு சொல்லலைனா என்னால எழுதவே முடியாது’ம்பாங்க. ‘இந்த மாதிரி, இந்த எண்ணத்துல வேணும்’னு அந்த ஃபீலைச் சொல்லிடுவேன். பிறகு, ஒண்ணே ஒண்ணை மட்டும் எழுதிக் கொடுத்து ‘இதுதான் பாட்டு கொண்டுபோங்க’னு சொல்லவே மாட்டாங்க. பல்லவி 2, பல்லவி 5, பல்லவி 10, சரணம் 1, சரணம் 10னு எனக்குத் தெரிஞ்சு குறைந்தபட்சம் 15 ஆப்ஷன்ஸ் கொடுப்பாங்க. அதுல இருந்து நான் மீட்டரை மனசுல வெச்சு, இதுதான் இதுதான்னு ஃபிக்ஸ் பண்ணுவேன். ‘ஐயோ கௌதம்! இது ரொம்ப அழகா இருக்கு. இதை மிஸ் பண்ணாதீங்க’ம்பாங்க. ‘இது வேணாமே’னா, ‘அது நான் ரொம்ப ரசிச்சு எழுதினது’ம்பாங்க. பிறகு, நாங்க பேசி செலெக்ட் பண்ணினதை ரஹ்மான் சார்கிட்ட கொடுப்போம். அப்படி அவர் பார்த்ததுமே, ‘தள்ளிப் போகாதே...’வை மட்டும் ஒரு கரெக்‌ஷன்கூட இல்லாம ‘பியூட்டிஃபுல். ரிக்கார்டிங் போகலாம்’னார். ரஹ்மான் சார், ‘தாமரையை மிஸ் பண்ணாதீங்க கௌதம். நீங்க ரெண்டு பேரும் சேரும்போது ஒரு மேஜிக் இருக்கு’னு சொல்வார். என் சினிமாவில் தாமரையின் பங்கு மிகப்பெரியது, முக்கியமானது.’’

‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்!’

‘‘ஃபேமிலி பற்றிப் பேசுவோம். உங்க பசங்க என்ன பண்றாங்க?’’

‘பசங்க வளர்ந்துட்டாங்க. என் மூத்த பையன் ஆர்யாவுக்கு 13 வயசு. நல்லா படிக்கிறான். அதேசமயம் கிரிக்கெட், லெஃப்ட் ஆர்ம் ஃபாஸ்ட் பெளலர். சண்டேன்னா அவன் மேட்சுக்குப் போய் உட்கார்ந்து அதைப் பார்க்கணும். அதுல எங்களுக்கு ஒரு சந்தோஷம். ரெண்டாவது பையன் துருவா. அவனுக்கும் கிரிக்கெட்தான். பேட்ஸ்மேன் அண்ட் பெளலர். மூணாவது பையன் ஆத்வியாவுக்கு இப்பதான் ஏழு வயசு. மூணு பேரும் ஒரே மாதிரி வருவாங்கனு தோணுது.

மூணு பேருமே ‘என்னை அறிந்தால்’ தவிர என் எந்தப் படத்தையும் பார்த்ததே இல்லை. இங்கிலீஷ்ல அவங்க பார்க்கிற மாதிரி படங்கள் வந்தா மட்டும் கூட்டிட்டுப் போவேன். எனக்கு ஒரே ஒரு பயம் என்னன்னா, ‘இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கு. அதுக்குள்ள நாம ஈஸியா வந்துடலாம்’னு அவங்க நினைச்சுடக் கூடாதுனு பார்க்கிறேன்.

குடும்பமே மியூஸிக் லவ்வர்ஸ். பெரியவன் ஒரு பிளேலிஸ்ட் வெச்சிருக்கான். நிறையப் புதுப் பாடல்கள் அவன்கிட்ட இருந்து வாங்கித்தான் நான் கேட்டிருக்கேன். ‘நல்லா இருக்கும் கேட்டுப்பாருங்க’னு அவன் சொல்லித்தான் அனிருத்தோட ‘தங்கமே...’ கேட்டேன். ‘டேய், இந்த மாதிரி ஒரு லவ் ஃபீல் சாங் இருந்தா சொல்லுடா’னு கேட்டேன். ‘இதைக் கேளுங்க’னு எனக்கு ஒரு பாட்டு தந்தான். அதை வெச்சுத்தான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் ஒரு பாட்டை ஷூட் பண்ணினேன். இவங்களாலதான் என் வாழ்க்கை அழகா இருக்குனு நினைக்கிறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism