Published:Updated:

“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”

“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: உ.கிரண்குமார்

“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: உ.கிரண்குமார்

Published:Updated:
“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”
“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”

ரே நாளில் மூன்று படங்கள், மூன்று ஹீரோக்கள், மூன்று லொக்கேஷன்கள்... - செம பிஸியாக இருக்கிறார், தமிழ் சினிமாவின் பேச்சுலர் காமெடியன் சதீஷ். 

``கிரேஸி மோகன் க்ரூப்ல எட்டு வருஷம் நடிப்பு, வசனம், இன்னபிற வேலைகள்னு இருந்த என்னை,   ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் உதவி வசனகர்த்தாவா சேர்த்துக்கிட்டார் இயக்குநர் ஏ.எல்.விஜய். என் டைமிங் சென்ஸ் அவருக்குப் பிடிச்சுப்போக, `மதராசப்பட்டினம்' படத்தில் நடிக்க சின்ன ரோல் கொடுத்தார். அணிலுக்கு ராமாயணத்துல சின்ன ரோல்தான் பாஸ். ஆனா இன்னும் அதை ஞாபகம் வெச்சுக்கறோம்ல, அப்படி அந்த ரோலை நல்லா பண்ணினேன். இப்போ பேட்டி குடுக்கிற அளவுக்கு ஃபார்ம் ஆகிட்டேன்.”

“விஜய்யுடன் இரண்டாவது படம் ‘பைரவா’. விஜய் என்ன சொல்றார்?”

“விஜய் சார்கூட நடிக்கிறது எல்லாம் நினைச்சுப் பார்க்காதது. நான் ரொம்ப வியந்து பார்த்த நடிகர் அவர்.  `கத்தி' படத்துல டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கும்போது விஜய் சார் வந்தார். ‘என்ன பண்ணிட்டிருக்கீங்க?’ன்னார். ‘டான்ஸ் ப்ராக்டீஸ்’னு சொன்னேன். அவரு டக்னு ‘அப்ப நான் பண்றதெல்லாம்?’னு கேட்டார். செம பல்பு எனக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`பைரவா' ஷூட்ல `கத்தி'யைவிட யூத்தா வந்து நிக்குறார். ‘இப்டி எல்லாம் பண்ணாதீங்க ப்ரோ. உங்களுக்காகப் படத்துக்குப் படம் நான் யூத்தாக முடியாது’னு சொன்னேன். பக்னு சிரிச்சுட்டார்.

“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”

“சிட்டி சப்ஜெக்ட் என்றால் சிவகார்த்திகேயனின் எல்லா படங்களிலும் நீங்க இருக்கீங்களே... உங்க நட்பைப் பற்றி சொல்லுங்க?”

“ஒருநாள் ஷங்கர் சார் அசிஸ்டன்ட் ஒருத்தர், ` `முகப்புத்தகம்'னு ஷார்ட் ஃப்லிம் பண்றேன். நீங்க நடிக்க வாங்க’னு கூப்பிட்டார். அங்கதான் முதல்முறையா சிவாவைப் பார்த்தேன். ஒரு மணி நேரம் பேசி, செம ஃப்ரெண்ட் ஆகிட்டோம். அவருக்கு சினிமாவுல காமெடியனா வளரணும்னு ஆசைனு தெரிஞ்சதுமே எனக்குப் பயமாப்போச்சு.  ‘இவரு ஹீரோன்னா நாம காமெடியன் ஆகலாம். இவரு காமெடியன்னா நாம என்னாகுறது?’னு தோணிச்சு. ‘என்ன ப்ரோ.. ஆள் ஃபிட்டா இருக்கீங்க. டான்ஸ் ஷோல பின்றீங்க. குட்டீஸ், லேடீஸ்க்கு எல்லாம் உங்களை ரொம்பப் பிடிக்குது. நீங்க ஹீரோ மெட்டீரியல் ப்ரோ. காமெடி எல்லாம் நான் பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டே இருப்பேன். அப்புறம் அவர் `மெரினா’ படத்துல கமிட் ஆனார். அவர் ஃப்ரெண்ட் கேரக்டர் எனக்கு. அந்த சான்ஸ் கிடைக்க ரொம்பச் சிரமப்பட்டேன். `சிவப்பா இருக்கேன்’னு சொல்லிட்டார் பாண்டிராஜ் சார். ‘ஓவியாவைக் கட்டிக்கிற மாப்பிள்ளை கேரக்டர் பண்றீங்களா?’னு கேட்டார். ஓவியாவைவிட, நான் சிவகார்த்திகேயன்கூட வரணும்னுதான் ஆசை. (அவ்ளோ நல்லவரா ப்ரோ நீங்க?) நான் கறுப்பா தெரியணும்னு நாலு மணி நேரம் வெயில்ல நின்னு பாண்டிராஜ்கிட்ட சான்ஸ் வாங்கி, அந்த ரோல் பண்ணினேன். அது இப்ப `ரெமோ’ வரைக்கும் வந்திருக்கு.”

“வீட்ல என்ன சொல்றாங்க?”

``படிச்சு முடிச்சுட்டு ஒருநாள் அம்மாகிட்ட, ‘சினிமாக்குப் போகணும்னு ஆசையா இருக்கும்மா’னு சொன்னேன். ‘சரி போ... ஆனா நைட் வந்து சாப்பிட்டுப் படுத்துடணும்’னு  சொன்னாங்க. சினிமான்னா அவங்களுக்கு அவ்வளவுதான். ஒரு தடவை அம்மா போன் பண்ணினப்ப, ‘அப்பறம் கூப்பிடுறேன்மா. `எதிர்நீச்சல்’ டப்பிங்ல இருக்கேன்’னு சொன்னேன். ‘ஓ... அது டப்பிங் படமா?’னு கேட்டாங்க. அவ்ளோதான் அவங்க யோசிப்பாங்க. இப்ப `பைரவா’ பூஜையில் நானும் கீர்த்திசுரேஷும் வேஷ்டி - சாரில நிற்கிற மாதிரி, ஸ்டில் போட்டு கிசுகிசு வந்தது. அம்மா கேட்டாங்க. ‘அப்படி எல்லாம் இல்லைம்மா. அவங்க யார் தெரியுமா? மேனகா பொண்ணுமா’னு சொன்னேன். ‘ஓ.. அப்ப இன்விடேஷன்லாம் மேனகா கார்ட்ஸ்லயே அடிச்சுக்கலாம்’கிறாங்க. எவ்ளோ பொது அறிவு பாருங்க.  ஆனா `எதிர்நீச்சல்’ படம் வரைக்குமே, ‘டேய் எம்ப்ளாய்மென்ட் கார்டு புதுப்பிச்சுட்டியா?’னு திட்டிட்டே இருப்பாங்க. அப்புறமாதான், சரி... இவன் சினிமாவுல ஏதோ பண்றான்னு அவங்களுக்கு நம்பிக்கை வந்தது. அக்கா கல்யாணம் பண்ணிட்டு திண்டிவனத்துல இருக்காங்க. நமக்குச் சின்ன வயசு பாருங்க... அதான் ஃப்ரீயா விட்டுவெச்சிருக்காங்க. ஆனா, வீட்டுல சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்றதுன்னு நான் உறுதியா இருக்கேன்.”

“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”

“எப்ப ஹீரோவாகப்போறீங்க?”

“கலாய்க்க டைமில்லைன்னுட்டு, நீங்க என்னைக் கலாய்க்கிறீங்களா? போங்க ப்ரோ!”

நடக்கும் ப்ரோ... பார்த்துட்டே இருங்க!

“உங்க வாட்ஸ்அப்பை ஓப்பன் பண்ணி, மேல இருந்து மூணாவது மெசேஜ் அனுப்பியது யார்... என்ன மெசேஜ்னு காட்டுங்க...”

‘நாளைக்கு காலை 8:15 மணிக்கு பின்னி மில்லுக்கு `பைரவா’ ஷூட்டிங் வந்திருங்க’ - இது அசிஸ்டன்ட் டைரக்டர் மெசேஜ்.

ரஜினி படத்துல அவர்கூடவே வர்ற ரோல்.  ஆனா பாதி மொட்டையடிச்சுட்டு, பாதி மீசையை எடுத்துட்டு நடிக்கணும். ஓகே சொல்வீங்களா?”

“ரஜினி சார் பர்த்டே 12.12.2012 அன்று, சிவகார்த்திகேயனைக் கூப்பிட்டாங்க ஐஸ்வர்யா மேடம். என்கிட்ட சொல்லாமக் கிளம்பப் பார்த்தார் சிவா. சண்டை போட்டுட்டே அவருகூட போய்ப் பார்த்தேன். `என்னைத்தான் கூப்பிட்டார். உன்னை எப்படிக் கூட்டிட்டுப்போவேன்?’னு ஃப்ரெண்ட்ஷிப் கட் ஆகிற அளவு திட்டிட்டே வந்தார் சிவா. `கேட் வரைக்கும் கொண்டுபோய் விட்டுடு. அப்புறம் நான் பார்த்துக்கிறேன்’னு போனேன். அப்படி ஒரு ரஜினி ஃபேன் நான். சூப்பர் ஸ்டார்கூடன்னா நிச்சயம் பண்ணுவேன்!”

“நானும் ஒரு அணில்தான் பாஸ்!”

“பெண்ணா பிறந்திருந்தா, யாரா இருந்திருப்பீங்க?”

“ஆம்பளை கம்பவுன்ட்டர் கெட்டப் போட்டு, நர்ஸ் சிவகார்த்திகேயனைக் காதலிச்சுட்டு இருந்திருப்பேன்.”

‘`நீங்க ஒரு விஞ்ஞானியா இருந்திருந்தா, என்ன கண்டுபிடிச்சிருப்பீங்க?’’

“போனை அங்க இங்க வெச்சுட்டு அதையே கண்டுபிடிக்கிறதில்லை நான். ரிமோட் தொலைஞ்சா, `மிஸ்டுகால் குடுக்கலாமா?’னு யோசிப்பேன். ஆங்... தொலைஞ்சதைக் கண்டுபிடிக்க, ஏதாச்சும் கண்டுபிடிப்பேன்.”

``நீங்களும் சிவகார்த்திகேயனும்  ஈ.சி.ஆர்-ல ஒரு ரிசார்ட்ல செம பார்ட்டியில இருந்த ஸ்டில் ஒண்ணு எங்ககிட்ட இருக்கு...”

“போங்க பாஸ். நாங்க ரெண்டு பேருமே டீ டோட்டலர்ஸ். வேறு எதுனா சொல்லுங்க.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism