Published:Updated:

“நான் இப்போ ரொம்ப பிஸி!”

“நான் இப்போ ரொம்ப பிஸி!”
பிரீமியம் ஸ்டோரி
“நான் இப்போ ரொம்ப பிஸி!”

ஆர்.வைதேகி

“நான் இப்போ ரொம்ப பிஸி!”

ஆர்.வைதேகி

Published:Updated:
“நான் இப்போ ரொம்ப பிஸி!”
பிரீமியம் ஸ்டோரி
“நான் இப்போ ரொம்ப பிஸி!”

மிழ் சினிமாவில், இது தமன்னா சீஸன். `தர்மதுரை'க்குப் பிறகு `தேவி', `கத்தி சண்டை', `அன்பானவன், அசராதவன், அடங்காதவன்', `பாகுபலி-2' என, திரும்பும் பக்கம் எல்லாம் தமன்னா!

கிளாமர் டாலாக மட்டும் இல்லாமல், நடிப்பிலும் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார் தமன்னா.

``யெஸ்... `பாகுபலி' முடிச்சு ஒன்றரை வருஷம் ஆச்சு. அந்தப் படத்துல என் கேரக்டரைப் பார்த்துட்டு பலரோட பார்வையும் மாறினது. அதுவரைக்கும் என்னை கிளாமர் ஹீரோயினா மட்டுமே பார்த்தவங்களுக்கு, `தமன்னாவால இப்படியொரு கனமான கேரக்டரையும் பண்ண முடியும்'னு நம்பிக்கை வந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேத்துற மாதிரியான கேரக்டர்களை செலெக்ட் பண்ணணும்கிற பொறுப்பு அதிகமாகிடுச்சு. நல்ல கதைகள், நல்ல கேரக்டர்களுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன். அந்த மாதிரியான வாய்ப்புகள் வந்ததும் மறுபடியும் பிஸியாகிட்டேன்.''

“நான் இப்போ ரொம்ப பிஸி!”

``உங்களுக்குள் இருந்த நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய சமீபத்திய படம் `தேவி'. அந்த அனுபவம் எப்படி இருந்தது?''

``என் கரியர்ல முக்கியமான, மறக்க முடியாத படம் `தேவி'. தமிழ், தெலுங்கு, இந்தினு ஒரே டைம்ல மூணு மொழிகள்ல வந்ததால, அது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரொம்ப கஷ்டமான அனுபவமாவும் இருந்தது. மாத்தி மாத்தி ரெண்டு கேரக்டர். ஒரே டயலாக்கை தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிகள்ல மாத்தி மாத்திச் சொல்லி நடிக்கணும். டயலாக் மட்டும் இல்லாம, பாட்டு, டான்ஸ்னு எல்லாமே மூணு மூணு வாட்டி. அதுவும் பிரபுதேவாகூட டான்ஸ்... சான்ஸே இல்லை. படத்துக்கு ரொம்ப பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தது. சந்தோஷமா இருக்கேன்.''

`` `பாகுபலி-2' ''

`` `பாகுபலி'யைவிட ரொம்பப் பெரிய புராஜெக்ட் இது. அதுலயும் எனக்கு வாரியர் கேரக்டர்தான். அதுக்காக இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலா வொர்க் பண்ணியிருக்கேன். குதிரை ஏற்றம் கத்துக்கிட்டு, அதையும் படத்துல பண்ணியிருக்கேன். முதல் பார்ட்டைவிட இதுல ரசிகர்களுக்கு என்னை இன்னும் பிடிக்கும்.''

``உங்க ஹீரோஸ்ல யார் ரொம்ப ஸ்பெஷல்?''

``என் ஹீரோஸ் ஒவ்வொருத்தருமே எனக்கு ஸ்பெஷல்தான். தனுஷை இன்னிக்கு இன்டர்நேஷனல் ஆக்டரா பார்க்கும்போது பெருமையா இருக்கு. ஒரு நடிகரா எங்கேயோ போயிட்டார்.

சூர்யா, கார்த்தி ரெண்டு பேருக்கும் நான் ஃபேமிலி ஃப்ரெண்ட். `பருத்திவீரன்'லயும், `பையா'வுலயும் பார்த்த கார்த்தியானு ஆச்சர்யப்படும் அளவுக்கு `காஷ்மோரா'வுல மிரட்டியிருக்கார். மணிரத்னம் சாரோட படத்துல புது கெட்டப்ல கார்த்தியைப் பார்க்க, ஐ யம் வெயிட்டிங்.

ஜெயம் ரவிக்கு நடிப்புல உள்ள பேஷன் சாதாரணமானது இல்லை. அவர் ஃபேமிலிக்கே என்னைப் பிடிக்கும்.

விஷால்கூட பல படங்கள் பண்ணவேண்டி வந்தும் முடியாமப்போச்சு. இப்ப `கத்தி சண்டை'யில பண்ணியிருக்கேன். கமர்ஷியல் ஜானர்ல படங்கள் பண்ற விஷாலோட ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்.

விஜய் சேதுபதியோட பெர்ஃபார்மன்ஸ், டயலாக் டெலிவரினு எல்லாத்துக்கும் நான் ரசிகை. இந்த வருஷம் அதிக படங்கள்ல நடிச்ச ஹீரோ அவர்தானாமே!

பிரபுதேவாகூட வொர்க் பண்ணினது ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு டைரக்டரா அவரோட திறமையைப் பார்த்திருக்கேன். `தேவி'யில அவரோட நடிப்பைப் பார்த்து மிரண்டுட்டேன். அவர் இன்னும் நிறையப் படங்கள்ல நடிக்கணும்கிறது ஒரு ரசிகையா என் ஆசை.''

``கிசுகிசுக்களை நீங்க எப்படி எடுத்துப்பீங்க? அவற்றைத் தவிர்க்கத்தான் தெலுங்குப் பக்கம் போனதா ஒரு பேச்சு அடிபட்டதே?''

``தமிழ்ல பிஸியா இருந்தப்பவே தெலுங்குப் படங்கள்ல வாய்ப்புகள் வந்தன. நல்ல நல்ல படங்கள்... நல்ல கேரக்டர்ஸ். நான் எப்படினு எனக்குத் தெரியும். எனக்கு நான் சரியா வாழ்றேன். என்னைப் பத்தின எல்லா கிசுகிசுக்களுக்கும் பதில் சொல்லிட்டிருக்கிறது என் வேலையும் இல்லை... தேவையும் இல்லை.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism