Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

மீபத்தில் வெளியாகி, சக்கைப்போடுபோட்ட அண்டை மாநிலத்து அசத்தல் படங்கள் இவை. இந்தப் படங்களை இயக்கியவர்கள் அனைவருமே புதுமுகங்கள்...

ஷனம் (தெலுங்கு)

விகடன் சாய்ஸ்

டோலிவுட்டை அதிரவைத்த சூப்பர் ஹிட் த்ரில்லர். 25 வயது இளம் இயக்குநர் ரவிகாந்தின் முதல் படம். தன் மகள் கடத்தப்பட்டுவிட்டதாக, நாயகனுக்குப் முன்னாள் காதலியிடம் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது. பதற்றத்தோடு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் நாயகன், முன்னாள் காதலியோடு விசாரணையில் இறங்க, ஏராளமான திடுக்கிடும் திருப்பங்கள், திகைக்கவைக்கும் பாத்திரங்கள்... என, ஃப்ரீஸரில் இருந்து எடுத்த ஐஸ்கட்டியை, வாய்க்குள் போட்டதுபோல, திக்குமுக்காட செய்யும் செம த்ரில்லர் படம்!. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோதி பன்னா சதர்னா மைகட்டு (கன்னடம்)

விகடன் சாய்ஸ்

`கோதுமை நிறம், சாதாரண உடற்கட்டு' இதுதான் இந்தக் கன்னடப் படத் தலைப் புக்கு அர்த்தம். ஹேமந்த் ராவ் என்கிற இளம் இயக்குநரின் முதல் படம். அல்கைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரை, அவருடைய மகன் முதியோர் காப்பகத்தில் சேர்க்கிறான். அப்பா தொலைந்துபோகிறார். மகன் அவரைத் தேட ஆரம்பிக்க, ஒரு கொலை நடக்கிறது. அப்போது முதியவர் பற்றி பல விஷயங்கள் தெரியவருகின்றன. இதுதான் படத்தின் கதை. ஆனால், வெறும் அப்பா-மகன் உறவு என இல்லாமல் காதல், நேசம், அன்பு, பிரிவு... எனப் பலவித உணர்வுகளைக் கொட்டி, கலந்து, இந்தப் படத்தை சூப்பர் மிக்ஸரில் உருவாக்கியிருக்கிறார் ஹேமந்த். பல விருதுகள் வென்றதோடு, பாக்ஸ் ஆபீஸிலும் சூப்பர் டூப்பர் ஹிட்!

பெல்லி சூப்புலு (தெலுங்கு)

விகடன் சாய்ஸ்

அடிதடி, குத்துப்பாடல், பன்ச் டயலாக்... என தெலுங்கு சினிமா எப்போதுமே, காரமும் காரம்சார்ந்த இடமும்தான். ஆனால், அந்த ட்ரெண்டில் இருந்து விலகி, க்யூட் ரொமான்டிக் காமெடி முயற்சி. பெண் பார்க்கவரும் நாயகன் தற்செயலாக மணப்பெண்ணுடன் வீட்டின் ஓர் அறையில் மாட்டிக்கொள்கிறான். `திருமணத்தில் விருப்பம் இல்லை’ என அவள் சொல்ல, அதைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்கள்தான் படம். சாதாரண கதையை அசாதாரண உணர்வுகளால் சுவாரஸ்யபடுத்தியதால், படத்தை இந்தியில் கரண்ஜோகரும், தமிழில் கௌதம் மேனனும் ரீமேக்க இருக்கிறார்கள்!

அனுராக கரிக்கின் வெள்ளம் (மலையாளம்)

விகடன் சாய்ஸ்

முரட்டு போலீஸ் அதிகாரி, எதிர்பாராத ஒரு நாளில், தன் முன்னாள் காதலியைப் பார்க்கிறார்; அவளுடன் பேசத் துடிக்கிறார். இதே சமயத்தில் தன் காதலியோடு சண்டைபோட்டுப் பிரிகிறான் போலீஸ் அதிகாரியின் மகன். திடீரென முரட்டு போலீஸ் மனம்மாற வீடு கலகலப்பாகிறது. இந்த மாற்றத்துக்குக் காரணம், அவர் போனில் பேசும் ஒரு பெண். அது வேறு யாரும் அல்ல, மகன் `வேண்டாம்’ எனச் சொன்ன அவனது காதலி. போலீஸ்காரர் தன் முன்னாள் காதலி என நினைத்து மகனின் காதலியிடம் பேசிக்கொண்டி ருக்க, மகனுக்கு செம ஷாக். இதன் பின்னர் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களும், க்ளைமாக்ஸில் தெரியவரும் ட்விஸ்ட்டும் என க்யூட்டான காதல் கதை இது. `அனுராகம்’ என்றால் காதல் - அன்பு; `கரிக்கின் வெள்ளம்’ என்றால் இளநீர். படத் தலைப்பில் இருந்தே, ஓர் அழகை இழையோடச் செய்த இயக்குநர் ஹாலித் ரஹ்மானுக்கு இதுவே முதல் படம்!

கிஸ்மத் (மலையாளம்) 

விகடன் சாய்ஸ்

கேரளாவின் சிறிய கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ஒருவனுக்கும், அவனைவிட வயதில் மூத்த ஒரு தலித் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இந்தக் காதலை சமூகம் எந்த விதத்தில் எதிர்கொள்கிறது என்பதே `கிஸ்மத்’. சிறிய பட்ஜெட்டில் தயாராகி, அதிக விளம்பரங்கள் இல்லாமல் வெளியான இந்தப் படம், கேரள மக்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடிப்படைவாதம் பேசுகிற மத நிறுவனங்கள் எப்படி எல்லாம், காதல் மீது கட்டுபாட்டுகளை விதிக்கின்றன, காதலர்கள் நம்மிடையே எப்படிச் சிதைக்கப்படுகிறார்கள் என்பதை, வலிமையோடு பேசியது இந்தத் திரைப்படம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism