Published:Updated:

`தாமரை நிச்சயம் மலரும். கூடவே...!’’ - சமூக அவலங்களைச் சாடும் `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`தாமரை நிச்சயம் மலரும். கூடவே...!’’ - சமூக அவலங்களைச் சாடும் `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம்
`தாமரை நிச்சயம் மலரும். கூடவே...!’’ - சமூக அவலங்களைச் சாடும் `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம்

`தாமரை நிச்சயம் மலரும். கூடவே...!’’ - சமூக அவலங்களைச் சாடும் `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`தாமரை நிச்சயம் மலரும். ஆனா, அதுகூடவே இலையும் மலரும்', `நான் ஏமாத்தினாலும் உழைச்சு ஏமாத்துவேன்' இப்படி ஏகப்பட்ட அரசியல் நையாண்டி வசனங்கள் நிறைந்த நவீன காலத்து `ரத்தக்கண்ணீர்' படத்தைப் பார்த்ததுபோல இருந்தது, `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம்.

நாடகம் சொல்லிய கதை:

கடந்த சில ஆண்டுகளாக `பிரேக்கிங்' நியூஸுக்கு குறைவில்லாமல் நம்மை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கிறார்கள் பல பெரும்புள்ளிகள். இவற்றையெல்லாம் சாதாரண ஒரு மனிதன் இன்னொரு சாதாரண ஒரு மனிதனைப் பார்த்துக் கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் என்பதுதான் கதையின் கரு. கதைக்கேற்ற கதாபாத்திரங்களை வடிவமைத்து, காட்சிகளை நகர்த்திய விதம்தான் இந்த `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகத்தின் வெற்றிக்குக் காரணம்.

கார்ப்பரேட் அட்ராசிட்டி, நீட், காவிரி, ஸ்டெர்லைட் போன்ற பிரச்னைகள், IPL சேட்டை முதல் ஜெயலலிதா மரணம் வரை அனைத்தையும் `அஜய் மல்லையா' எனும் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியவிதம் `செம ஸ்மார்ட்'. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் செயல்பாடு, ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் பொதுமக்களின் நிலை இப்படி அவங்க டச் பண்ணாத ஏரியாவே இல்லை. `டிரைவிங் லைசென்ஸ் எடுக்க 250 ரூபாய் இருந்தா போதும், சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை' போன்ற வசனங்கள் மக்களைச் சிந்திக்கவைக்கும் வகையில் இருந்தன. 

ஒவ்வொரு சீனுக்கும் ஏற்ற பின்னணி இசை மற்றும் நடிகர்களின் பாடி லாங்வேஜ் அனைத்தும் வேற லெவல். ஏகப்பட்ட நையாண்டி வசனங்கள் நிறைந்திருந்தாலும், ஒரு நொடிகூட முகம் சுழிக்கவைக்காமல், மக்களின் கைத்தட்டல்களைத்தான் பரிசாக வாங்கியது. ஏமாளி மக்கள் இருக்கும் வரையில் 100 மல்லையாக்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை சுவாரஸ்யத்தோடு சொன்ன `பிளாக் ஷீப்' டீமுக்கு ஹேட்ஸ் ஆஃப்!

``சுதந்திரப் போராட்டத்தின்போதும், அதுக்கு அப்புறமும், ஆளும்கட்சியின் ஏகாதிபத்தியத்தையும் அதிகாரவர்க்கத்தையும் கேள்வி கேட்கிற ஒரு மிகப்பெரிய ஆயுதமா இருந்தது நாடகக் கலை. காலங்காலமா மக்களோட வரவேற்பை அதிகம் பெற்ற இந்தக் கலை, வெள்ளித்திரை, சின்னத்திரை, குறுந்திரை அதாவது எங்களைப்போல யூடியூபர்ஸ், இவங்களோட தாக்கத்துனால கொஞ்சம்கொஞ்சமா அழிஞ்சுட்டு வருது. எங்களால முடிஞ்சளவுக்குக் காப்பாத்தணும்னு நினைச்சு பண்ணினதுதான் இந்த `நவயுக ரத்தக்கண்ணீர்' நாடகம்" என்று ஆரம்பமே மூன்றாவது கியர் வேகத்தில் பேசுகிறார் `விக்கிலீக்ஸ் புகழ்' மற்றும் இந்த நாடகத்தின் எழுத்தாளர் `டூட் விக்கி'.

``எதனால் `நவயுக ரத்தக்கண்ணீர்'?''

``1952-ல வெளிவந்த `ரத்தக்கண்ணீர்', எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். திரைப்படமா வர்றதுக்கு முன்னாடியே நாடகமா போட்டுட்டிருந்தாங்க. அந்தக் காலத்துலேயே தன்னோட மனைவியை, அவரோட நண்பனுக்கு கல்யாணம் செஞ்சுகொடுக்கிற மாதிரி காட்சி அமைச்சிருப்பாங்க. அது மக்களால ஏத்துக்கப்பட்டு ஹிட்டும் ஆச்சு. இப்படி தைரியமா பல விஷயங்களைச் சொல்ல நல்ல டூல் `நாடகம்'தான்னு தோணுச்சு.

எனக்கு ரொம்பப் பிடிச்ச `ரத்தக்கண்ணீர்' நாடகத்தை இப்போ எடுக்கணும்னு நினைச்சப்போ, இந்த டைட்டுலுக்கு கொஞ்சமாச்சு ஜஸ்டிஃபிகேஷன் பண்ணணும்னு ரொம்பப் பெரிய பொறுப்பும் இருந்துச்சு. இந்த நாடகத்தோட கதையை எழுத ஆரம்பிக்கிற வரைக்கும் நான் ஒரு நாடகம்கூட பார்த்ததில்லை. சபா நாடகங்கள், கூத்துப்பட்டறை நாடகங்கள், ஊர் பக்க நாடகங்கள் இதெல்லாம் எப்படி இருக்கும்னு எந்த ஒரு ஐடியாவும் இல்லாமத்தான் இருந்தேன். கதை எழுதினதுக்கு அப்புறம், நிறைய மேடைநாடகங்களைப் பார்த்தேன். அவங்க அளவுக்கு இல்லைன்னாலும், இந்தக் காலத்து மக்களுக்குப் பிடிக்கிறா மாதிரி இருக்கும்னு நம்பினோம். நாங்க பண்றது நாடகம்தானான்னு தெரிஞ்சுக்க, பல நாடகக் கலைஞர்களைக் கூட்டிட்டு வந்து நடிச்சும் காமிச்சோம். அவங்க, `இது புதிய பரிணாமம்கொண்ட நாடகம்'னு சொன்னாங்க."

``பயிற்சி முறை எப்படி இருந்தது? எத்தனை நாள் பயிற்சி எடுத்துக்கிட்டீங்க?"

```உண்மையைச் சொல்லணும்னா எங்களுக்கு நாடகம் பண்றவங்க எப்படி பயிற்சி எடுத்துப்பாங்கனுலாம் தெரியாது.  எங்களுக்குத் தெரிஞ்ச வகையில நாங்க பயிற்சி செஞ்சோம். போன் யூஸ் பண்ணக் கூடாது, தூங்கக் கூடாதுனு இப்படி சில வழிமுறைகளையெல்லாம் பின்பற்றினோம். அப்படி ரூல்ஸை மீறினா, வயிறு வலிச்சுட்டே சாகணும், பாத்ரூம் போயிட்டே சாகணும்னு சில பனிஷ்மென்ட் கொடுத்துப்போம். கதை எழுத பத்து நாள், பயிற்சிக்கு 30 நாளுனு மொத்தம் 40 நாள் உழைப்பு இது."

``இனி தொடர்ந்து நாடகங்கள் பண்ற ஐடியா இருக்கா?"

``நிச்சயமா. சென்னையில வரும் வாரங்கள்ல தொடரும். மற்ற மாவட்டம், வெளிநாடுனு நிறைய பேரு, `இங்க உங்க நாடகம் போடுவீங்களா?'னு கேட்டுட்டிருக்காங்க. வெளியூர் வெளிநாடுகள்ல போடுற ப்ளான் இருக்கு. நலிவடைந்து இருக்கிற நாடகத் துறை மற்றும் நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்க, இது ஒரு சின்ன முயற்சி" என்று கூறி விடைபெற்றார் டூட் விக்கி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு