ஆபத்தில் இருக்கும் காதலிக்காக, தன் பாதுகாப்பு வளையம் தாண்டிப் பறக்கும் ஒரு பயணியின் கதை.

இன்ஜினீயரிங் ப்ளஸ் எம்.பி.ஏ பட்டதாரி சிம்பு. தனது பைக்கில் ஒரு ரோடு ட்ரிப் முடித்துவிட்டு வந்து, வாழ்வின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கலாம் என நினைக்கும்போது, தங்கையின் தோழியாக சிம்புவின் வீட்டுக்கே வந்துசேர்கிறார் மஞ்சிமா. வீட்டிலேயே இருவரும் பேசிப் பேசி நட்பை வளர்க்க, அது சிம்பு உடன் ரோடு ட்ரிப் போவது வரை நீள்கிறது. பயணம் முடியும் நேரத்தில் ஒரு பெரிய விபத்து நிகழ, படம் ஆக்ஷன் ட்ராக்குக்குத் தாவுகிறது. அது விபத்து அல்ல, மஞ்சிமாவைக் கொலை செய்ய நடந்தது என சிம்புவுக்குத் தெரியவர, துப்பாக்கி புல்லட்கள் கண்டபடி தெறிக்க, கொல்லத் துடிக்கும் எதிரிகளை என்ன செய்தார் சிம்பு என்பதே க்ளைமாக்ஸ்!

சிம்பு பார்க்கவும் ஸ்மார்ட்; நடிப்பும் ஸ்மார்ட். சின்னச் சின்ன ரியாக்ஷன்களில் கவர்கிறார். ஆனால், உடம்பு இளைக்கணும் ப்ரோ. மஞ்சிமா க்யூட், பப்ளி. நடிப்பில்தான் இன்னும் ப்ரீகேஜி பேபியாகவே இருக்கிறார். திகட்டத் திகட்ட லவ், திணறத் திணற ஆக்ஷனுக்கு நடுவில் கிச்சுகிச்சு ஆறுதலே சதீஷ்தான்.

கெளதம் மேனன் படங்கள் என்றாலே முதல் பாதி இசையும் காதலும்... இரண்டாம் பாதி ஆக்ஷனும் த்ரில்லும் என்ற சுவாரஸ்ய காம்போதான். ஆனால், அந்த மிக்ஸிங் இதில் மிஸ்ஸிங். மிரட்டல் காஸ்ட்டிங்கும் இல்லை; ஃபீல் குட் மேக்கிங்கும் இல்லை. என்ன ஆச்சு கெளதம்?

சுட்டுக்கொண்டே இருக்கிறார் சிம்பு. குண்டு தீர்வதே இல்லை. க்ளைமாக்ஸ் உள்பட எதிலுமே லாஜிக் இல்லை.

`அவளும் நானும்', `ராசாளி' என டெம்போவைக் கூட்டிக்கொண்டே சென்று `தள்ளிப்போகாதே'வில் முடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்களில் மட்டும் அல்லாது பின்னணி இசையிலும் ரஹ்மான் டச். தாமரையின் வரிகள் பாடல்களுக்கு மிகப்பெரிய பலம். எடிட்டர் அந்தோணியின் அன்யூஷுவல் யுத்தி, கதைக்கு அத்தனை கெத்து. விட்டு விட்டு ஷூட்டிங் நடத்தியதாலோ என்னவோ, பட்டும்படாமல் இருக்கிறது டான் மேஹார்தரின் ஒளிப்பதிவு.

புல்லட்தான்... ஆனால், 30 கி.மீ வேகத்தில் பயணித்ததுபோல் இருக்கிறது!

- விகடன் விமர்சனக் குழு