
சிம்பு ஜோக்ஸ்

``இந்த இடத்தில் சிங்கம் வாழும் என நினைக்கிறேன். சரியான வேட்டை! யாரங்கே... அந்த வில்லைக் கொடு!’’

யாரங்கே?
``ஆனாலும் நம்ம அரசர் அநியாய சோம்பேறி!’’

``சேவகர்களுக்கு எல்லாம் சரியாக ஊதியம் கொடுக்கிறீர்களா அமைச்சரே?
`யாரங்கே?' என குரல் கொடுத்தால், `யாரும் இல்லை' என பதில் குரல் வருகிறது!"

``அந்தப்புரத்தில் இருக்கும்போது `யாரங்கே?’னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்!’’

``கோபிக்கக் கூடாது அரசே! இனியாவது ரொம்பவும் சத்தம்போட்டு `யாரங்கே?' எனக் கூப்பிடாதீர்கள். பாருங்கள்... பக்கத்து நாட்டுச் சேவகனே வந்துவிட்டான்!’’

``ஆராய்ச்சி மணிதான்! முதல்ல பெரிய மணியாதான் இருந்தது. அர்த்தசாமத்துல அரசருக்கு தூக்கிவாரிப் போடுதுன்னுதான் மாத்திட்டாங்க..!''

``அரசர் இன்னும் விளையாட்டுத்தனமாவே இருக்கார்!’’

``சேனாதிபதியின் ஐடியா...
`புறமுதுகு காட்டி ஓடினோம்’னு யாரும் சொல்ல முடியாதாம்!’’

``இனிமே சுலபமா கழட்ட வர்ற மாதிரி கொஞ்சம் பெருசாவே கிரீடம் செய்யலாம் அரசே!’’

``எல்லாவற்றிலும் புரட்சி பண்ண வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் புரிகிறது மன்னா... அதற்காக!’’
