Published:Updated:

சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பிட்ஸ்

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

சினிமா பிட்ஸ்

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

Published:Updated:
சினிமா பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பிட்ஸ்
சினிமா பிட்ஸ்

‘மணமகளின் கண்டிஷன்!’

34 வருடங்கள் கழித்து `மணல் கயிறு’ படத்தின் பார்ட்-2 எடுக்கிறார்கள்.

``என் முதல் படம் ‘வேகம்’ எனக்கு நல்ல பேரு கொடுத்தது. ஆனா அடுத்த படம் சரியா போகலை. அடுத்தடுத்து சரியான ஸ்க்ரிப்ட் அமையலை. அப்ப என் அப்பா எஸ்.வி.சேகர், விசு சார் நடிச்ச
` `மணல் கயிறு' படத்தின் பார்ட்-2 பண்ணலாம்’னு ஐடியா கொடுத்தார். ஆமாம், இது ‘மணல் கயிறு’ படத்தின் தொடர்ச்சி’' - உற்சாகமாகப் பேசுகிறார் அஸ்வின் சேகர்.

‘ ‘மணல் கயிறு’ படத்தின் முதல் பாகத்தில் ஒரு பையன் தன் கல்யாணத்துக்கு நிறைய கண்டிஷன்கள் போடுவான். ஆனா, பார்ட்-2ல் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு கண்டிஷன் போடுவாங்க. இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன். ‘மணல் கயிறு’ முதல் பாகத்துல நடிச்ச விசு சார், எஸ்.வி.சேகர், குரியகோஸ் ரங்கா... எல்லாரும் அதே கேரக்டர்கள்ல நடிக்கிறாங்க. `யாருடா மகேஷ்' பட இயக்குநர் மதன்குமார் இயக்கியிருக்கார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ்தான் தயாரிக்குது. மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பாடல்களுக்கு தரன் இசையமைத்திருக்கார். இந்தப் படம் நிச்சயமா உங்களை என்டர்டெயின் பண்ணும்’’ என நம்பிக்கையோடு பேசுகிறார் அஸ்வின் சேகர். வேகமா ரிலீஸ் பண்ணுங்க!

சினிமா பிட்ஸ்

‘சஸ்பென்ஸ் சரண்யா!'

‘‘தனியார் பள்ளியையும் அரசுப் பள்ளியையும் வைத்து சமூகத்துக்கு சின்ன மெசெஜ் சொல்லியிருக்கோம். ஆனா, இதில் நான் ஒரு பிக்பாக்கெட்’’ கலகலவெனச் சிரிக்கிறார் விஜய் வசந்த். இயக்குநர் ராஜபாண்டி, தன் அண்ணன் வினோத்குமாருடன் இந்த முறை ‘அச்சமின்றி’ களமிறங்கி இருக்கிறார்.

‘‘பிக்பாக்கெட்டான எனக்கும், சிருஷ்டி டாங்கேவுக்கும், போலீஸ் ஆபீஸர் சமுத்திரக்கனிக்கும் இடையே நடக்கும் பிரச்னைகள்தான் கதை. ராதாரவி சார், சரண்யா பொன்வண்ணன் மேடமும் நடிக்கிறாங்க. சரண்யா மேடம்னாலே அம்மா கேரக்டர்னு ஃபிக்ஸ் பண்ணிடுறாங்க. ஆனா, இதில் அவங்க `அம்மா' கேரக்டர் பண்ணலை. என்ன கேரக்டர்ங்கிறது சஸ்பென்ஸ்! படத்துக்கு இசை நண்பன் பிரேம்ஜி. மொத்தம் அஞ்சு பாடல்கள். எல்லாமே செமயா இருக்கும். இயக்குநர் ராஜபாண்டி சார் சொன்னதைவிட படத்தை சூப்பரா எடுத்திருக்கார். ரெண்டு வாரங்களுக்கு மேல ஓடக்கூடிய நல்ல படமா இது இருக்கும்’’ என்கிறார் விஜய் வசந்த் - கலக்குங்க ப்ரோ!

சினிமா பிட்ஸ்

‘செம ஜாலி சினிமா’

‘‘ ‘நாளிதழ்கள்ல வரும் வித்தியாசமான செய்திகள்ல இருந்தே கதை பிடிச்சு ஸ்க்ரிப்ட் எழுதலாம்’ இது ஒருமுறை இயக்குநர் ஷங்கர் சொன்ன ஸ்டேட்மென்ட். அது என் மனசுல ஆழமா பதிந்திடுச்சு. அதில் இருந்து செய்தித் தாள்கள்ல எந்த வித்தியாசமான செய்தியைப் படிச்சாலும் குறிப்பு எடுத்துப்பேன். அப்படிப் படித்த மரகத நாணயம் பற்றிய உண்மைச் செய்திதான் இந்தக் கதையின் அடித்தளம். மரகத நாணயத்தை எடுக்க விரும்பும் இரண்டு குழுக்கள் அதற்காக என்ன மாதிரியான முயற்சிகள் பண்றாங்க என்பதை செம ஜாலியா சொல்லியிருக்கோம்’’ - அறிமுக இயக்குநர்

சினிமா பிட்ஸ்

ஏ.ஆர்.கே.சரவண் நம்பிக்கையாகப் பேசுகிறார்.


ஆதி, நிக்கி கல்ராணி, முனிஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் என அழகான டீமுடன் வருகிறார்.

‘‘ ‘முண்டாசுப்பட்டி’ ராம், ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார்னு இந்த இருவரால்தான் சினிமா இயக்கும் வாய்ப்பு வேகமா அமைஞ்சுது. நாங்க மூணு பேருமே திருப்பூர்வாசிகள். சினிமா பற்றிப் பேசிட்டே இருப்போம். அவங்க எப்படி வித்தியாசமான களத்துல படம் எடுத்தாங்களோ, அதே மாதிரி ‘மரகத நாணயம்’ வித்தியாசமான படமா இருக்கும்’’ - ஏ.ஆர்.கே.சரவணின் பேச்சில் நம்பிக்கை தெறிக்கிறது.

சினிமா பிட்ஸ்

‘கேங்ஸ்டர் படம்’

சினிமா பிட்ஸ்

‘‘எங்க அப்பா சிவாஜி ரசிகர். சிவாஜி நடிச்ச `கௌரவம்' படத்தில் ஒரு சிவாஜி கேரக்டரின் பேர் ரஜினிகாந்த். அதனால என் பெயரும் ரஜினிகாந்த் ஆகிடுச்சு’’ - பெயர்க் காரணம் கூறுகிறார் ‘மதம்’ இயக்குநர் ரஜினிகாந்த்.

``இது முழுமையான கேங்ஸ்டர் படம். ஆனா வழக்கமான கேங்ஸ்டர் படமா இருக்காது. பார்க்கும்போது, ‘இப்படி எல்லாம்கூட நடக்குதா?!’னு அதிர்ச்சி தரும் ஒரு விஷயத்தைப் பதிவு பண்ணியிருக்கேன். யானைக்கு மதம் பிடிப்பதுபோல மனுஷனுக்கு பிடிக்கும் மதத்தைக் குறிக்கும் வகையில், ‘மதம்’ எனத் தலைப்பு வைத்திருக்கிறேன். மற்றபடி இது எந்த மதத்தையும் ஆதரிக்கிற, எதிர்க்கிற படம் இல்லை.

ஹீரோ விஜய ஷங்கர், ஹீரோயின் ஸ்வாதிஷ்டா... எல்லோருமே புதுமுகங்கள். இந்தப் படத்துல 82 வயசு பாட்டி, முக்கியமான ரோல் பண்றாங்க. ‘கலாபக்காதலன்’, ‘ராமேஸ்வரம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த நிரூதான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆனா, படத்தில் பாட்டு எதுவும் இல்லை. பின்னணி இசை மட்டும்தான். ஒளிப்பதிவு, ப்ரியன் சாரின் உதவியாளரா இருந்த செந்தில். சீக்கிரமே வர்றோம்’’ - சூப்பர்ஸ்டார் ஸ்டைலிலேயே முடித்தார் ரஜினி.