Published:Updated:

‘எப்பவுமே நாங்க நண்பர்கள்!’ - திடீர் மீட்

‘எப்பவுமே நாங்க நண்பர்கள்!’ - திடீர் மீட்
பிரீமியம் ஸ்டோரி
‘எப்பவுமே நாங்க நண்பர்கள்!’ - திடீர் மீட்

பா.ஜான்ஸன்

‘எப்பவுமே நாங்க நண்பர்கள்!’ - திடீர் மீட்

பா.ஜான்ஸன்

Published:Updated:
‘எப்பவுமே நாங்க நண்பர்கள்!’ - திடீர் மீட்
பிரீமியம் ஸ்டோரி
‘எப்பவுமே நாங்க நண்பர்கள்!’ - திடீர் மீட்

சூப்பர் ஸ்டாருக்கு, சினிமாவில் இது 40-வது  ஆண்டு. ஃபிட்டாக இருந்த காலத்திலேயே இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு படம் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த ரஜினி,  இப்போது இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். டிமானிட்டைஸேஷன் சர்ச்சைகளையும் கடந்து சென்ற வாரம் ட்ரெண்டானது, ரஜினியின் `2.0' அறிமுக நிகழ்ச்சி. மும்பையில் நடந்த இந்த விழாவின் சில சுவாரஸ்யங்கள் இங்கே...

‘எப்பவுமே நாங்க நண்பர்கள்!’ - திடீர் மீட்

• மும்பை யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் நடந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர்.

• ``சிட்டியை நாம எல்லோருமே ஞாபகம் வெச்சிருப்போம். ஏன்னா, அது வேகமானது; எதையும் செய்யக்கூடியது. அப்புறம், அது பார்க்க நம்ம ரஜினி மாதிரியே இருக்கும். அதை உருவாக்கியது டாக்டர் வசீகரன். சிட்டி என்னுடைய `குச் குச் ஹோத்தா ஹே' பார்த்திருக்கும்னு நினைக்கிறேன். அதனால் சனாவுடன் லவ்ல விழுந்திருச்சு. கடைசியில் எல்லோரும் அழும்படி டிஸ்மேன்டில் பண்ண வெச்சுட்டாங்க. ஆனா, அது இப்போ இன்னும் பலமா மீண்டும் உருவாகி வந்திருக்கு'' - `2.0' பயணத்தை, தன் ஸ்டைலில் வர்ணித்தார் கரண்.

•   ``இது 3D-யில் கன்வெர்ட் பண்ணும் படம் அல்ல. படம் உருவாவதே 3D-யில்தான். இதில் வரும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னும் நிறைய உழைப்பு இருக்கு. எனக்கு இதுதான் முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்'' என ஆச்சர்யங்களை ஆரம்பித்துவைத்தார் படத்தின் கலை இயக்குநர் முத்துராஜ்.

• ``வழக்கமா படங்கள் பண்ணுவோம். ஆனால், இந்த முறை வரலாற்றையே உருவாக்கியிருக்கிறோம்'' என எழுத்தாளர் ஜெயமோகன் சொல்ல, ``தமிழில் எழுதப்பட்டிருக்கும் வசனங்களை எந்தவிதத்திலும் பாதிக்காத அளவுக்கு இந்தியில் எழுதியிருக்கிறேன்'' என்றார் இந்தி வெர்ஷன் `2.0'-வின் வசனகர்த்தா அப்பாஸ்.

• ``என்னுடைய சினிமா வாழ்க்கையே  `எந்திரன்'லதான் ஆரம்பமானது. ஷங்கர்கூட வேலைசெய்றது எப்போதுமே ஸ்பெஷல். `வழக்கமா மக்கள் என்ன சிந்திக்கிறாங்களோ, அந்த க்ளிஷேவுக்குள் போகாதீங்க. புதுசா யோசிங்க'னு கேட்டு வாங்குவார்'' என்றார் மதன் கார்க்கி.

• ` `2.0' படத்தின் நீளம் என்ன?' என்ற கரணின் கேள்விக்கு, `அதை இன்னும் முடிவுபண்ணலை' என்ற பதிலோடு மேடை ஏறினார் எடிட்டர் ஆண்டனி. `` `எந்திரனை'விட  இந்தப் படத்தை எடிட் பண்றது பத்து மடங்கு சவாலானது. ஆனா, மற்ற டெக்னீஷியன்ஸுடன் ஒப்பிடும்போது என் வேலை கொஞ்சம் சுலபம்தான். 3D கிளாஸ் போட்டுக்கிட்டு எடிட் பண்றது மட்டும்தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது'' என்றார்.

• ``ரஜினி சார், ஷங்கர் சார் எல்லாம் லெஜெண்ட்ஸ். ஆனாலும், ஷூட்டிங்ல ஒரு குடும்பமா இருந்தோம். டெக்னீஷியன்ஸ் எல்லாரும் இந்தப் படத்துக்காக ரொம்ப கஷ்டப்படுறாங்க. ஆனா, அவங்க அப்படி கஷ்டப்பட்டாதானே நான் ஸ்க்ரீன்ல அழகா இருப்பேன்'' எனச் சிரித்தார் ஏமி ஜாக்சன்.

• அடுத்ததாக ரஜினியை அழைத்தார் கரண் ஜோகர். ஆனால், வந்தது என்னவோ சிட்டிதான்.  ``சிட்டி, நீங்க ஃபாஸ்ட்னு தெரியும். ஆனா, இவ்வளோ ஃபாஸ்ட்னு இப்போதான் தெரியும்'' எனச் சொன்ன கரணிடம், ``நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல  கரெக்ட்டா வருவேன்'' எனத் தமிழிலும் இந்தியிலும் தன் மெட்டாலிக் வாய்ஸில் பேசியது சிட்டி ரோபோ.

``சரி உங்களைத்தான் போன பார்ட்லயே, பார்ட் பார்ட்டாப் பிரிச்சுட்டாங்களே, அப்புறம் எப்படி திரும்பவும் வந்தீங்க?''

``ஹா... ஹா... ஹா! என்ன யாராலயும் அழிக்க முடியாது'' என்றது சிட்டி ரோபோ.

`` `The world is not only for humans'னு சொல்றீங்களே, வேற யாருக்காக?'' என கரண் கேட்க, ``அவரைக் கேளுங்க'' என சிட்டி சொல்ல, பின்னால் இருந்து ரஜினி என்ட்ரி. கறுப்பு டிஷர்ட், கறுப்பு ஜீன்ஸ், சிம்பிள் கிளாஸ் என, கைகூப்பிக் கும்பிட்டபடி கரண் அருகில் வந்தார் ரஜினி. ``என்ன கரண், ஏன் சிட்டியை டிஸ்டர்ப் பண்றீங்க?'' என ரஜினி கேட்க, ``இல்லை சார்... படம் பற்றி ஏதாவது தெரிஞ்சுக்கலாம்னு...'' என கரண் சொன்னார். ``அதை இப்போ சொல்ல முடியாதே!'' எனச் சிரித்தார் ரஜினி.

• ``ஷங்கரை அவ்வளவு ஈஸியா திருப்திப்படுத்த முடியாது. இதுவரைக்கும் ஒரு பாட்டுதான் முடிச்சிருக்கோம். இன்னும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கு. ஆனா, ஒண்ணு மட்டும் உறுதி. இண்டியன் சினிமாகூட இல்லை, உலக சினிமாவிலேயே புதுசா ஒண்ணு செய்திருக்கார் ஷங்கர்'' எனப் பாராட்டினார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். 

•   ``இது முதல் பாகத்தைவிட பத்து மடங்கு சவால் அதிகம் உள்ள ஒரு படம். சாதாரணமாவே ஒரு படம் பண்றது எனக்கு எவரெஸ்ட் ஏறுவது மாதிரி. ஒவ்வொரு அடியா மெதுவா வெச்சு ஏறணும். ஆனா, `2.0' படத்தைப் பொறுத்தவரை எவரெஸ்ட்டையே என் தோள்ல வெச்சுக்கிட்டு ஒவ்வொரு அடியா பார்த்து ஏறுவது போன்ற விஷயம். இதுதான் படத்தில் எனக்கு ஸ்பெஷல் அனுபவம்'' என்றார் இயக்குநர் ஷங்கர்.

• ``நான் சினிமாவுக்கு வந்த 25 வருஷங்கள்ல எந்தப் படத்துக்கும் பெருசா மேக்கப் போட்டதே இல்லை. ஆனா, அந்த 25 வருஷங்களுக்கும் சேர்த்து ஒரே படத்தில் மேக்கப் போடவெச்சுட்டாங்க. அந்த மேக்கப் போட்டுக்கிறதுக்காக, மூன்று மணி நேரம் ஒரே சேர்ல உட்கார்ந்திருந்தேன். ஷூட்டிங் முடிஞ்சதும் அந்த மேக்கப்பை எடுக்க, ஒரு மணி நேரம் ஆகும். இந்தப் படம் மூலமா நான் என்ன கத்துக்கிட்டேனோ... இல்லையோ, பொறுமையை நிறையவே கத்துக்கிட்டேன். ஷங்கர் சார், என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி'' என்று படபடவெனப் பேசினார் அக்‌ஷய் குமார்.

‘எப்பவுமே நாங்க நண்பர்கள்!’ - திடீர் மீட்

• ``ஷங்கர்கூட வேலை பார்க்கிறதே சிரமம்தான். காரணம், அவர் பெர்ஃபெக்‌ஷனிஸ்ட். எவ்ளோ படங்கள் நடிச்சிருந்தாலும் இந்தப் படத்தில் நடிச்சது எனக்குப் புது அனுபவம். ஏன்னா, இது 3டி படம். ஸ்க்ரீன்ல என்னைப் பார்க்கும்போது வித்தியாசமா இருக்கு. இதில் நான் ஹீரோ இல்லை; அக்‌ஷய்தான் ஹீரோ. எனக்கு மட்டும் ஷங்கர் சாய்ஸ் கொடுத்திருந்தார்னா, அக்‌ஷய் கேரக்டரைத்தான் நான் செலெக்ட் பண்ணியிருப்பேன். அவர் எவ்வளவு பிரில்லியன்ட் ஆக்டர்னு படம் ரிலீஸ் ஆன பிறகு தெரியும்'' என சர்ப்ரைஸ் கொடுத்தார் ரஜினி.

•   `2.0' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸின் சிறப்பு விருந்தினர் சல்மான் கான். தமிழுக்கும் தெலுங்குக்கும் வித்தியாசம் தெரியாமல் கொஞ்சம் குழம்பி `ரஜினி காரு... ரஜினி காரு...' எனப் பேசினார். ``நான் ரஜினி காருவைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன். அவர் மேல் எனக்குப் பெரிய மரியாதை இருக்கு. 

ரஜினி காருவை ஒருமுறை விமானநிலையத்தில் பார்த்தேன். ரஜினி காரு சிகரெட்டைத் தூக்கிப் போட்டார். அந்த நேரம் காத்து பயங்கரமா வீசிட்டிருந்தது. மறுபடியும் பார்த்தேன், இன்னொரு சிகரெட்டைப் போட்டார். அது கரெக்ட்டா உதட்டுல வந்து உட்கார்ந்துச்சு. அவர் சிகரெட்டைத் தூக்கிப் போட்டாலே வாய்க்குத்தான் போகுது. என்னா ஸ்டைலு. செம ரஜினி காரு!'' என்ற சல்மான், ``ஷங்கர் எவ்வளவு பெரிய விஷயம் பண்றாரு... நீ என்னதான் பண்ற?'' என, கரணைச் சீண்ட, சிரித்தபடியே  ``வாங்க எல்லோரும் ஒரு குரூப் போட்டோ எடுத்துப்போம்'' என்று சீனை மாற்றினார் கரண்.

• ஒரு கிரகத்தில் வசிக்கும் ரோபோ, இன்னொரு கிரகத்துக்குள் நுழையும்போது அதன் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களும் சவால்களும்தான் `2.0' படத்தின் கதை. அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக வர இருக்கும் `2.0' படத்துக்கான எதிர்பார்ப்பு, இப்போது உலகம் முழுக்க எகிறியிருக்கிறது.

டாட்!

ஜினிக்கு 65 வயது; கமலுக்கு 62 வயது. ஆனால், சினிமாவில் ரஜினிக்கு மூத்தவர் கமல். ஆம், கமல்

50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருப்பவர். இருவரும், 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் களத்தில் இருக்கிறார்கள். இந்த நீண்ட நெடிய சினிமா பயணத்தில் இவர்கள் சந்திக்காத போராட்டங்கள், போட்டிகளே இல்லை. ஆனால், இவை அனைத்தையும் மீறி தொடர்ந்து அலைபேசியில் பேசுவது, நேரில் சந்தித்துக்கொள்வது என இவர்களின் பரஸ்பர நட்பு, மிகப்பெரிய ஆச்சர்யம்.

சிகிச்சை முடிந்து ‘2.0’ படப்பிடிப்பு, மும்பையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு என, பரபரப்பில் ரஜினி. விபத்தில் சிக்கி, சிகிச்சை முடிந்து ஓய்வு, ஜனவரியில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் கமல். கடந்த வாரம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் இவர்கள் திடீரெனச் சந்தித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட அந்தச் சந்திப்பில் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

‘என்ன விசேஷம்?’ என விசாரித்தால், ‘எப்பவுமே நாங்க நண்பர்கள். இரண்டு நண்பர்களுக்குள் நடந்த சந்திப்பில் என்ன ஸ்பெஷல் இருக்கப்போகிறது? நிறையப் பேசினோம். அவ்வளவுதான்’ என்கிறார்கள். தலைமுறைகளைத் தாண்டித் தொடரும் இந்த நட்பு, இன்னும் எதிர்பார்க்கவைக்கும் இவர்களின் திரைப்படங்கள்...  உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சர்யம்தான்!