Published:Updated:

“இசை மீதுதான் காதல்!”

“இசை மீதுதான் காதல்!”
பிரீமியம் ஸ்டோரி
“இசை மீதுதான் காதல்!”

வரவனை செந்தில், படம்: மீ.நீவேதன்

“இசை மீதுதான் காதல்!”

வரவனை செந்தில், படம்: மீ.நீவேதன்

Published:Updated:
“இசை மீதுதான் காதல்!”
பிரீமியம் ஸ்டோரி
“இசை மீதுதான் காதல்!”

`ஒ! அந்த நாட்கள்!' என்ற டைட்டிலோடு அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன். ``மற்ற மக்களுக்கு எப்படியோ, தமிழ் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த விஷயம்னா அது சினிமாதான். அந்த சினிமாவில் வந்த மனதுக்கு நெருக்கமான கேரக்டர்களை மறக்கவே மாட்டார்கள். அந்த ஒன்லைனைப் பிடிச்சு ஆரம்பிச்சதுதான் இந்தக் கதை'' - பாலவாக்கம் கடற்கரை ஓரம் வீடு... கடலைப் பார்த்தபடியே பேசுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

“இசை மீதுதான் காதல்!”

``ஒன்லைனே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே... கதையில் என்ன ஸ்பெஷல்?''

`` `ரெட்டைவால் குருவி'யில் வந்த ராதிகா கதாபாத்திரம், `சிந்துபைரவி'யில் வந்த சுஹாசினி கதாபாத்திரம், `மன்னன்' படத்தில் வந்த குஷ்பு கதாபாத்திரம், `மைக்கேல் மதன காம ராஜன்'ல் வந்த ஊர்வசி கதாபாத்திரம் என இந்த நான்கு கேரக்டர்களும் 35 வயதுக்கு மேற்பட்ட யாருக்குமே அப்படியே பசுமையா நினைவில் இருக்கும். இந்தக் கதாபாத்திரங்கள்தான் என் படம்.

`ஓ! அந்த நாட்கள்' கதைப்படி, நால்வரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அதை அந்தப் பள்ளியின் ஆண்டுவிழாவில் சந்திக்கும்போது தெரிந்துகொள்கிறார்கள். இவர்களில் ஒருவரான ராதிகா, ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர், மற்ற மூவரையும் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்கிறார். அதன் பிறகு இவர்களின் வாழ்க்கையில் நாம் பார்க்காதப் பக்கங்களைப் பார்க்கிறோம். கதை இப்படித்தான் போகிறது என்பதை வெளிப்படையாகச் சொல்ல காரணம், உள்ளே இன்னும் ரொம்பத் தெளிவாக ஸ்க்ரிப்ட் செய்திருக்கிறேன் என்பதுதான்.''

``இந்த கேரக்டர்கள் எல்லாம் ரொம்பப் பழசாச்சே! இன்றைய இளைஞர்களுக்குப் புரியுமா?''

``30 வயதுக்கு மேற்பட்டவங்களுக்கு, இந்தப் படம் செம நாஸ்டாலஜியைக் கிளப்பும். நமக்கு ரொம்பப் பிடிச்ச யாரையோ நினைச்சுப்பார்க்கும்போது மனசுக்குள் அவங்க போட்டிருந்த பவுடரோ, பெர்ஃபியூமோ அல்லது அவர்களின் வியர்வை மணமோ உணர்வோம் இல்லையா! அப்படி ஒரு உணர்வை இந்தப் படம் கொடுக்கும். அதைத் தாண்டி இளைஞர்களுக்குப் பிடிக்கிற அளவுக்கு ஒரு பப்ளியான `பெப்பி லவ்' படத்தில் இருக்கு. அதை அவங்க நிச்சயம் கொண்டாடுவாங்க.''

“இசை மீதுதான் காதல்!”

``ராதிகா, ஊர்வசி இரண்டு பேரும் இன்னும் ஃபீல்டில் ஆக்ட்டிவா இருக்காங்க. சுஹாசினி, குஷ்பு எல்லாம் நடிச்சு ரொம்ப நாள் ஆச்சு. எப்படிச் சம்மதிக்கவைத்தீர்கள்?''

``சுஹாசினியிடம் இப்படி ஒரு கதை பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னேன். முழுசா கேட்டுட்டு `ரொம்ப நல்லாயிருக்கு. புரொடியூஸர் கிடைப்பாங்களா? ஏன்னா, ஹீரோ வேல்யுவே இல்லாம இருக்கே'னு சிரிச்சாங்க. `அதைப் பத்தி நான் பார்த்துக்கிறேன்'னு சொன்னவுடன், `சரி, எனக்கு ஓ.கே. மத்தவங்க சம்மதம் வாங்கிட்டு வாங்க'னு சொல்லிட்டாங்க. குஷ்புவைச் சம்மதிக்கவைக்கத்தான் ரொம்ப கஷ்டமாகிடுச்சு. கடைசியா, கமல் சாரும் சுந்தர்.சியும்தான் ஹெல்ப் பண்ணாங்க.''

``டி.வி., இசையமைப்பாளர், இயக்குநர்னு உங்க வேலைகளை அதிகப்படுத்திக்கிட்டே போறீங்களே?''

``ஓடுற தெம்பு இருக்கிறவரைக்கும் ஓடுவோம்கிற தைரியம்தான். டி.வி எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. `ஒரு வார்த்தை ஒரு லட்சம்' உலகம் முழுக்கவே நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களிடையேயும் பெற்றோரிடையேயும் மதிக்கப்படுவது பெருமையான விஷயம்தான்.

“இசை மீதுதான் காதல்!”

``இசையமைப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டதா?''

``நிச்சயமா கிடையாது. என் முதல் காதல் இசை மீதுதான். அதை எந்த நிலையிலும் என்னால் விட்டு விலக முடியாது. பட டைரக்‌ஷன் மீது கல்லூரி நாட்களில் இருந்தே ஒருவித ஈர்ப்பு இருந்தது. 15 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளேன். ஆனால், நான் படம் பண்ணுவது இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம், தேர்ந்தெடுத்துச் செய்யாததுதான். இனி `சுப்ரமணியபுரம்', `பசங்க' மாதிரியான படங்களுக்கு இசையமைப்பது என முடிவெடுத்துள்ளேன்.''

``உங்க வீட்டில் உங்களின் எந்த ரோலை விரும்புகிறார்கள்?''

``நேற்று ஒரு சம்பவம். மாடியில் இருந்து என் மனைவி போனை எடுத்துக்கொண்டு ஓடிவந்தார். அதில் `பசங்க' படத்தில் `அன்பாலே அழகாகும் வீடு...' பாடல் எஃப்.எம்-மில் ஒலித்துக்கொண்டிருந்தது. `டைரக்‌ஷன் உங்களுக்கு பேஷனா இருக்கலாம். இந்த `ஜேம்ஸ்' மீதுதான் எங்களுக்கு பேஷன்' எனச் சொன்னார். அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்தப் படத்தின் மூன்று பாடல்களுமே இருக்கும்.''