Published:Updated:

"பாலிவுட் நிறைய மாறிடுச்சு!”

"பாலிவுட் நிறைய மாறிடுச்சு!”
பிரீமியம் ஸ்டோரி
"பாலிவுட் நிறைய மாறிடுச்சு!”

ஆர்.வைதேகி

"பாலிவுட் நிறைய மாறிடுச்சு!”

ஆர்.வைதேகி

Published:Updated:
"பாலிவுட் நிறைய மாறிடுச்சு!”
பிரீமியம் ஸ்டோரி
"பாலிவுட் நிறைய மாறிடுச்சு!”

`ஆடுகளம்' படத்தில் அறிமுகமானபோது சந்தித்த டாப்ஸி அல்ல இவர் என்பதை, பேசத் தொடங்கிய இரண்டே நிமிடங்களில் புரிந்துகொள்ள முடிந்தது.

"பாலிவுட் நிறைய மாறிடுச்சு!”

`பிங்க்' திரைப்படத்தின் வெற்றி, பாலிவுட்டில் இவருக்கு அழகான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. அமிதாப்பே பாராட்டித்தள்ளும் அளவுக்கு டாப்ஸியின் நடிப்பு பேசப்படுகிறது. `இனி மும்பைதான்' என முடிவோடு இருக்கிறார். பேச்சில் அனல் பறக்கிறது.

``பாலிவுட்லயே படங்கள் பண்ணிட்டு இருக்கீங்களே... தமிழுக்கு வர்ற ஐடியா இல்லையா?''


``அப்படிச் சொல்ல முடியாது. எனக்குனு ஒரு வழியை பாலிவுட்டில் தேடிக்கிட்டேன். எனக்கு அங்கே நிறைய வேலைகளும் வாய்ப்புகளும் இருக்கு. தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிகள்ல எடுக்கிற `காஸி' படத்துல சிறப்பு தோற்றத்தில் நடிச்சிருக்கேன். `பேபி'யோட சீக்வெல் பண்றேன். `நாம் ஷபானா'னு ஒரு படத்துல முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அப்புறம் `ஜுட்வா 2' பண்றேன்.''

`` `பிங்க்' பட அனுபவம் எப்படி?''


“ `இதில் நீ நடிக்க வேணாம்... நீ, நீயா இருந்தா போதும். இந்த கேரக்டருக்கு அதுதான் தேவை'னு சொன்னாங்க. படத்தில் நான் ஒரு டெல்லிப் பொண்ணு. அந்தக் கதைக்குப் பொருத்தமா இருப்பேன்னுதான் என்னைத் தேர்ந்தெடுத்தாங்க.
 
`மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணா நடிக்கப்போறோம்'னு படப்பிடிப்பு  ஆரம்பிக்கிறதுக்கு பல நாட்கள் முன்னாடியே மனசு அளவுல என்னைத் தயார்படுத்திக்கிட்டேன். அது பெரிய சவாலும்கூட. நான் நிஜமாவே அந்த மாதிரி அனுபவத்துக்குள்ளானவளா இருந்தா எப்படியிருக்கும்னு தினம் தினம் நினைச்சுப் பார்ப்பேன்.

பெண்கள் மானபங்கப்படுத்தப்படுற வழக்குகள் நீதிமன்றத்துல எப்படிக் கையாளப்படும்னு எனக்கு சில வீடியோக்கள் போட்டுக் காட்டினாங்க. அந்தக் கேரக்டருக்குள்ளேயே போனா மட்டும்தான் அந்த வலியை உணர முடியும். இயல்பிலேயே நான் ரொம்ப சந்தோஷமான பொண்ணு. அழுகைக்கும் எனக்கும் ரொம்பத் தூரம்.  ஆனா, படத்துல மினல் கேரக்டர் அழும் காட்சிகளில் கிளிசரின் இல்லாம நடிச்சேன். மினல் எனக்குள் உருவாக்கிய தாக்கம் அப்படி.''

``நீங்கள் பொறியியல் படிப்பை முடித்தவர், இப்போ நடிகை. இன்னொரு பக்கம் `வெட்டிங் ஃபேக்டரி'னு ஒரு நிறுவனத்தை நடத்துறீங்க. உங்க திட்டம்தான் என்ன?''


``சினிமாவோடு கொஞ்சமும் சம்பந்தமே  இல்லாத ஏதாவது ஒரு விஷயம் பண்ணணும்னு நினைச்சேன். என் வாழ்க்கையையே சினிமாவுக்கு அர்ப்பணிக்க முடியாது. அதைத் தாண்டியும் எனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. என் தோழி இதே பிசினஸ்ல இருந்தாங்க. அவங்க சொந்தமா ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவுபண்ணப்போ, அதுல நான் பார்ட்னர் ஆகிட்டேன். என் தங்கை ஷகுனுக்கும் இதே விஷயத்தில் ஆர்வம் இருந்தது. மூணு பேரும் சேர்ந்து வெட்டிங் ஃபேக்டரியை ஆரம்பிச்சுட்டோம்.''

``தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிப்படங்கள்லயும் வேலை செஞ்சிருக்கீங்க. சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கிறதா நினைக்கிறீங்களா?''


``ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரியும் அப்படித்தான் இருக்கு. ஏன் இப்படி இருக்குனு ஆரம்ப காலத்துல வருத்தப்பட்டிருக்கேன். ஆனா, `அந்த வருத்தம் எந்த வகையிலயும் யாரையும் பாதிக்கப்போறது இல்லைனு உணர்ந்தேன். இந்த நிலைமையை மாற்ற, நம்மால என்ன பண்ண முடியுமோ அதைப் பண்ணணும்னு நினைக்கிறேன். இந்தி சினிமாவுல நிறையவே மாற்றங்கள் வந்திருக்கு. மாசத்துல ஒரு படமாவது பெண்களை மையப்படுத்தின கதையோடு வருது. இந்தியில் உள்ள எல்லா முன்னணி நடிகைகளும் இந்த மாதிரிக் கதைகள் பண்றாங்க. இது நல்ல மாற்றம்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!